English (UK)SinhalaSriLankaTamilIndia


தேசத்தின் தேவையை உள்ளடக்கிய ஒரு தேசிய விவசாய கொள்கை மூன்று மாதங்களுக்குள் கிடைக்கச் செய்யப்படும்

Agri Image 003

    • விவசாயத் துறையிலுள்ள நிபுணர்கள் அடங்கலாக 13 பேர் கொண்ட ஒரு நிபுணர்கள் குழு கூடுகிறது
    • அரசாங்கங்கள் மாறினாலும் மாறாமல் இருக்கும் ஒரு தேசிய கொள்கை
    • மக்களின் சுகாதாரம், சுற்றுச் சூழல், உள்ளூர், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார அடையாளத்தின் அடிப்படையில் பாதுகாக்க வேண்டிய விவசாய தொழில்முனைவோர் தலைமுறை
    • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் அவர்களை தொழில்முனைவோராக மாற்றும் ஒரு நிகழ்ச்சித் திட்டம்

     

    தேசிய விவசாய கொள்கையை வகுத்தமைப்பதற்காக நியமித்த நிபுணர்கள் குழு நேற்று முதன்முறையாக கண்ணொறுவயில் அமைந்திருக்கின்ற தோட்டக்கலை பயிர்கள் ஆராய்ச்சி நிறுவகத்தில் கூடியது. இது கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் கூடியது. விவசாய துறை நிபுணர்கள் உட்பட பல துறைகளினதும் நிபுணர்களை உள்ளடக்கி நியமித்த இந்த குழுவில் 13 உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.  கமத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக இருக்கும் கலாநிதி அஜந்த டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவில், விவசாய பணிப்பாளர் நாயகமாக இருக்கும் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் மற்றும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக இருக்கும் டபிள்யூ.எம்.எம்.பீ. வீரசேக்கர மற்றும் அறிஞர்களான சபராகமுவ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பி.ஐ. யாப்பா மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சீரேஷ்ட பேராசிரியர் புத்தி மராம்பே மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் பாலித்த வீரக்கோடி, மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உதித் கே.ஜெயசிங்க மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம்.பீ. ரத்னதிலக, டாக்டர் பி.வி.ஆர். புண்யவர்தன, டாக்டர் டி.எஸ்.குருப்பு ஆராச்சி, டாக்டர் யசிந்த மாபட்டுன மற்றும் ரிஸ்வி சாஹித் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக இந்த குழுவிற்கு தேசிய கமக்காரர்கள் அமைப்புகள் சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் திரு சமரகோன் நியமிக்கப்பட்டமை ஒரு சிறப்பு அம்சமாகும்.

                                              

    அரசியல் பேதங்களை அல்லது வேறு எந்த செல்வாக்குகளையும் பொருட்படுத்தாமல் மூன்று மாதங்களுக்குள் தேசத்தின் நலனுக்காக தேசிய விவசாய கொள்கையை வகுத்தமைக்குமாறு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இந்த குழுவிடம் கேட்டுக் கொண்டார்கள். இந்த தேசிய விவசாய கொள்கையை 3 மாதத்திற்குள் வகுத்தமைக்குமாறும் இந்த  நிபுணர் குழுவை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அவர் விளையாட்டு அமைச்சராக இருந்த காலத்தில் 2010 ஆம் ஆண்டில் விளையாட்டுக்கள் தொடர்பான தேசிய கொள்கையை அறிமுகப்படுத்தியதாகவும், இது இலங்கையில் விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி இருந்ததாகவும் கூறினார். எனவே அவ்வப்போது பேசப்படுகின்ற தேசிய விவசாய கொள்கையை நிஜமாக்கத் தேவையான தலையீடுகளை செய்யுமாறு இந்த நிபுணர்கள் குழுவை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். வளமான தூரநோக்கு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நச்சுத்தன்மையற்ற உணவுகளிலிருந்து விடுபட்டு தன்னிறைவு மற்றும் இறக்குமதி பொருளாதாரம் சார்பாக உற்பத்தி பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தேசிய விவசாய கொள்கை அவசியம் என்றும் அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். மேதகு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அவர்கள் அரசாங்கங்கள் மாறினாலும் விவசாய கொள்கைகளுடன் மாறாதிருக்கக் கூடிய ஒரு தேசிய விவசாய கொள்கையை விரைவில் தயாரித்து, அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, ஒரு தேசிய  மாற்ற முடியாத வேலைத் திட்டத்தை செய்றபடுத்தும் தீவிர முயற்சியில் உள்ளார் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தெரிவித்தார்கள். எனவே அரசாங்கத்திற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அவர் இந்த நிபுணர்கள் குழுவிடம் கேட்டுக் கொண்டார்.    

