English (UK)SinhalaSriLankaTamilIndia


2023 ஆம் ஆண்டளவில் பால் தேவையில் சுயபூர்த்தியுடைய நாடாக கட்டியெழுப்ப செயன்முறை ரீதியாக தத்தமது கடமைகளை நிறைவேற்றுங்கள்

Agri 002

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் உரிய அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.

 


கால்நடை வளங்கள் பண்ணைகள் ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை மைய கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் முன்னேற்றமும் மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களும் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. கமத்தொழில் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் டீ.பீ. ஹேரத் ஆகியோரும் மற்றும் உரிய உயர் மட்ட அரச அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். வினைத் திறன் வாய்ந்த ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்தும் முகமாக உரிய அமைச்சின் கீழ் காணப்படும் பதவி வெற்றிடங்களையும் மற்றும் பதில் பதவி வெற்றிடங்களையும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இந்த கூட்டத்தின் போது அறிவுறுத்தினார்கள். பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளின் தேவைப்பாடுகளை சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள் நிதியேற்பாடுகள் அடங்கலாக சகல உதவிகளையும் அரசாங்கத்தின் மூலமாகவும் மற்றும் வெளிநாட்டு கருத் திட்டங்களின் ஊடாகவும் பெற்றுக் கொடுக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

 

337 மிருக மருத்துவ அலுவலகங்கள் நாடு முழுவதிலும் இயங்குகின்றன. கமக்காரர் அமைப்புகளை அவற்றுடன் இணைத்து கொண்டு பால் மற்றும் கால்நடை உற்பத்திகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அந்த உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல் ஆகிய செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இராஜாங்க அமைச்சர் டீ.பீ. ஹேரத் அவர்கள் இதன் போது முன்மொழிந்தார்கள். மில்கோ நிறுவனம் அடங்கலாக இந்த பிரிவுக்குரிய ஒரு சில உத்தியோகத்தர்கள் தனியார் துறையுடன் சேர்ந்து கம்பனிகளின் பணங்களுக்கு அடிமையாகி செயற்படுவதாக சுட்டிக் காட்டிய இராஜாங்க அமைச்சர் அவர்கள், அது பற்றிய முறையான ஒரு நடபடிமுறையை செயற்படுத்துமாறும் மில்கோ நிறுவனத்தின் தலைவரிடம் தெரிவித்தார்கள். தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்தி சபை 2020 ஆம் ஆண்டினுள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் அதனை திருப்தியான அளவுக்கு மாற்ற கூடிய விதத்தில் 2021 ஆம் ஆண்டினுள் முன்னேற்றத்தை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை வினைத் திறன் வாய்ந்ததாக செயற்படுத்துமாறும் அதன் தலைவருக்கு இதன் போது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அறிவுறுத்தினார்கள்.  

 

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையினதும் மற்றும் கமத்தொழில் அமைச்சினதும் கீழ் காணப்படும் பயன்படுத்தப்படாத நிலங்களை புல் வளர்ப்பதற்கு ஈடுபடுத்துமாறும், எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள பால் மாடுகளின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டு திட்டங்களை தயாரிக்குமாறும் அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். பால் பண்ணையாளருக்கு பதிலாக உற்பத்தியாளர் மற்றும் திரவ பாலுக்கு பதிலாக தூய பசும் பால் என்ற சொல்லை கூட சாதகமான முறையில் மாற்றியமைத்து மக்கள் மத்தியில் அதனை கொண்டுசெல்ல வேண்டும் எனவும் இதன் போது முன்மொழியப்பட்டது. பிரச்சினைகள் என்று கூறிக் கொண்டு, குறிக்கோளை மறந்து விடாமல் 2023 ஆம் ஆண்டை பாலில் தன்னிறைவு அடைந்த ஆண்டாக ஆக்குவதற்கு வினைத் திறன் வாய்ந்ததாக செயல்படுதல் வேண்டும் எனவும், அரசாங்கம் சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் இதன் போது தெரிவித்தார்கள். அரசாங்கம் செய்யும் அர்ப்பணிப்பும் ஒதுக்கும் நிதியும் உரிய விதத்தில் ஆரம்ப மட்டத்திற்கு செல்லும் செயற்பாடு மிகவும் வினைத் திறனற்று காணப்படுவதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இந்த மீளாய்வு கூட்டத்தின் போது சுட்டிக் காட்டினார்கள். 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலமாக கிடைக்கும் முன்னேற்றத்தை முதலாம், இரண்டாம், மூன்றாம் காலாண்டு என்ற அடிப்படையில் அறிக்கையிடுதல் வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

 

வீரவில, பொலன்னறுவை, ஒயாமடுவ, ரிதியகம ஆகிய தேசிய கால்நடை வள சபைகளில் களஞ்சிய வசதிகளை நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியேற்பாட்டு விடயத்தையும் அமைச்சர் அவர்கள் அந்த வேளையிலேயே ஒருங்கிணைப்பு செய்தார்கள். அதே போல் பண்ணைகளுக்கு அருகில் யானை வேலிகளை அமைப்பதற்கும் அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுத்தார்கள். மாவட்ட மட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் டீ.பீ. ஹேரத் அவர்கள் இதன் போது சுட்டிக் காட்டினார்கள். அதன் நிமித்தம் செயன்முறை ரீதியாக செயல்படுமாறும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இந்த மீளாய்வு கூட்டத்தின் போது உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்கள். கிராமிய மட்டத்தில் 05 பால் மாடுகளுக்கும் அதிகமான மாடுகளை வளர்க்கும் பால் உற்பத்தியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பெற்றுக் கொடுப்பதற்கும் உரிய உத்தியோகத்தர்கள் கள ரீதியில் செயல்படுதல் வேண்டும் எனவும் மற்றும் கலந்துரையாடலுக்கு மாத்திரம் மட்டுப்படாமல் இவை அனைத்தையும் நிஜமாக்குவதற்கு தேவையான உதவி ஒத்தாசைகளை வழங்குமாறும் இந்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போது சுட்டிக் காட்டப்பட்டது.

 

Agri 001  Agri 003

Agri 004

voice-record-icon 1608195 Voice Clip


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 03 டிசம்பர் 2020 17:18

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்