English (UK)SinhalaSriLankaTamilIndia


எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு முழு நாட்டிற்கும் உணவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.அமைச்சர் மஹிந்தானந்தஅவர்கள் உறுதியளிக்கின்றார்கள்

Agri Image 01

பெரும்போகத்தில் 3 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அரசாங்கத்திற்கு கொள்வனவு செய்வதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கமத்தொழில்

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அம்பாறை அக்கறைப்பற்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் களஞ்சிய கட்டிடத் தொகுதியில்

இந்த நிகழ்ச்சித் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

உலர்ந்த ஒரு கிலோ சம்பா நெல்லை ரூ.52.00 உத்தரவாத விலையிலும்மற்றும் உலர்ந்த ஒரு கிலோ நாடு நெல்லை ரூ .50.00 உத்தரவாத விலையிலும்

கொள்வனவு செய்யும் பொருட்டுஅரசாங்கம்உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. பெரும்போகத்தில் ஹெக்டேயர் ஒன்றுக்கு அதிகளவு காணிகளில் நெல்லை பயிரிட்டுள்ளதும்மற்றும்உர மானியத்தை

பெறுகின்றதுமானநாடு முழுதிலுமுள்ள விவசாயிகளிடம் இருந்துநெல்லை கொள்வனவு செய்வதற்காக இந்த நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹெக்டேயர் ஒன்றுக்கு1000 கிலோ கிராம்என்ற

அளவில் விவசாயிகள் தமது நெல்லை, நெல் சந்தைப்படுத்தல்சபைக்கு கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும்.

 

கமநல அபிவிருத்தி திணைக்களம், நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் அரசாங்கத்தின் 9 நிறுவனங்கள் என்பவற்றை ஒருங்கிணைத்து நெல்லை கொள்வனவு செய்யும் தேசிய செயல் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. ஏற்கெனவே அம்பாறை மற்றும் மொனராகல் ஆகிய மாவட்டங்களில் நெல் அறுவடை செய்யும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் மாதத்தினுள் நாடு முழுதிலும் நெல் அறுவடைகள் மேற்கொள்ளப்படும். ஆகையால், முழு நாடும் உள்ளடங்கக் கூடிய வகையிலான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை கமத்தொழில் அமைச்சு செயற்படுத்தியுள்ளது. நெல்லை கொள்வனவு செய்யும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர்களினதும் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர்களினதும் நேரடி கண்காணிப்பில் குறித்த இந்த நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. ஈரமான நெல்லை கொள்வனவு செய்வதற்கும் தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, பொதியிடும் உறைகளை அரசாங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க தேவையான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. நெல்லை கொள்வனவு செய்யும் இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்து கருத்து தெரிவித்த வேளையில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் “கொவிட் கொள்ளை நோய் இருப்பதால் அக்கறைப்பற்றுக்கு செல்ல வேண்டாம் என எமக்கு கூறப்பட்டது. ஆயினும் விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் மற்றும்அவர்களுக்கு தைரியம் ஊட்டவும் அதே போல் விவசாயிகளுக்கு மதிப்பளிக்கவும் என அந்த சவால்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு இன்று நாம் அக்கறைப்பற்றுக்கு வந்துள்ளோம். நாடு முழுதும் வாழுகின்ற விவசாயிகளிடம் நாம் கேட்டுக் கொள்வது,இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு பங்களிப்பு செய்யுமாறுதான். உலர்ந்த நெல்லை மாத்திரமன்றி ஈரமான நெல்லையும் கூட கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னைய ஆண்டு காலப் பகுதியில் ரூ.32.00 விலையில்விவசாயிகளினால் தமது நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை. நாம் உலர்ந்த ஒரு கிலோ கிராம் சம்பா நெல்லை ரூ.52.00 விலையிலும் மற்றும் ஒரு கிலோ கிராம் நாடு நெல்லை ரூ.50.00 விலையிலும் கொள்வனவு செய்ய உத்தரவாத விலைகளை நிர்ணயித்துள்ளோம். அரசாங்கத்தின் வசமிருக்கின்ற நெல் களஞ்சிய வசதிகளின் ஊடாக நெல் மாஃபியாவுக்கு முடிவுகட்டுவது எமது நோக்கமாகும். ஒரு அரசாங்கம் என்ற வகையில் விவசாயிகளையும் மற்றும் நுகர்வோரையும் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். நாம் அந்த பொறுப்பையே தற்பொழுது நிறைவேற்றி வருகின்றோம். நாம் விவசாயிகளின் பக்கம் இருக்கின்றோம். விவசாயிகளின் கஷ்ட துன்பங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு நாம் உதவுகின்றோம். நாமே பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கின்றோம். ஆகையால், அதிக இலாபத்தை ஈட்டுகின்ற ஒரு சில முதலாளிமார்களுக்கு தேவையான விதத்தில் அரிசியின் விலையை கட்டுப்படுத்தி நிர்ணயிப்பதற்கு இடமளிக்க மாட்டோம். நான் நம்புகின்றேன் 03 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லை மாத்திரமல்ல இருக்கின்ற நெல் களஞ்சியசாலைகள் நிரம்பி வழியும் அளவுக்கு விவசாயிகள் நெல்லை தருவார்கள் என்று. கொவிட் நிலவரமாக இருந்தாலென்ன அல்லது எதிர்காலத்தில் முகம்கொடுக்கக் கூடிய எத்தகைய சவால்களாக இருந்தாலென்ன அவற்றுக்கு எல்லாம் வெற்றிகரமாக முகம்கொடுத்து மக்களுக்கு உண்ண உணவுகளை வழங்க எமது அரசாங்கம் தயாராகவுள்ளது. அதனால்தான் நாம் இந்த நெல் களஞ்சிய இருப்பை பேணிச் செல்கின்றோம். நாம் உரங்களை வழங்குகின்றோம், நீரையும் பெற்றுக் கொடுக்கின்றோம், அது மட்டுமன்றி தேவையான விதைகளையும் விவசாயிகளுக்கு வழங்குகின்றோம், உத்தரவாத விலையில் நாம் நெல்லையும் கொள்வனவு செய்கின்றோம். ஆகையால், எம்முடன் இணைந்து தேசத்திற்கான கடமையை நிறைவேற்றுமாறு சகல விவசாயிகளிடமும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்” என கூறினார்கள்.

