English (UK)SinhalaSriLankaTamilIndia


கமநல சேவை நிலையங்கள் மட்டத்தில் விவசாய உற்பத்தி நிறுவனங்களை தாபித்து நாடு முழுதிலும் விவசாய தொழில் முயற்சியாளர் பரம்பரையை உருவாக்குதல்

AGC-MEDIA-NEWS-01.

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்மகே அவர்கள் பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்கள்.

 

  • வெளிநாட்டு உதவி விவசாய கருத் திட்டங்களை வெளிப்படையான முறையில் மேற்கொள்ளுங்கள்
  • கஷ்டமான பிரதேசங்கள் போலவே வறுமையையும் உதவி வழங்குவதற்கு அடிப்படையாக கொள்ளுங்கள்
  • ஒரே இடத்தில் சகல உதவிகளையும் வழங்காமல் நாடு முழுவதும் நியாயமான முறையில் உதவிகைள பகிர்ந்தளியுங்கள்
  • சகல கருத் திட்டங்களுக்கும் அரசாங்கத்தின் தலையீடு, அதன் ஒருங்கிணைப்பு, அரசாங்கத்தை விழிப்பூட்டுதல் ஆகிய கட்டாய விடயங்களை மேற்கொள்ளுங்கள்
  • கருத் திட்டங்களுக்கு கமக்காரர் அமைப்புகள் மற்றும் குள சங்கங்கள் என்பவற்றை பயன்படுத்தி பணத்தை விவசாயிகளிடம் சென்றடையச் செய்யுங்கள்

 

கமத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வெளிநாட்டு உதவி கருத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் என்பவற்றின் முன்னேற்றம் மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான வேலைத் திட்டம் என்பன பற்றிய ஒரு விஷேட கலந்துரையாடல் கமத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது. குறித்த இந்த கலந்துரையாடல் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்றது. குறித்த இந்த கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் திரு சுமேத பெரேரா அவர்கள் அடங்கலாக அமைச்சின் உயர் அதிகாரிகளும் மற்றும் வெளிநாட்டு உதவி கருத் திட்டங்கள் தலைவர்களும் மற்றும் ஏனைய அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

வெளிநாட்டு உதவி கருத் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்கள் என்பன மத்திய அரசினதும் மற்றும் மாகாண சபையினதும் சரியான ஒரு ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதே போல் இந்த கருத் திட்டங்களின் கீழ் உதவி வழங்குவதற்கு குழுக்களைத் தேர்ந்தெடுக்கும் போது, கஷ்ட பிரதேசங்கள் போலவே வறுமைக்கும் முந்துரிமை அளிக்கப்படுதல் வேண்டும் என்றும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இதன் போது அறிவுறுத்தினார்கள். “சகல வெளிநாட்டு உதவி கருத் திட்டங்கள் தொடர்பாக அமைச்சுக்கு அறியப்படுத்துங்கள். உதவி பெறும் குழுக்களை தேர்ந்தெடுக்கும் போதும் மற்றும் கஷ்டமான பிரதேசங்களை தேர்ந்தெடுக்கும் போதும் ஒரு மாவட்டத்தில் மட்டுமன்றி முழு நாடும் உள்ளடங்கும் வகையில் அத்தகைய குழுக்களை தேர்ந்தெடுத்து நியாயமான முறையில் உதவிகளை பகிர்ந்தளியுங்கள். அதே போல், இந்த உதவியை ஏழை விவசாயிகளின் நலனுக்காகவும் பயன்படுத்துங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் அதே பகுதியிலுள்ள அதே விவசாயி2 அல்லது 3 வெளிநாட்டு உதவி கருத் திட்டங்களிலிருந்து உதவியை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த கருத் திட்டங்கள் நாட்டின் சில பகுதிகளை சென்றடைவதில்லை. மேலும் விவசாயியை தொழில் நுட்பத்தை கொண்டு போஷியுங்கள். குளங்கள் மற்றும் அணைக்கட்டுகள் என்பவற்றை அமைப்பது தொடர்பான உரிய கருத் திட்டங்களை ஒப்பந்த தரப்புகளுக்கு வழங்காமல்கமக்காரர் அமைப்புகளுக்கும்மற்றும்குள சங்கங்களுக்கும் பெற்றுக் கொடுத்து உரிய பணம் வெளித் தரப்புகளுக்கு செல்லாமல் விவசாயிகளுக்கு செல்லக் கூடிய வகையில் அத்தகைய கருத் திட்டங்களை செயற்படுத்துங்கள். இன்று இலங்கையில் 516 கமநல சேவை நிலையங்கள் உள்ளன. இவற்றின் ஊடாக, விவசாய உற்பத்தி நிறுவனங்களை தாபித்து விவசாயியை ஒரு தொழில் முயற்சியாளராக மாற்றக் கூடியசெயல்முறை சாத்தியமான ஒரு வேலைத் திட்டத்தின் மீது கவனம் செலுத்துங்கள். குறிப்பாக மண்ணுக்கு உரங்களை எல்லை மீறிஇடுவதில் கடுமையான ஒரு பிரச்சினை காணப்படுகின்றது. இவ்வாறு உரங்களை இடுவதானது மக்களை வேண்டுமென்றே அறிந்து கொல்லுவது போன்ற ஒரு கொடிய செயலாகும். இரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மாதத்திற்கு 30 பார்வையற்ற குழந்தைகள் பிறப்பதாகதெரிய வருகின்றது. மேலும் நீல நிற குழந்தைகளும் பிறக்கின்றன. ஒவ்வொரு மாதமும் சுமார் 100 சிறுநீரக நோயாளிகள் உருவாகுகின்றனர். உர மாஃபியா இந்த தகவல்கள் அனைத்தையும் மறைக்கின்றது. இந்த வெளிநாட்டு உதவி கருத் திட்டங்கள் தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் செயல்படுத்தப்படுதல் வேண்டும். அதே போல், மண் பரிசோதனைகளை மேற்கொண்டு உரங்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டங்களை போலவே கரிம உரங்களைப் பயன்படுத்துவதற்கான வேலைத் திட்டத்திற்கும் வெளிநாட்டு உதவி கருத் திட்டங்களின் மூலம் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இந்த உதவி இலவசமாக வழங்கப்படுகின்றது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இவற்றில் அதிகமானவற்றை கடன் உதவியின் கீழ் செயல்படுத்துகின்றது. எனவே அந்த நன்மைகளை விவசாய சமூகத்திற்கும், நாட்டின் தேசிய உற்பத்திக்கும் சமமாக சென்றடையச் செய்ய வேண்டும்என்பன போன்ற பல விடயங்களை அமைச்சர் அவர்கள் இதன் போது தெளிவுபடுத்தினார்கள்.

