English (UK)SinhalaSriLankaTamilIndia


விவசாயிகளையும் மற்றும் நுகர்வோரையும் சுரண்டும் மரக்கறி தொடர்பான சூழ்ச்சிக்கு எதிராக அரசாங்கம் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

image-01

கடுமையான நடவடிக்கை செயற்பாட்டுக்கு வரும் 

vவிவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யப்படும் மரக்கறி வகைகள் பொருளாதார நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

vநேற்றையவிலையைவிடவும்இன்றுஒரு கி.கி. இற்கு 50-40ரூபாவுக்குஇடைப்பட்டவிலைகுறைவு காணப்படுகின்றது

vஅறுவடைக்கு பிற்பட்ட கால இழப்புகளை குறைப்பதற்கு பாதுகாப்பான பொதிகளில் மரக்கறிகள் எடுத்துச் செல்லப்படும்

vஅடுத்த வாரம் முதல் கமத்தொழில் அமைச்சின் ஊடாக அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் மரக்கறிகள் எடுத்துச் செல்லப்படும்

vசில்லறை விற்பனையில் ஒரு கி.கி. இற்கு 20ரூபா இலாபத்திலும் மற்றும் மொத்த விற்பனையில் ஒரு கி.கி. இற்கு 10ரூபா இலாபத்தில் விற்பனை செய்யப்படும்

vவிலைகள் காட்சிப்படுத்தப்படுவது கட்டாயம்

 

மரக்கறி தொடர்பான சூழ்ச்சிக்கு எதிராக, கமத்தொழில் அமைச்சு,விவசாயிகளின் பண்ணை நிலங்களிலிருந்து நேரடியாக கொள்வனவு செய்யும் காய்கறிகளை நாரஹன்பிடாவிலுள்ளபொருளாதார நிலையத்திற்கு விற்பனையின் நிமித்தம் கொண்டுவருவதற்கான ஒரு வேலைத் திட்டத்தை இன்று காலை ஆரம்பித்து வைத்தது. கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ மற்றும் பிற அரச அதிகாரிகள் ஆகியோர் இன்று காலை நாரஹன்பிட்டவிலுள்ள பொருளாதார நிலையத்திற்கு வருகை தந்து இந்த வேலைத் திட்ட நிகழ்ச்சியை நேரில் அவதானித்தனர்.புதிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டின் சகல பகுதிகளிலும்விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்பல வகைமரக்கறிகள் கமத்தொழில் அமைச்சின் ஊடாககாத்திரமான ஒரு பொறிமுறையின் கீழ்,பெருளாதார நிலையங்களின் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்படும்.கொள்வனவு செய்யப்படும் மரக்கறி வகைகள் சில்லறை விலையில் 20 ரூபா இலாபத்தையும் மற்றும் மொத்த விலையில் 10 ரூபா இலாபத்தையும் ஈட்டும் வகைகள் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுதல் வேண்டும். விலைகளை காட்சிப்படுத்துவதும் மற்றும் அவ்வாறு காட்சிப்படுத்திய விலைகளில் விற்பனை செய்வதும் கட்டாயமாகும். இன்று புதிய வேலைத் திட்டம் ஆரம்பமாகியதையடுத்து, நேற்று நாடளாவிய ரீதியில் பொருளாதார நிலையங்களின் மரக்கறி விலைகள் ஒப்பீட்டுப் பார்க்கப்பட்டன. அதற்கிணங்க ஒவ்வொரு மரக்கறியினதும் ஒரு கி.கி. விலையை 40-50 ரூபாவுக்கு இடைப்பட்டளவில், அரசாங்கத்தின் இந்த புதிய வேலைத் திட்டம் குறைக்க உதவியுள்ளதாக புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டின. இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ், இந்த காய்கறிகள் அனைத்தும் பிளாஸ்டிக் பொதிகளில் பொதி செய்யப்படுகின்றன. இதனால், எடுத்துச் செல்லப்படும் போது ஏற்படும் சுமார் 30% இழப்பு குறைகிறது.மேலும், இதன் நன்மைகள் நுகர்வோருக்கு செல்கின்றன.

