English (UK)SinhalaSriLankaTamilIndia


முழு நாடும் உள்ளடங்கும் வகையிலான ஒரு விவசாய தகவல்கள் முறைமையை (தரவுத்த தளம்) தாபித்தல்

Agri image 001

சகல விவசாய தகவல்களும் உள்ளடங்கிய முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையிலான ஒரு கேந்திர தகவல் முகாமைத்துவ முறைமையை தாபிக்க கமத்தொழில் அமைச்சு தேவையான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது. இதன் முன்னேற்றம் பற்றிய ஒரு விஷேட கலந்துரையாடல் கமத்தொழில் அமைச்சர் மஹிதானந்த அளுத்கமகே அவர்களினது தலைமையில் கமத்தொழில் அமைச்சில் இடம்பெற்றது. விவசாயத்துடன் சம்பந்தப்படும் சகல அரச மற்றும் தனியார் பிரிவுகளின் தகவல்கள் இந்த முறைமையில் உள்ளடங்கியிருக்கும்.அம்பாந்தோட்டை அதே போல் வவுனியா ஆகிய மாவட்டங்களின் தகவல்களை சேகரிக்கும் பணி ஏற்கெனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் குறித்த இந்தக் கரும பணி இடம்பெறுவதாக உரிய அதிகாரிகள் இந்த கலந்துரையாடலின் போது அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்கள்.

இற்றைப்படுத்திய மற்றும் உண்மையான தகவல்கள் மாத்திரம் எனும் பொறுப்பை அடிப்படையாக கொண்டு இந்த தகவல் முறைமை தயாரிக்கப்படுதல் வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இந்த கலந்துரயாடலின் போது சுட்டிக் காட்டினார்கள்.

                       

  • பயிரிடப்படும் காணிகள் எவை
  • எந்த எந்த பயிர்கள் எந்த எந்த காலப் பகுதிகளினுள் மேற்கொள்ளப் படுகின்றன
  • ஒரு பயிர்ச் செய்கை போகத்தில் நாடு முழுதிலும் பயிரிடப்பட்டுள்ள பயிர்களும் மற்றும் பயிரிடப்பட்டுள்ள நிலங்களின் அளவுகளும் எவை
  • பயிர்களை பயிரிடும் போது தேர்ந்தெடுக்க வேண்டிய முறையியல்கள்
  • விவசாய தொழில் நுட்ப அறிவு
  • பயிரிடப்படும் அளவுகளுக்கு ஏற்ப உற்பத்தி, விற்பனை, விலை
  • நாடு முழுதிலும் செயற்படுத்தப்படும் விவசாய கருத் திட்டங்கள் எவை

 

என்பன போன்ற விடயங்கள் உள்ளடங்கிய சகல வகையான விவசாய தகவல்களையும் ஒரு தகவல் முறைமையின் மூலம் உள்ளடக்குவது இந்த புதிய விவசாய தகவல் முறைமையை தாபிப்பதன் நோக்கமாகும். உலகத்தில் பல அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த விதத்திலான விவசாய தகவல் முறைமைகள் செயற்படுத்தப்படுகின்றன. இந்த நாட்டில் அத்தகைய முழுமையான வசதிகளையுடைய ஒரு தகவல் முறைமை தாபிக்கப்படுவது முதல் தடவையாகும். விவசாயத்துடன் சம்பந்தமான சகல நிறுவனங்களிடமும் தனித்தனியாக காணப்படுகின்ற தகவல்களை இந்த கேந்திர தகவல் முறைமையினுள் உள்ளீர்த்து ஒரு தேசிய தேவை என கருதி விரைவில் இந்த வசதியை தாபிக்குமாறு அமைச்சர் அவர்கள் இதன் போது அறிவுறுத்தினார்கள். உரங்களை பகிர்ந்தளித்தல், உரங்களின் பாவனை, உரங்களை இடவேண்டிய விதம் முதலிய சகல தகவல்களையும் புதிய விவசாய தகவல் முறைமையினுள் உள்ளீர்க்குமாறு இதன் போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கேட்டு கொண்டார்கள். அதே போல் கமத்தொழில் அமைச்சுடன் தொடர்புடைய உரிய இராஜாங்க அமைச்சுகள்மூலமாக சேகரிக்கப்படும் சகல தகவல்களும் இந்த கேந்திர தகவல் முறைமையினுள் உள்ளீர்க்கப்படும்.

 

இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்ட கமத்தொழில் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் திரு சுமேத பெரேரா அவர்கள் தற்பொழுது குறித்த தகவல் முறைமையை தாபிப்பது தொடர்பான அதிக அளவு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்கள். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கூட,எந்த ஒரு இடத்திலிருந்தும், நாட்டிலுள்ள எந்த ஒரு விவசாயினதும், விவசாய பண்ணையினதும்தகவல்கள் முதல் அந்தந்த காலநிலைகளினுள் பயிரிடப்படுகின்ற பயிர்களின் தகவல்கள் வரை அடிப்படை மட்டத்தில் இந்த கேந்திர தகவல் முறைமையை தயாரித்து தாபிக்க வேண்டும் என இந்த கலந்துரையாடலின் போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் குறிப்பிட்டார்கள். மேலும் விவசாய துறையுடன் சம்பந்தப்படும் உரிய நிபுணர்களினதும், பல்கலைக்கழக பேராசிரியர்களினதும் மற்றும் கல்விமான்களினதும் உதவிகளை இதன் நிமித்தம் பெற்றுக் கொள்ளுமாறும் மற்றும் அவர்களில் அதிகமானவர்கள் இதன் நிமித்தம் இலவசமாக உதவிகளை வழங்க தம்மிடம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் இதன் போது மேலும் சுட்டிக் காட்டினார்கள். நாடு முழுதிலும் பயிரிடப்படுகின்ற பல வகை பயிர்களின் உற்பத்திகளுக்கு கட்டுப்பாட்டு விலைகளையும் மற்றும் விவசாயிகளுக்கு நியாயமான விலைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கும் அதே போல் நுகர்வோருக்கு நியாய விலைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த இற்றைப்படுத்திய தகவல் முறைமை மிகவும் இன்றியமையாதாகும் என தெரிவித்த அமைச்சர் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் சகல தரவுகளையும் சேமித்து இதன் பணிகளை நிறைவு செய்யுமாறும் அறிவித்தார்கள். நெல் போன்ற பிரதான பயிர்களுக்கு மாத்திரம் மட்டுப்படாமல் மரக்கறி பயிர்கள் முதலிய பல விசாய பயிர்களை நாடு முழுதிலும், பல பிரதேசங்களிலும் பயிரிடுகின்ற விவசாயிகள் பற்றிய தகவல்களையும் இந்த தகவல் முறைமையினுள் உள்ளீர்க்க வேண்டும் எனவும் மற்றும் மாவட்ட விவசாய பணிப்பாளர்கள் அவர்களின் கீழ் மாவட்ட செயலாளர் அலுவலகங்களிலும் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் பணியாற்றும் விவசாய உத்தியோகத்தர்களையும் மற்றும் கமத்தொழில் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் கிராமிய மட்டங்களில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொண்டு 100% செவ்வையுடன் இற்றைப்படுத்திய தகவல்களை இந்த தகவல் முறைமையில் உள்ளீர்க்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் அந்த உத்தியோகத்தர்களிடம் சுட்டிக் காட்டினார்கள்.

 

Agri image 002


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 05:35

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்