 

கமத்தொழில் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற விஷேட உதவி கருத் திட்டத்தின் ஊடாக 2021ஆம் ஆண்டு நாடு முழுதிலும் உள்ள 216சிறு குளங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளதாக இந்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது. அதே போல் நாடு முழுதிலும் பல பயிர்களுக்கான விதைகளை உற்பத்தி செய்தல் அடங்கலாக உற்பத்தி செயற்பாடுகளின் பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் பல நிகழ்ச்சித் திட்டங்களும் இதன் ஊடாக செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

இங்கு கருத்து தெரிவித்த கலாநிதி திருமதி யசிந்தா மாபட்டுன அவர்கள் சிறிய அளவான விவசாய தொழில் முயற்சி பங்காளித்துவ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாய வர்த்தகத்தில் இளைஞர்களையும் மற்றும் யுவதிகளையும் ஈடுபடுத்தும் வேலைத் திட்டங்களும் நாடு முழுதிலும் உள்ள கஷ்டப் பிரதேசங்களில் செயற்படுத்தப்படும் என்றும் கூறினார்கள்.

 

இதன் போது கருத்து தெரிவித்த கமத்தொழில் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் திரு சுமேத பெரேரா அவர்கள், விவசாயத்துடன் சம்பந்தப்படுகின்ற அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பது அவசியம் என சுட்டிக் காட்டினார்கள். மத்திய அரசாங்கம், மாகாக சபைகள் ஆகியவற்றின் சகல வெளிநாட்டுஉதவி கருத் திட்டங்களும் சரியான ஒரு முறையில் ஒருங்கிணைக்கப்படாததன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன என்றும் மற்றும் வெளிநாட்டு உதவி கருத் திட்டங்களின் சகல விபரங்களும் அமைச்சின் கீழ் இயங்குகின்ற கண்காணிப்பு அலுவலகத்திற்கு அறியப்படுத்தப்படுதல் வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

 

16 வகை பயிர்களின் மூலம் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யும் தேசிய வேலைத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து வெளிநாட்டு உதவி கருத் திட்டங்கள் செயற்படுத்தப்படுதல் வேண்டும் எனவும் இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக் காட்டப்பட்டது.

 

AGC-MEDIA-NEWS-02.  AGC-MEDIA-NEWS-03.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 04 ஜனவரி 2021 10:34

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்