 

இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அவர்கள், “9 அரச நிறுவனங்களுக்கும் அதிக எண்ணிக்கையான நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இரண்டு மாத காலங்களாக பேச்சுவார்த்தை நடத்தி பல கலந்துரையாடல்களை நடத்திய பின்னர் நாம் இவ்விடத்திற்கு இந்த நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டு வந்தோம். நெல்லை கொள்வனவு செய்வதுடன் நாம் இதனை நிறுத்திக் கொள்ள போவதில்லை. நெல்லை குற்றி அரிசியாக்கி சதொச மற்றும் கூட்டுறவு சங்க கடைகள் முதலிய நிறுவன வலையமைப்பின் ஊடாக நியாய விலையில் அரிசியை பெற்றுக் கொடுப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம். இந்தத் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்த அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் அதிக எண்ணற்ற உதவி ஒத்தாசைகளை எமக்கு நல்கினார்கள். அரசாங்கம் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையையே நாம் செய்கின்றோம். நெல்லை கொள்வனவு செய்வது போலும், அரிசியை நியாய விலையில் பெற்றுக் கொடுப்பது போலும் உரங்களை நிவாரண அடிப்படையில் படிப்படியாக பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நாம் நடவடிக்கை எடுப்போம். நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் மாபெரும் பொறுப்பை நிறைவேற்றுவது இந்த நாட்டு விவசாயிகள். விவசாயிகளையும் மற்றும் நுகர்வோரையும் பாதுகாப்பது எமது இந்த தேசிய கரும பணியின் குறிக்கோளாகும் என கூறினார்கள்.

 

இந்த தடவை பெரும்போகத்தில் ஆறு இலட்சத்து அறுபத்து எட்டு ஆயிரத்து நான்கு நூறு ஹெக்டேயர்கள் காணிகளில் நாடு முழுதிலும் நெல் பயிரிடப்பட்டுள்ளது. எதிர்பார்த்த நெல் விளைச்சல் அண்ணளவாக இருபத்து எட்டு இலட்சம் மெற்றிக் டொன்களாகும். அதில் மூன்று இலட்சம் மெற்றிக் டொன் நெல்லை அரசாங்கத்திற்கு இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு தேவையான நெல் களஞ்சியசாலைகள் அனைத்தும் இராணுவத்தினரின் உதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படாத வகையிலும் அதே போல் எந்தவித அநியாயமும் இழைக்கப்படாத வகையிலும் நெல்லை கொள்வனவு செய்யும் இந்த தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை நாடு முழுதிலும் செயற்படுத்துவதற்கு செயன்முறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள், அம்பாறை மாவட்ட செயலாளர், நெல் சந்தைப்படுத்தல் சபையின் தவிசாளர் அடங்கலாக பல அரச அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சித் திட்ட அங்குரார்ப்பண வைபத்தில் கலந்து கொண்டனர்.

 

 

சுஜித் விதாணபத்திரன

கௌரவ அமைச்சரின் ஊடக செய 

 

Agri Image 03  Agri Image 04

Agri Image 02

 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 19:51

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்