English (UK)SinhalaSriLankaTamilIndia


எதிர்வரும் பெரும்போகத்தில் 03 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லை, நெற் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்ய நடவடிக்கை

News image 04

 

  • சனவரி மாதமாகும் போது சகல களஞ்சியசாலைகளையும் புனர்நிர்மாணிக்க நடவடிக்கை
  • களஞ்சியசாலைகளை புனர்நிர்மாணிப்பதற்கு இராணுவத்தின் உதவி

 

அரிசிக்கான பற்றாக்குறையை ஏற்படுத்தி அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு ஒரு சில  தரப்பினர் மேற்கொள்ளும் முயற்சியை முறியடிப்பதற்கான ஒரு உடனடி தீர்மானத்தை எடுக்கும் பொருட்டு ஒரு விஷேட கூட்டம் கமத்தொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே / இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ / அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் திரு சுமேத பெரேரா அடங்கலாக அமைச்சின் அதிகாரிகள் / நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் / உர செயலக அலுவலகத்தின் தலைவர் / கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் தலைவர் ஆகியோர் உள்ளடங்கலாக அரச அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அரிசியை ஒரு போதும் இறக்குமதி செய்யக் கூடாது என்ற கடுமையான கொள்கைத் தீர்மானத்தை மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் கொண்டுள்ளார்கள் எனவும், உடனடியாக மக்களின் நுகர்வுக்கு அவசியமான அரிசியை உற்பத்தி செய்யவும் மற்றும் அதற்கு தேவையான ஒரு வேலைத் திட்டத்தை செயன்முறை ரீதியாக நடைமுறைப்படுத்தவும் வேண்டியுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இதன் போது தெரிவித்தார்கள்.

 

எதிர்வரும் பெப்ருவரி மாதம் வரைக்கும் இந்த நாட்டின் நுகர்வுக்கு அவசியமான அரிசியை உற்பத்தி செய்வதற்கு தேவையான நெல் கடந்த பயிர்ச் செய்கை போகத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் அவர்கள், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒரு சிலர் அரிசிக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தி அரிசியின் விலை அதிகரிக்க முனைவதாகவும் சுட்டிக் காட்டினார்கள். ஆகையால், அரச ஊழியர்கள் என்ற வகையில் ஒன்றாக ஒருங்கிணைந்து முறையாக செயன்முறை சாத்தியமாக முகம்கொடுக்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் இந்தக் கலந்துரையாடலின் போது தெரிவித்தார்கள். எனவே பெரும்போகத்தில், 03 இலட்சம் மெற்றிக் டொன் நெல்லை, நெற் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்யவும் மற்றும் அதன் நிமித்தம் அரச நிறுவனங்கள் ஒருங்கிணைப்புடன் தொழிற்படவும் வேண்டும் என அமைச்சர் அவர்கள் இங்கு சுட்டிக் காட்டினார்கள். களஞ்சியசாலைகளை புனர்நிர்மாணிப்பதற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்குவதற்கும் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்கு இராணுவத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.


 

அதே போல் நாட்டின் நுகர்வு தேவையை விடவும் அதிக நெல்லை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு உரிய அரச ஊழியர்களின் வினைத் திறன் அவசியம் என அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். தேசத்தின் ஒரு முக்கிய தேவையாக கருதி, தரிசு நில வயல் காணிகளில் பயிரிடுவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் அந்த

இலக்கை அடைந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்கள் மத்தியில் சுட்டிக் காட்டினார்கள். தற்போதைய நிலையை விடவும் 25% வீதத்தால் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு வெற்றிகரமான ஒரு திட்டத்தை செயற்படுத்துவதற்கும் இங்கு

தீர்மானிக்கப்பட்டது.


 

இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ அவர்கள், நெற் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்யும் மேலதிக நெல்லை குற்றி வைத்தியசாலைகளுக்கு / இராணுவத்தினருக்கு / சிறைச்சாலைகளுக்கு என சரியாக இனங்காணப்பட்டுள்ள ஒரு முறையியலின் ஊடாக அரிசியாக பெற்றுக் கொடுக்க முடியும் என சுட்டிக் காட்டினார்கள். நெல்லைக் கொள்வனவு செய்யும் போது எடுத்துச்செல்லும் வசதிகளில் அதிக கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு இடையூறுகள் ஏற்படாதவாறு செயன்முறை ரீதியாக செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் அவர்கள், உரிய அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.

