English (UK)SinhalaSriLankaTamilIndia


அமைச்சர் மஹிந்தானந்த அவர்கள் விவசாயத் துறையில் உள்ள5வகையான மாஃபியாக்களை வெளிப்படுத்துகின்றார்கள்

07.

vபயிரிடுவதை விடவும் நெல் வயல்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் அமைச்சுக்கு அதிகளவில் கிடைக்கின்றன.

vஇரசாயன உரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதால் மாதத்திற்கு 30 கண் பார்வையற்ற குழந்தைகள் பிறக்கின்றன. புற்றுநோய் நோயாளிகளினதும் மற்றும் சிறுநீரக நோயாளிகளினதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

vகமிஷன்கள் இருப்பதால் உரங்களை இறக்குமதி செய்வதில் அதிக ஆர்வம் காட்டப்படுகின்றது.

vஉற்பத்தியை விட உணவு இறக்குமதியை ஊக்குவிப்பவர்கள் அதிகம்.

vஆராய்ச்சியும் மற்றும் தொழில் நுட்பமும் இங்கிலாந்தை விடவும் மிக அதிகளவில் மேம்பட்டிருந்தாலும் கூட, விவசாயிகள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அதிக காலம் பழமை வாய்ந்த விவசாயத்திலேயே தங்கியிருக்கின்றனர்.

 

விவசாய துறையில் ஐந்து மாஃபியாக்கள் இருந்து வருவதாகவும்மற்றும் அவை இறக்குமதி பொருளாதாரத்திற்கு பதிலாக உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு தடையாக அமைவதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கூறினார்கள். கமத்தொழில் அமைச்சர் அவர்கள், பத்தலகொடவில் அமைந்திருக்கும் நெல் ஆராய்ச்சி நிறுவகத்தில் நடைபெற்ற விவசாய ஆலோசகர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி வேலையரங்கில்கலந்து கொண்ட வேளையில்​​நெல், அரிசி, காய்கறிகள், விதைகள் மற்றும் உரங்கள் போன்ற பெரிய அளவான மாஃபியாக்கள் நாட்டின் விவசாயத்தின் எதிர்காலத்தை முற்றிலும் அழித்து வருவதாக தெரிவித்தார்கள்.

 

பல ஆண்டுகளாக நடைபெறாத உத்தியோகத்தர்களின் அறிவையும் மற்றும் தொழில்நுட்பத்தையும் போஷிக்கின்றநாடளாவிய பயிற்சி வேலையரங்கு தொடர்கள் நேற்று (2021.01.04) 05 இடங்களில் ஆரம்பிக்கப்பட்டன. பத்தலகொட, அங்குணுகொலபெலஸ்ஸ, புளியங்குளம், மகாஇலுப்பள்ளம், பிந்துனுவெவ ஆகிய விவசாய பயிற்சி கல்லூரிகளில் பயிற்சி வேலையரங்குகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொருநிலையத்திலும், 250 விவசாய ஆலோசகர்கள் வீதம் முதல் கட்டத்தின் கீழ் நாடு முழுதும் உள்ளடங்கும் வகையில் பயிற்சி வழங்கப்படும்.மேலும் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக 600 கமநல சேவை உத்தியோகத்தர்களையும் மற்றும் 9000 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களையும் பயிற்சிக்குஅனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் 25 நாள் வதிவிட பயிற்சி நிகழ்ச்த்தித் திட்டம் ஒன்றை பெற்று கொடுக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

நவீனதொழில்நுட்பத்தைபயன்படுத்திமேட்டுநிலப்பயிர்கள், நெல், பழப்பயிர்கள்அடங்கலாகபயிர்களைபயிரிடுதல், தாவரங்கள்தொற்றுநீக்கல்சட்டம், கிருமிநாசினிகள்கட்டுப்பாட்டுசட்டம்என்பனஅடங்கலாகசட்டங்கள்மற்றும்கட்டளைசட்டங்கள்அதேபோல்டிஜிட்டல்தொழில்நுட்பம்என்பனதொடர்பானவிஷேடஅறிவைபயிற்சிவேலையரங்கின்போதுவழங்கநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இந்தவேலையரங்கில்இருந்துபெற்றுக்கொள்ளும்அறிவைவிவசாயஆலோசகர்கள், விவசாயஆராய்ச்சிஉற்பத்திஉதவியாளர்கள்ஆகியோரின்ஊடாகவிவசாயிகளைசென்றடையச்செய்வதுஇதன்முக்கியகுறிக்கோளாகும்.

