English (UK)SinhalaSriLankaTamilIndia


மோசடியான முறையில் திரவ உரங்களை இறக்குமதி செய்து 201 மில்லியன் ரூபா அரச நிதி வீணாக்கப்பட்டமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் பெரும் மோசடி விசாரணையை துரிதப்படுத்துமாறு கமத்தொழில் அமைச்சர் கோருகின்றார்

03.

 காலாவதியாகிய 118000 லீற்றர் திரவ உரம் களஞ்சியாலைகளில் தேங்கிருத்தல்

 ஒரு தேசிய உரக் கொள்கையை உடனடியாக செயற்படுத்தல்

 உரங்களை விவசாயிகளுக்கு உரிய கால நேரத்திற்கு பெற்றுக் கொடுத்தல்

 மினிபே பிரதேசத்திற்கு உரங்கள் கிடைக்கவில்லை என விவசாயிகள் முன்வைக்கும் மனக்குறைகளுக்கு வினைத்திறன் வாய்ந்த ரீதியில் நடவடிக்கை எடுத்தல்

 

வத்தளை ஹுணுபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வ/ப இலங்கை உரக் கூட்டுத் தாபனத்திற்கு இன்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் விஜயம் செய்தார்கள். மொஹான் சில்வா, பிரசன்ன ரணவீர போன்ற இராஜாங்க அமைச்சர்களும், அரச அதிகாரிகளும், உரக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் ஜனத் விதானகே அடங்கலாக பிற அதிகாரிகளும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். 2015 ஆம் ஆண்டு உரங்கள் கொள்வனவு செய்யப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ள பெருமளவான மோசடி பற்றி இதன் போது உரிய அதிகாரிகள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களிடம் தெரிவித்தார்கள். இது தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கைளின் நிமித்தம் குறிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் போது தெரிய வந்தது.

 

இலங்கை உரக் கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்தம் 2,500 மெற்றிக் டொன் உரம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. இதில் 2,000 மெற்றிக் டொன் உரம் நாளாந்தம் விநியோகிக்கப்படுகின்றது. நெல் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை பகிர்ந்தளிக்கும் முக்கிய கரும பணியை இலங்கை உரக் கூட்டுத் தாபனம் மேற்கொள்கின்றது. வத்தளையில் அமைந்துள்ள இந்த உரக் கூட்டுத் தாபனத்தின்  சகல களஞ்சிய கட்டிடத்தொகுதிகளையும் இதன் போது அமைச்சர் அடங்கலாக பலரும் அவதானித்தனர். காலாவதியாகியுள்ள 118000 லீற்றர் அளவுக்கும் அதிகமான திரவ உரங்கள் களஞ்சியசாலைகளில் தேங்கியிருப்பதை இதன் போது அமைச்சர் அவர்கள் அவதானித்தார்கள். உரக் கூட்டுத் தாபன ஊழியர்களின் எதிர்ப்பை கருத்திற்கொள்ளாது வங்கி வசதிகள் அடங்கலாக பல அரச சலுகைகளை பெற்றுக் கொண்டு இந்த திரவ உரங்கள் 2015 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்த திரவ உரங்கள் தரமற்றதாக இருந்தும் கூட கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. ஆய்வுவுகூடப் பரிசோதனைகள் அந்த உரம் தரமற்றது என உறுதிப்படுத்தியிருந்தும் தொடர்ச்சியாக மோசடியான முறையில் அன்றிருந்த அதிகாரிகள் இந்த நட்டத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தினார்கள் என அமைச்சருக்கு அதிகாரிகள் சுட்டிக் காட்டினார்கள். அதே போல் அன்றைய காலத்தில் உரக் கம்பனியின் வளாகத்திற்கு காபெட்டு பரவி செப்பனிட்ட போது 88 இலட்சம் நிதி மோசடி செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். உரக் கம்பனியின் சட்ட உத்தியோகத்தர் அடங்கலாக அதிகாரிகளிடம் இந்த மோசடி தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் பற்றி வினவிய அமைச்சர், உடனடியாக அந்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அறிவுரைகளை வழங்கினார்.