 

 

இது தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ள ஒரு வேலைத் திட்டத்தை எதிர்வரும் வாரத்திற்குள் பெற்றுக் கொடுக்கவும் மற்றும் மந்தமாக செயல்படாமல் வினைத் திறன் வாய்ந்ததாக செயல்படவும் வேண்டும் என இந்த விஷேட கலந்துரையாடலின் போது சுட்டிக் காட்டப்பட்டது. அரசாங்கம் இலவச உர நிவாரண நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்துவதால் விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்ய நெற் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கை எடுப்பதன் மூலமாக விவசாயிகளும் / நுகர்வோரும் பாதுகாக்கப்படுவதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் இங்கு மேலும்

சுட்டிக் காட்டினார்கள். பயனுள்ள ஒரு விளைச்சலின் நிமித்தம் வெற்றிகரமாக விதை நெல்லை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பது உரிய அதிகாரிகளின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். தேவையான வசதிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுதல் வேண்டும். உரங்களை பெற்றுக் கொடுத்தல் / விதைகளை பெற்றுக் கொடுத்தல் / நெற் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்தல் முதலிய சகல விடயங்களையும் ஒன்றிணைந்த ஒரு ஒருங்கிணைப்பின் ஊடாக மேற்கொள்ளவும் மற்றும் ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக செயற்பட்டு விவசாயிகள் / நுகர்வோர் / அரசாங்கம் ஆகிய சகல தரப்புகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும்

செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வேண்டும் என இந்தக் கலந்துரையாடலின் போது  உரிய அரச அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 

 

News image 01  News image 02

 

News image 03   News image 06

 

News image 05

 

voice-record-icon 1608195 Video Cut 

News image 04

  • Steps to reconstruct all stores facilities by month of January.
  • Assistance of Army to reconstuct such stores facilities.

Certain groups are trying to create a scarcity for rice and increase its price and therefore a special meeting was held in the Ministry’s Office in order to find out an immediate solution to avert such conspiracy. Minister of Agriculture, Mahindananda Aluthgamage / State Minister, Sashindra Rajapaksha / Ministry Secretary, retired Major General Sumedha Pereira including officials from the Ministry / Chairman of Paddy Marketing Board / Chairman of National Fertilizer Secretariat / heads of the department of Agrarian Development and many government officers were invited for this meeting. ‘’His Excellency the President is in the decision that the fertilizer should not be imported, immediate action should be taken to produce required rice for people’s consumption and necessary work- plan for it should be practically implemented’’ Minister Mahindananda Aluthgamage said the during the discussion at the meeting.

 

The Minister stated that the required amount of paddy for production of rice needed for consumption of the nation up to next February has already been produced in the previous cultivation season and certain groups are trying to create a scarcity for rice and increase its price in means of catching fish out of muddy water. Therefore, the Minister said during the discussion that as we are government officers should face this situation together in a practicable approach. The Minister further highlighted that 03 hundred thousands of Metric Tons of paddy has to be purchased through Paddy Marketing Board and all government institutions should act in coordination. During this discussion at the meeting, it was decided to get the required funds for reconstruction of stores facilities be allocated and be obtained the assistance of Army for reconstruction work of such facilities.


 

The Minister further highlighted that the efficiency of the public servants is necessary in making arrangements to produce more paddy than the actual consumption of the nation. Minister Mahindananda Aluthgamage emphasized the fact among the officials who were in the discussion that this target can be achieved through motivating the farmers to do cultivation in barren paddy lands considering it as an essential need of the nation. During the discussion, it was decided to implement a successful work-plan which can increase the paddy production by 25% than the present rate.


 

State Minister, Sashindra Rajapaksha who expressed his view here said that the excess paddy purchased by the Paddy Marketing Board could be produced as rice and provided to hospitals / Army / department of prisons, through a properly identified method exclusively for them. The State Minister instructed the relevant officials to act in a practical way not causing suffer to the farmers, by paying more attention on the transport facilities when the paddy is purchased.

 

 

In this special discussion, it was highlighted that a work-plan prepared in this regard can be provided within next week and performance should be carried out speedily in an efficient manner. Minister Mahindananda Aluthgamage further said that the farmers / the consumers are protected through the arrangements made to purchase the paddy from farmers, as free fertilizer distribution program is implemented by the government. The Minister, apart from this, highlighted that it is the responsibility of the relevant authorities to provide the farmers with necessary seeds successfully in order to have good yields. ‘’Necessary facilities should be provided to the farmers, all activities like providing fertilizers / providing seeds / purchasing paddy through Paddy Marketing Board should be carried out in a proper coordination and the activity creating disturbs to the all parties such as farmers / consumers / government should be stopped by way of acting by every institution separately’’ the relevant government officials were requested during this discussion to do so.

 

 

News image 01  News image 02

 

News image 03   News image 06

 

News image 05

 

voice-record-icon 1608195 Video Cut 

 


 

·      


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: சனிக்கிழமை, 07 நவம்பர் 2020 11:29

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்