 

பயிற்சி வேலையரங்கின் போது கருத்து தெரிவித்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள், சௌபாக்கியதூரநோக்கில்விவசாயத்திற்குஒருவிஷேடநிலைவழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிஅவர்களின்நோக்கம்இந்தநாட்டிற்குஉற்பத்திசார்ந்தபொருளாதாரத்தைஏற்படுத்திஇறக்குமதிசார்ந்தபொருளாதாரத்தைமுற்றிலும்நிறுத்துவது. 40%வீதமான மக்கள் நேரடியாக இந்த நாட்டு விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். 30%வீதமான மக்கள் மறைமுகமாக விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். கொவிட் தொற்றுநோய் நிலவரம் ஏற்பட்டதில் இருந்து இன்று நாட்டில் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் 75%வீதமான மக்கள் விவசாயத்தில் ஈடுபடுவதாக பதிவாகுகின்றது. ஆகையால் தான் தொழில் நுட்பத்தின் மூலம் விவசாயிகளை போஷிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டின் விவசாய தொழில் நுட்பமும் மற்றும் விவசாய ஆராய்ச்சியும் இங்கிலாந்து நாட்டின் அளவுக்கு சமனாக காணப்படுகின்றன. எனினும் விவசாயிகள் இன்னும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய விவசாயத்திலேயே தங்கியிருக்கின்றனர். அறிவும் மற்றும் தொழில் நுட்பமும் கிராமங்களை சென்றடைவதில்லை. விவசாய ஆலோசகருக்கு கமநல சேவை நிலையத்தில் சரியான பொருத்தமான இடவசதி கிடைப்பதில்லை. விவசாய ஆலோசகர்கள், கமநல உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வேலை செய்வதில்லை. விவசாயிகளுக்கு அறிவு சென்றடைவதில்லை. ஆகையால் நாம் மத்திய அரசாங்கம், மாகாண சபைகள், ஏனைய உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து வேலை செய்வதற்கு தேவையான ஒருங்கிணைப்பு சார்ந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த பயிற்சியின் மூலமும் இதுதான் செய்யப்படுகின்றது. இந்த நாட்டின் விவசாய துறையில் 05 மாஃபியாக்கள் செயற்படுகின்றன. நியுஸ்லாந்தினது பால் உற்பத்திகளை இறக்குமதி செய்வதில் இரண்டாவது கொள்வனவு நாடாக விளங்குவது இலங்கை. கரிம உரங்களை விடவும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் போது கமிஷன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. நாட்டின் விதைகள் தேவையில் அதிகளவு இன்னும் இறக்குமதி செய்யப்படுகின்றது. 100%வீதமான செத்தல் மிளகாய்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் மூலமாக அதிக அளவு கமிஷன்கள் கிடைப்பதால் உற்பத்தி செய்வதை விடவும் இறக்குமதி செய்ய அதிகமானோர் ஆர்வர் காட்டுகின்றனர். யூரியா உர பாவனை நுரைச்சோலையில் அதிகரித்து வருவதால் நீல நிற குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு மாதத்திற்கு கண் பார்வையற்ற 30குழந்தைகள் பிறப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரக நோயாளிகளினதும்மற்றும் புற்றுநோய் நோயாளிகளினதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆயினும் இரசாயன உரங்கள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு காலப் பகுதியில் 55 ஆய்வுகூட அறிக்கைகளை திரிவடையச் செய்து 1.5பில்லியன் பெறுமதியான தரமற்ற உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கையில் இருந்து வெளியாகியுள்ளது. இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டு அந்த அறிக்கைகளை அவ்வாறு திரிவடையச் செய்த 7பேர்களையும் நான் சேவையிலிருந்து இடைநிறுத்தி வீட்டிற்கு அனுப்பினேன். உர கூட்டுத் தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. நச்சுத் தன்மை வாய்ந்த உணவுகளை உண்ணக் கொடுத்து வேண்டுமென்றே அறிந்து மக்களை கொல்லும் நாடாக இந்த நாடு மாறியுள்ளது. ஆகையால், இம்முறை தேவையான மண் பரிசோதனகைள மேற்கொண்டு அத்தகைய பரிசோதனைகளின் பிரகாரம் உரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும். அந்த பரிசோதனைக்கு தேவையான பரிசோதனை உபரகண பொதிகளை ஒவ்வொரு கமநல சேவை நிலையத்திற்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அவரது காணியின் மண்ணை பரிசோதித்து நாம் அறிக்கையை வழங்குவோம். செய்து கொடுக்கக் கூடிய அறிவு, வசதிகள், ஏற்பாடுகள் எல்லாவற்றையும் நாம் செய்து கொடுப்போம். கிராமங்களுக்கு தொழில் நுட்பம் சென்றடைய கூடிய வகையில் அதிகாரவாதத்தையும், இழுபறியையும், இனவாதத்தையும்மற்றும்தராதர வேறுபாட்டையும் மறந்து விவசாயிகளை அறிவையும் மற்றும் தொழில் நுட்பத்தையும் கொண்டு போஷிக்க ஒரு குடும்பம் போல் அனைவரும் வேலை செய்ய வேண்டும்எனகமத்தொழில் அமைச்சர்அவர்கள்,குறித்தபயிற்சிவேலையரங்கில்கலந்துகொண்டிருந்தவிவசாயஆலோசகர்கள்மத்தியில்கூறினார்கள். விவசாயதிணைக்களத்தின்பணிப்பாளர்நாயகம்டப்ளியூ.எம்.டப்ளியூ. வீரகோன்அவர்கள்அடங்கலாகஅமைச்சின்அதிகாரிகள்பலரும்இந்தவேலையரங்குஅங்குரார்ப்பணம்செய்துவைக்கப்பட்டநிகழ்வில்கலந்துசிறப்பித்தனர்.

 

01.  16.

02.  09.

 voice Recording


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 06 ஜனவரி 2021 09:43

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்