 

இந்த விஜயத்தில் கலச்துகொண்ட இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, உர மோசடியை முறியடிக்க தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கமத்தொழில் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். உரிய மோசடி சம்பந்தமான விசாரணைகள்
தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பொலிமா அதிபர் அவர்களிடம் அமைச்சர் அந்த நேரத்திலேயே வினவினார். அதன் நிமித்தம் தேவையான தகவல், சான்றுகள், ஆவணங்கள் என்பவற்றை வினைத்திறன் வாய்ந்ததாக சட்டத்தை செயற்படுத்துகின்ற நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உரக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன் போது அறிவித்தார். அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு உரிய தண்டணையை பெற்றுக் கொடுப்பது மக்களின் எதிர்பார்ப்பாகும் என்பதால், இதனை ஒரு முக்கிய விடயமாக கருதி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார். குறித்த மோசடியான இந்த கம்பனி வேறு ஏதாவது பெயர்களில் இன்னும் உரங்களை விற்பனை செய்கின்றதா என ஆராய்ந்து அவ்வாறு செய்வதற்கு எந்த விதத்திலும் இடமளிக்க வேண்டாம் என, உர செயலக பிரதானிக்கு கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அவர்கள் அறிவித்தார்கள்.

 

இலங்கை உரக் கூட்டுத் தாபனத்திற்குரிய 46 களஞ்சியப்படுத்தல் நிலையங்கள் நாடு பூராகவும் காணப்படுகின்றன. உரிய காலத்திற்கு உரங்களை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதும், இடையூறுகள் ஏற்படாத வகையில் அதனை மேற்கொள்வதும்
அத்தியாவசியம் என இதன் போது அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். அதே  போல் கிளிநொச்சியிலும் மற்றும் அனுராதபுர தலாவ பிரதேசத்திலும் புதிய உர களஞ்சிய நிலையங்களை நிர்மானிப்பதற்கு தேவையான துரித நடவடிக்கையும் இதன் போது எடுக்கப்பட்டது. மினிபே பிரதேசத்திற்கு உரங்கள் கிடைப்பதில்லை என கூறப்படும் கமக்காரர் பிரச்சினைகள் பற்றி ஆராயுமாறும், உரங்களை பொதியிடுவது முதல் பாரியளவான கம்பனிகள் வரை நிகழும் அதிக பல மோசடிகள் பற்றிய பரந்த ஒரு விசாரணையை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் இதன் போது உரிய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

 

அதே போன்று உரக் கூட்டுத் தாபன சகல வீதிகளுக்கும் துரிதமாக காபெட்டு பரவி செப்பனிடுவதற்கு தேவையான நடவடிக்கையும் இந்த அவதானிப்பு விஜயத்தின் போது எடுக்கப்பட்டது. உரக் கூட்டுத் தாபன ஊழியர்கள் சம்பள முரண்பாடு பற்றிய பிரச்சினைகளை ஊழியர்கள் முன்வைத்தனர். அரச முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள். உரங்கள் பகிர்ந்தளித்தல் வலையமைப்பு அடங்கலாக வினைத் திறன் வாய்ந்த சேவையை வழங்கும் வகையில், மாகாண மட்டத்திலும் மற்றும் மாவட்ட மட்டத்திலும் நிலவும் பதவி வெற்றிடங்களை நிரப்பி, விவசாயிகளுக்கு உச்சளவான சேவையை வழங்குவது உரக் கூட்டுத் தாபனத்தின் பொறுப்பு என்பதை மனதில் கொண்டு அதனை நிறைவேற்றுமாறும் இதன் போது உரிய நிருவாக அதிகாரிகளிடம் அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.


வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கூட்டுத் தாபனம் உரங்களை இறக்குமதி செய்தல், கலத்தல், களஞ்சியப்படுத்தல், பகிர்ந்தளித்தல் ஆகிய செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. ஒரு சில தனியார் உரக் கம்பனிகள் தவரான முறையில் உரங்களை இறக்குமதி செய்து பெற்று கொள்ளல், போலி ஆவணங்களை சமர்ப்பித்து உரங்களை இறக்குமதி செய்தல், மோசடியாக பகிர்ந்தளித்தல், மோசடியாக கலத்தல் போன்ற சகல வகையான செயல்களையும் செய்கின்றன. ஆதலால் அத்தகைய செயல்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என உடனடியாக தனக்கு அறிக்கையிடுமாறும் உர செயலக அலுவலக அதிகாரிகளுக்கும் மற்றும் உரக் கூட்டுத் தாபன அதிகாரிகளுக்கும் கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இந்த அவதானிப்பு விஜயத்தின் போது அறிவித்தார்கள். இதன் பின்னர் ஊடகங்களுக்கும் அமைச்சர் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.


இயற்கை உரங்களின் பாவனை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பொருத்தமான ஒரு முறையியலின் ஊடாக பாவனைக்கு பழக்கப்படுத்த திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த விஜயத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் மொஹான் சில்வா அவர்கள் தெரிவித்தார்கள். அதன் நிமித்தம் குறுங்கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்கள்.

 

 10.  12.

16.  19.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 16 நவம்பர் 2020 18:26

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்