கண்டி மாவட்டத்தில் 4 தொகுதிகளில் (நவலபிட்டிய, கம்பளை, உடுநுவர மற்றும் ஹெவாஹெட்ட) ஏழை விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக 'ஏற்றுமதி சந்தைக்கு பழங்களை ஏற்றுமதி செய்யக் கூடிய வகையில் பழப் பயிர்களை வளர்ப்பதற்காக' 2000 குடும்பங்களுக்கு 700 மில்லியன் (ஒரு குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வீதம்) வழங்கப்பட்டது.மேலும் இது உலக வங்கியின் கீழ் செயற்படுத்தப்படும்'புத்தாக்க கருத்' திட்டத்தின்’இதனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்திகளை நேரடியாக ஏற்றுமதி சந்தைக்கு உற்பத்தி செய்வதுஇங்குள்ள சிறப்பாகும்.
தரமான உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்ப அறிவு , சொட்டு நீர் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு சந்தைகளின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய தரமான உற்பத்தியை உற்பத்தி செய்வதற்கான விளைச்சலுடன் கூடிய தாவரங்கள் என்பவற்றை விவசாயிக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் கீழ், சகல வசதிகளுள்ள04அதிநவீன செயலாக்க நிலையங்களும் (State-of-The-Art Processing Centers)அந்த உற்பத்திகளின் விநியோக சங்கிலி நிமித்தம் அந்த தொகதிகளில் அமைக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், வாழை, கொய்யா, அன்னாசி, அவகோடா போன்ற பழங்கள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக உற்பத்தி செய்யப்படும்.
கௌரவகமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களைகமத்தொழில் அமைச்சில்சந்தித்த டோல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த விவசாயிகளின் உற்பத்திகளின் நிமித்தம் வெளிநாட்டு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க உடன்பட்டனர். இதன் கீழ், விவசாய உற்பத்திகள் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றின் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
இந்த கருத் திட்டம் இலங்கையில் மேலும் 12 மாவட்டங்களை உள்ளடக்கும். இதன் கீழ் ஏற்கனவே 05 மாவட்டங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் பழங்கள் கொள்கலன் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஏற்றுமதி செய்ய சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.