     

    2003, 2007 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஒரு தேசிய விவசாய கொள்கை வகுத்தமைக்கப் பட்டது, ஆனாலும் அது உண்மையில் நிஜம் பெறவில்லை என்று வயம்ப பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் உதித் கே.ஜெயசிங்க சுட்டிக் காட்டினார். கனடா, இஸ்ரேவேல் ஆகிய நாடுகளின் அல்லது வேறு ஏதாவது நாடுகளின் விவசாயக் கொள்கையை இணையத் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து எமது நாட்டு பெயரில் முன்வைப்பதற்குப் பதிலாக, உள்ளூர், சுற்றுச் சூழல், சுகாதாரம், மது விவசாயிகள், புதிய தொழில் நுட்பம், விவசாயியை ஒரு தொழில்- முனைவோராக ஆக்குதல் அடங்கலாக நாட்டிற்கு ஏற்ற ஒரு தேசிய விவசாயக் கொள்கை அவசியம் என்று பேராசிரியர் உதித் கே. ஜெயசிங்க குறிப்பிட்டார். ஒரு தேசிய விவசாய கொள்கையை தயாரிப்பதில் மட்டும் மட்டுப்படாமல் விவசாயம் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது பொருத்தமான ஒரு நேரத்தில் கூடுவது இந்த நிபுணர்கள் குழுவுக்கு பொருத்தமானது என்றும் பேராசிரியர் உதித் கே. ஜெயசிங்க சுட்டிக் காட்டினார். மேலும் உலகில் பல அபிவிருத்தி அடைந்த நாடுகள்  அவ்வாறு செய்கின்றன எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

     

    உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் களைக் கொல்லிகள் மற்றும் விதைகள் என்பவற்றை வாங்குவதற்கு விவசாயிகளினால் பெரும் தொகையான பணம் செலவிடப்படுவதால், உள்ளூர் உற்பத்தியை நோக்கிய புதிய கொள்கையில் இந்த விஷயங்கள் சேர்க்கப்படுதல் வேண்டும் என்றும் பேராசிரியர் பி.ஐ. யாபா இங்கு முன்மொழிந்தார். மற்ற நாடுகளுக்குப் செல்கின்ற பெரும் தொகையான பணத்தை சேமிக்கவும், விவசாயிகளின் கரங்களை வளப்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் தேசிய நலன் கருதி எடுக்கப்படுதல் வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.   

     

    விவசாயிகள் சார்பாக குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய விவசாய சம்மேளனத்தின் தலைவர் திரு எஸ்.எம்.ஜி. சமரகோன் அவர்கள், அடி மட்டத்திலுள்ள விவசாயிகளின் கருத்துக்கள், பரிந்துரைகள், பிரச்சினைகள் என்பவற்றை நிர்வாகிகளிடம் குறிப்பிடுவதில் வரலாறு முழுவதும் ஒரு சிக்கல் இருந்துள்ளது என்று கூறினார்கள். விவசாயிகளின் அத்தகைய கருத்துக்களை கோவையிட்டு குறித்த குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு கமக்காரர் அமைப்புகள் சம்மேளனத்தின் தலைவர் திரு சமரகோன் அவர்களிடம் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தெரிவித்த அதே வேளையில் அதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க தான் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்கள்.

     

    ஒரு விவசாய அடிப்படையிலான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது காலத்தின் தேவை என நிபுணர்கள் குழு அமைச்சருக்கு சுட்டிக் காட்டியது. உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரையான சங்கிலி வலையமைப்புகளை புரிந்துகொண்டு ஒரு தேசிய விவசாய கொள்கை வகுத்தமைக்கப்படுதல் வேண்டும் எனபது அந்தக் குழுவின் கருத்தாக இருந்தது.  

     

    கரிம உர அதிகார சபையை தாபித்தல், விதை உற்பத்தியால் நாட்டை வலுப்படுத்துதல், 16 பயிர்களில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்தல், விவசாய தொழில் நுட்பத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் விவசாய உற்பத்தி ஏற்றுமதி கிராமங்களை நிறுவுதல் உள்ளிட்ட பல திட்டங்கள் ஏற்கெனவே  செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் அவர்கள் இங்கு தெரிவித்தார்கள். தேசிய விவசாய கொள்கையை பொதுவான நோக்கத்திற்காக தேசிய நலன் கருதி ஏற்றுக் கொள்வதை விரைவுபடுத்துவதே தனது ஒரே நோக்கம் என்றும் தேவையான உதவிகளை வழங்கக் கூடிய வகையில் அரசாங்கத்திற்கு அவர் தலையீடு செய்ய தயாராகவுள்ளதாகவும் விவசாய தேசிய கொள்கையை வகுத்தமைப்பதற்காக நியமித்த நிபுணர்கள் குழு முன்னிலையில் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். நிபுணர்கள் குழு அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தகவல்களை சேகரித்து கலந்துரையாடுவதற்கும் மற்றும் நாட்டிற்கு எதிர்காரத்தில் தேவையான உற்பத்தித்திறன் வாய்ந்த வெற்றிகரமான உகந்த ஒரு தேசிய விவசாய கொள்கையை விரைவாக வகுத்தமைப்பதற்கும் உடன்பட்டது. மேலும் குறித்த கொள்கையை தயாரித்து முடிக்க தயாராகவுள்ளதாகவும் அந்தக் குழு கூறியது. கமத்தொழில் அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் திரு சுமேத பெரேராவும் இந்த விஷேட கலந்துரையாடலில் கலந்து கொண்டார். கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினது பரிந்துரையின் பேரில் 13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த நிபுணர்கள் குழு, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் திரு. சுமேத பெரேரா அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளது.

 

Agri Image 001  Agri Image 002


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 22 டிசம்பர் 2020 15:54

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்