English (UK)SinhalaSriLankaTamilIndia


விவசாயத் துறையின் வெளிநாட்டுக் கருத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான விஷேட செயலக அலுவலகம்

01.

கமத்தொழில் அமைச்சுடனும் மற்றும் அதன் கீழ் இயங்கும் இராஜாங்க அமைச்சுகளுடனும் சம்பந்தப்படுகின்ற வெளிநாட்டு உதவிக் கருத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒரு விஷேட செயலக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. 


அந்த அலுவலகம் கமத்தொழில் அமைச்சின் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக வங்கிக்கும் மற்றும் விவசாய அபிவிருத்திற்குமான சர்வதேச நிதியமான அதாவது “IFAD” நிறுவனத்தின் கீழ் நாடு முழுதிலும் பல விவசாயக் கருத் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. அந்தந்த கருத் திட்டங்களுக்குரிய குறித்த செயற்பாடுகளை கண்காணித்தல், அவற்றை வினைத்திறன் வாய்ந்த முறையில் மேற்கொள்ளல் அதே போல் சரியான ஒரு ஒருங்கிணைப்பு ஊாக அவற்றை முறைப்படுத்துதல் என்பன இந்தப் புதிய செயலக அலுவலகத்தின் பொறுப்புப் பணியாகும். கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் இந்தப் புதிய செயலக அலுவலக பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. டீ.பீ. ஹேரத்மற்றும் மொஹான் சில்வா போன்ற இராஜாங்க அமைச்சர்களும், மற்றும் கமத்தொழில் அமைச்சினது செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரெல் சுமேத பெரேரா அடங்கலாக அரச அதிகாரிகளும் மற்றும் வெளிநாட்டு உதவிக் கருத் திட்டங்களின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

 

வீட்டுத் தோட்டங்கள் முதல் பாரியளவான விவசாயக் கருத் திட்டங்கள் வரை பல வெளிநாட்டு உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. ஆயினும் அவை தொடர்பான சரியான ஒரு ஒருங்கிணைப்பும் மற்றும் தகவல் வலையமைப்பும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை. அந்தக் குறைப்பாட்டை நிவர்த்தி செய்து நாட்டிற்கு பயனுள்ளதாக இந்த வெளிநாட்டு உதவிக் கருத் திட்டக் கண்காணிப்பு நடவடிக்கைளை இந்தப் புதிய செயலக அலுவலகத்தினால் மேற்கொள்ள எதிர்பார்க்கப் படுகின்றது. பாரம்பரிய விவசாயப் போக்கில் புதிய தொழில் நுட்ப உதவிகளை பெற்றுக் கொடுப்பதும் இந்த வெளிநாட்டு உதவிக் கருத் திட்டங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு பொறுப்புப் பணியாகும். அந்த தொழில் நுட்ப அறிவு முறையாக நாடு முழுதிலும் காணப்படும் விவசாயிகளை சென்றடையக் கூடிய வகையில் குறித்த ஒருங்கிணைப்பு அம்சத்தினை இந்தப் புதிய செயலக அலுவலகத்தின் மூலம் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 

விவசாய தொழில்முயற்சித் தரப்புகளுக்கும் மற்றும் கமத்தொழில் அமைச்சுக்கும் இடையில் பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வும் அந்த இடத்திலேயே இடம்பெற்றது. உரிய அந்த விவசாய தொழில்முயற்சித் தரப்புகளும் மற்றும் கமத்தொழில் அமைச்சின் சார்பாக அதன் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரெல் சுமேத பெரேரா அவர்களும் குறித்த இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர். விவசாயிகளையும் அது போல் நுகர்வோரையும் பாதுகாத்து இந்த நாட்டை விவசாயத் துறையில் புதிய ஒரு பயணத்தில் நகரச்செய்யும் நிகழ்ச்சித் திட்டத் தொடர்களின் ஒரு நிகழ்ச்சித் திட்டமாகவே இந்த வெளிநாட்டு உதவிக் கருத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு செயலக அலுவலகம் தாபிக்கப்பட்டது.

 

02.   04.

03.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 18 நவம்பர் 2020 05:29

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்