vவிவசாய திணைக்களத்தின் ஊடாக விவசாயிகளிடமிருந்து அவர்களின் உற்பத்திகளை நேரடியாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள்
vகமநல சேவை நிலையங்களையும் மற்றும் மாவட்ட செயலாளர்களையும்கமக்காரர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்தல்
vஇடைத்தரகர்களால் அதிக இலாபம் ஈட்டுவது விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கும் நியாயமற்றது
vபொருளாதார நிலையங்களில் ஒதுக்கப்பட்ட கடைகளை மற்ற வர்த்தகங்களுக்காக பயன்படுத்துவதை நிறுத்த விஷேட சுற்றறிக்கை சனவரி மாதளவில் வெளியிடப்படும்
தற்போதுள்ள விலை நிலவரத்தை பரிசீலித்த ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ அவர்கள், மரக்கறிகள் மற்றும் பழங்கள் சந்தையில் அநியாயமாக அதிகரித்து வரும் விலைகளைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சுக்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்யப்படுகின்ற பொருட்களை மீகொட, நாரஹேன்பிட்ட மற்றும் வெலிசரஆகிய பொருளாதார நிலையங்களுக்குவிவசாய திணைக்களத்தினால் செயல்படுத்தப்படும் ஒரு பொறிமுறையின் ஊடாக ஒரு முன்னோடி திட்டமாக பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் வணிக சமூகத்துடன் நாரஹேன்பிட்ட பொருளாதார நிலையத்தில் இன்று விஷேட கலந்துரையாடலை நடத்தினார்கள். நுவரெலியபதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் அவர்களின் துணை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய மாவட்டங்களிலுள்ளகமக்காரர் அமைப்புகள் தரப்புகள்ஆகிய தரப்புகளுடன் இணைந்து புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அவர்கள் வணிக சமூகத்திற்கு தெரிவித்தார்கள்.மேலும், கமநல சேவை நிலையங்களுடனும்மற்றும் அதிகாரிகளுடனும் ஒருங்கிணைந்து கொள்வனவு செய்யப்படுகின்ற பொருட்களை சம்பந்தப்பட்ட பொருளாதார நிலையங்களின் வர்த்தகர்களுக்கு பாதுகாப்பான பொதிகளில் நியாயமான விலையில் விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.உரிய வர்த்தகர்கள் இந்த உற்பத்திகளை நுகர்வோருக்கு மிகவும் நியாயமான விலை இடைவெளியில் விற்பனை செய்ய வேண்டும் மற்றும் தொடர்புடைய விலைகளைக் காட்சிப்படுத்தவேண்டும் என்று திரு மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தினார். இந்த பழங்கள் மற்றும் மரக்கறிகள் என்பவற்றைஇழப்புகள் ஏதுமின்றி நிலையான பிளாஸ்டிக் கொள்கலன்களில் கொண்டு செல்வதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்றும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.திரு. மஹிந்தானந்த அளுத்கமகேவணிக சமூகம் மரக்கறிகள் மற்றும் பழங்கள் என்பன சேதமடைந்துள்ளதாக குற்றம் சாட்டி அதிக விலை இடைவெளியை பேணுகின்றது என்றும், இதுபோன்ற சேதங்களைதவிர்க்கும் வகையில் விவசாயிகளுக்கு இதுபோன்ற வசதி வழங்கப்படுவதால் அவ்வாறு இழப்புகள் ஏறபடாது என்பதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். நிறுவனங்களின் வணிக சங்கம் அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழுமையாக உடன்படுவதாக கூறியது. கேள்வி நடைமுறை மூலம் பொருளாதார நிலையங்களிலுள்ளகடைகளை பெற்ற நபர்கள் அத்தகைய கடைகளை மற்ற தரப்புகளுக்கு துணை வாடகைக்கு வழங்குகின்றனர் என்றும் இதன் மூலம் ஒரு நாளைக்கு ஒரு பெரிய தொகை செலவாகும் என்றும் அதனால் மரக்கறிகளினதும் மற்றும் பழங்களினதும் விலைகளில் அது சேருகின்றது என்றும் அமைச்சர் அவர்கள் வணிக சமூகத்திடம் தெரிவித்தார்கள். இடம்பெறும் இந்த முறைகேட்டை அடுத்த ஜனவரி மாதம் முதல் முறைப்படுத்துவதாக அமைச்சர் உறுதியளித்தார். பொருளாதார நிலையங்களில் கடைகளைப் பெற்றவர்கள் மற்ற வர்த்தகங்களுக்கு துணை குத்தகைக்கு விடுவதைத் தவிர்க்கும்வகையில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சுற்றறிக்கைகளை வெளியிடுமாறும் அமைச்சர் அவர்கள் அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.கொரோனா தொற்றுநோய் காலத்தில் மற்ற வர்த்தகங்களுக்காக ஒதுக்கப்பட்ட கடைகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் அமைச்சரிடம் புகார் செய்தனர்.எனவே, இந்த கடைகள் சம்பந்தப்பட்ட வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படுதல் வேண்டும் என்பதை உடனடியாக எழுத்துபூர்வமாக தெரிவிக்குமாறு அமைச்சர் அவர்கள் நரஹன்பிட்டவிலுள்ள பொருளாதார நிலையத்தின் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்கள்.கஷ்டப்பட்டு வியாபாரம் செய்கின்ற வர்த்தகர்களை பாதிக்கக் கூடிய வகையில் இடைத்தரகர்கள் பெறும் அதிகளவு இலாபம் உடனடியாக நிறுத்தப்படுதல் வேண்டும் மற்றும் அதற்காக ஒத்துழைப்பை வழங்க வேண்டும்என்றும் அமைச்சர் அவர்கள் வணிக சமூகத்திடம் கேட்டுக் கொண்டார்கள்.
