மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் அனைத்து ஊழியர்களுக்கும் மற்றும் இது வரை காணி உரித்தரற்ற தொழிலாளர்களுக்கும் இன்னும் மூன்று மாதங்களுக்குள் சட்டபூர்வமாக காணி உரித்துக்களை வழங்க வேண்டும் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் நிர்வாகத்திற்கும் மற்றும் கமத்தொழில் அமைச்சருக்கும் இடையே கமத்தொழில் அமைச்சில் இந்த விடயம் பற்றிய ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. ஒவ்வொரு ஊழியருக்கும் வீடுகளை நிர்மாணிக்க கூடிய வகையில் உடனடியாக07 பேர்ச்சஸ் அளவான காணி வழங்கப்படுதல் வேண்டும் மற்றும் அந்த விடயம் மிக விரைவில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என அமைச்சர் உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்த தொழிலாளர்களுக்கு பல தசாப்தங்களாக காணிகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்து வந்திருந்தது. ஆகையால்அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். எமது நாட்டிற்கு வருமானம் ஈட்டும் வகையில் பங்களிக்கும் இந்த ஊழியர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆகையால் பல்வேறு சுற்றறிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றில் நேரத்தை வீணாக்காமல், அவர்களுக்கு காணிகளை வினைத்திறன் வாய்ந்ததாக வழங்குதல் வேண்டும் என்று கலந்துரையாடலில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் எடுத்துரைத்தார்கள்.
மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் அனைத்து ஊழியர்களினதும் சேபலாப நிதிகள் அடுத்த ஆண்டு முடிவடைவதற்குள் செலுத்தப்படுதல் வேண்டும் என்றும் அமைச்சர்உரிய நிர்வாகத்திற்கு அறிவித்தார். பல பாரிய பிரச்சினைகளுக்கும்மற்றும்ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிற பிரச்சினைகளுக்கும் இது போன்ற விரைவான தீர்வுகளின் ஊடாக தீர்வு விரைவாக காணப்படுதல் வேண்டும் என்று அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஊழியர்களின் பிரச்சினைகளை நடைமுறை ரீதியாகவும் மற்றும் விரைவான முறையிலும் தீர்ப்பது நிர்வாகத்தின் பொறுப்பு, இதனால்மக்கள் தோட்ட அபிவிருத்திசபை வெற்றிகரமாக தேவையான உற்பத்தி பணிகளை மேற்கொள்ள முடியும் அதே போல் நாட்டின் தேசிய வருமானத்தைஅதிகரித்து, அதன் மூலம்,எதிர்பார்த்த இலக்குகளை நோக்கி வெற்றிகரமாக முன்னேற முடியும் எனவும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.