 

 

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பேசும் போது, காய்கறி விலைகள் அண்மையில் அதிகரித்துள்ளன, ஜனாதிபதி எங்களை அழைத்து, அதில் தலையீடு செய்யும் நிமித்தம் ஒரு வேலைத் திட்டத்தைத் தயாரிக்குமாறு பணித்தார். ஒரு இடைத்தரகர்கள்குழு விவசாயிகள், நுகர்வோர் அல்லது வர்த்தகர்கள் ஆகியோரால் பெறப்படாத இலாபத்தை ஈட்டுகின்றது. அதை நிறுத்துவதன் மூலம், காய்கறிகளுக்கான சந்தையில் நியாயமான விலை சூழலை உருவாக்க முடியும். அத்தகைய வேலைத் திட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். இதன் மூலம், நாம் ஒரு அரசாங்கம் என்ற வகையில்,விவசாயிகளையும், இந்த பொருளாதார நிலையங்களில் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்கிறோம். இன்றைய காய்கறி விலை நேற்றைய விலையை விடவும் ஒரு கிலோ கிராமுக்கு அனைத்து வகையான காய்கறிகளினதும் விலை40-50 ரூபாக்கு இடைப்பட்டளவில் குறைந்துள்ளது. கமத்தொழில் அமைச்சு இந்த காய்கறிகளை எடுத்துச் செல்வதற்கு என ஒரு கிலோவுக்கு 5 ரூபாய் என்ற ஒரு சொற்பளவான கட்டணத்தையே அறவிடுகின்றது. அந்த இலாபங்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். இது ஒரு முன்னோடி திட்டமாக இன்று ஆரம்பித்து வகை்கப்பட்டது. இந்த புதியவேலைத் திட்டத்தை சகல பொருளாதார நிலையங்களிலும்அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கவுள்ளோம்.”

 

ஊடகத்திற்கு பேட்டியளித்த போது இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இந்த புதிய வேலைத்திட்டம் தொடர்பான கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் பிரச்சினைகள் முதலிய விடயங்களை முன்வைக்க முடியும், அதன்படி குறைபாடுகளையும் சரிசெய்ய முடியும். இந்த சூழ்ச்சிக்கு எதிராக,நாம் அரசாங்கம் என்ற ரீதியில் அதனை வெளிப்படுத்த விரும்பினோம். இந்த காய்கறிகளை நாங்கள் பொதிகளில் கொண்டு வருகிறோம். எடுத்துச் செல்லப்படும் போது ஏற்படும் சேதத்தை எங்களால் குறைக்க முடிந்தது. இதன் விளைவாக கிடைக்கும் இலாபம் விற்பனையாளர்களுக்கும் நுகர்வோருக்கும் செல்கிறது. நாளுக்கு நாள், விவசாய அமைச்சின் மூலம் கண்டி மற்றும் வன்னி காய்கறிகளை கொழும்புக்கு கொண்டு வருகிறோம். இந்த சூழ்ச்சிக்குஎம்மால் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.”

 

நாரஹன்பிட்ட பொருளாதார நிலையத்தில் உள்ள வர்த்தக சமூகம் தங்கள் நன்றியையும், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட புதிய முயற்சிக்கு அவர்களின் பாராட்டுகளையும் தெரிவித்தது. நுகர்வோருக்கு சாத்தியமான சகல உதவிகளையும் வழங்குவதன் மூலமும், அவர்களுக்கு நியாயமான முறையில், அதிக காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்வதன் மூலமும் அரசாங்கத்தின் இந்த திட்டத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். மாவட்ட செயலாளர்கள், அவர்களின் கீழ் பணிபுரிகின்ற அரச அதிகாரிகள் மற்றும் கமக்காரர்அமைப்புகள் ஒருங்கிணைக்கின்ற ஒரு பொறிமுறையின் ஊடாக இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன, நெல் மற்றும் தானியங்கள், இயற்கை உணவுகள், மரக்கறிகள், பழங்கள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் அனில் விஜேசிங்க, மற்றும் பிற அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோர் நாரஹேன்பிட்ட பொருளாதார நிலையத்தில் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டனர்.

 

image-02  image-03

image-04  image-05

image-06


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 23 டிசம்பர் 2020 08:47

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்