கோவிட் தொற்றுநோய் காலத்தின் போது உற்பத்தி சேகரிப்பு மையங்களை அமைப்பதற்கும் அவற்றை வர்த்தகர்களுக்கு வழங்குவதற்கும் அரசாங்கம் பல நாட்களாகவேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுத்தாகவும் மற்றும் அது வெற்றியளித்தாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து உதவிகளையும் வழங்குவதன் மூலம் உற்பத்தி செயல்முறைகளை அரசாங்கம் மேற்கொண்டாலும் பொதுமக்களுக்கு நியாயம் கிடைப்பத்தில்லை.எனவே மக்களுக்குநியாயத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது என்றும் அமைச்சர் அவர்கள் கூறினார்கள். புதிய திட்டத்தின் ஊடாகமரக்கறி வகைகளையும் மற்றும் பழங்களையும் மலிவான விலையில் வாங்குவதற்காக இத்தகைய பொருளாதார நிலையங்களுக்கு மக்கள் கூடுதலாக வரும் வகையில் அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், இதன் மூலம் இடைத்தரகர் கறுப்பு சந்தை வர்த்தகத்தை நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கும் என்றும் நாரஹன்பிட்ட பொருளாதார நிலையத்தின் வணிக சமூகத்திடம் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.மேலும், பாரியஅளவில் அரிசி உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களும், மீன்பிடி கூட்டுத் தாபனங்களும், இறைச்சி வியாபாரிகளும் மற்றும் முட்டை வியாபாரிகளும் இத்தகைய பொருளாதார நிலையங்களில் இவ்வாறு ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் அவர்கள் கூறினார். சம்பந்தப்பட்ட தரப்புகளை அந்த பொருளாதார நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யுமாறும் மற்றும் விலைப் பட்டியல்களை காட்சிப்படுத்துமாறும் பணிக்கின்ற சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் கொள்வனவு செய்யும் நோக்கத்திற்காக அரசாங்கம் ஒரு பொருளாதார மைய எண்ணக்கருவை அறிமுகப்படுத்தி இருந்தாலும், இடைத்தரகர்கள் அதனை மதிக்காது செயல்படுவாதல் இந்த முறைகேடான நிலையை முற்றாக மாற்றுவதற்குஅரசாங்கம் ஜனவரி முதல் வாரத்தில் சுற்றறிக்கைகளை வெளியிடும் என்றும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.நாரஹன்பிட்டவில் உள்ள பொருளாதார நிலையத்தில் ஒரு வார முன்னோடி திட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு பொருளாதார நிலையத்தின் வர்த்தக சங்கம்உடன்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அரசாங்கம் வழங்கும் ஒரு கிலோ கிராமுக்கு 20 ரூபா சில்லறை இலாபத்தையும் மற்றும் ஒரு கிலோ கிராமுக்கு 10 ரூபா மொத்த இலாபத்தையும்பெற்றுக் கொள்ளலாம். புதிய திட்டத்தின் கீழ் சிறந்த உற்பத்திகளை நியாயமான விலையில் கொள்வனவு செய்ய இதுபோன்ற பொருளாதார நிலையங்களுக்கு நுகர்வோரை வருமாறு அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.
நெல் மற்றும் தானியங்கள், இயற்கை உணவுகள், மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. எல்.எல்.ஏ. விஜேசிறிமற்றும் அமைச்சின் ஏனைய அதிகாரிகள் அதே போல் நாரஹன்பிட்ட பொருளாதார நிலைய வர்த்தக சமூக பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இதற்கிடையில், நாட்டின் பல மாவட்டங்களில் சேனா கம்பளிப்பூச்சி அச்சுறுத்தல் மீண்டும் தோன்றுவது குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அமைச்சர் தனது பதிலில், அரசாங்கம் ஏற்கனவே தலையிட்டுள்ளது என்றும், விவசாய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று நிலைமை குறித்து விசாரிப்பதாகவும், அடுத்த சில நாட்களுக்குள் தேவையான பூச்சிக்கொல்லிகள் வழங்கப்படும் என்றும் கூறினார். சேனா கம்பளிப்பூச்சி அச்சுறுத்தலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் தெரிவித்தார்கள்.