English (UK)SinhalaSriLankaTamilIndia


மேல் மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் வெற்றிகரமாகப் பகிர்ந்தளிக்கப்படும்

01.

 

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமூலிலிருக்கின்ற மேல் மாகாணத்தில் உள்ள பிரதான பொருளாதார மத்திய நிலையங்களில் தொகை வியாபாரத்தின் நிமித்தம் வியாபார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கு அமைவாக நாரஹேன்பிட்ட, இரத்தமலான, போக்குந்தர ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களின் வியாபார செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. திறந்து 03 மணித்தியாலங்கள் செல்ல முன்னர் ஒரு இலட்சம் கிலோ கிராம் மரக்கறிகள் நாரஹேன்பிட்டவில் அமைந்திருக்கின்ற பொருளாதார மத்திய நிலையத்தில் விற்பனை செய்யப்பட்டதாக அதிலுள்ள வியாபாரிகள் கூறினர். கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களும், இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ அவர்களும், அரச அதிகாரிகளும் வியாபார செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தை இன்று மாலை நேரத்தில் சென்று பார்வையிட்டனர். வியாபார சங்கப் பிரதிநிதிகளையும் மற்றும் வியாபாரிகளையும் சந்தித்த அமைச்சர், அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றி வினவினார்கள். மேலும் சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் வழங்கும் அறிவுரைகளின் பிரகாரம் சகல தரப்புகளும் செயற்படுதல் வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். பொறுப்பற்ற விதத்தில் செயல்பட்டால் மீண்டும் பொருளாதார மத்திய நிலையங்களை மூடுவதற்கு வழிவகுக்கும் என்பதால் அதிக பொறுப்புடன் செயல்படுமாறும் அமைச்சர் அவர்கள் இதன் போது கேட்டுக் கொண்டார்கள். சில்லறை வியாபாரம் இந்த பொருளாதார மத்திய நிலையங்களில் இடம்பெறாது. அனுமதிப் பத்திரம் பெற்றுள்ள மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே இந்த பொருளாதார மத்திய நிலையங்களுக்குள் நுழைய முடியும். திறந்து வைக்கப் பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையங்களின் ஊடாக சகல அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் தொகையாக கொள்வனவு செய்வதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

 

மேலும், மூடப்பட்டுள்ள மீகொட பொருளாதார மத்திய நிலையத்தையும் இன்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர். மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் பணியாற்றுகின்ற 260 ஊழியர்களுக்கான PCR பரிசோதனைகளை நாளைய தினமே மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை இதன் போது எடுக்கப்பட்டது. அந்தப் பரிசோதனை அறிக்கைகளை வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டு, சனிக்கிழமை மீகொட பொருளாதார மத்திய நிலையம் முழுமையாக தொற்றுநீக்கப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (9) ஆம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்படும் என
அமைச்சர் அவர்கள் இங்கு தெரிவித்தார்கள். அதன் நிமித்தம் சுகாதாரப் பிரிவுகளின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்றி தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு பொருளாதார மத்திய நிலைய முகாமைகளுக்கும் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் அமைச்சர் அறிவுரைகளை வழங்கினார்கள். PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள் தவிர வேறு எவரேனும் நபரை பொருளாதார மத்திய நிலையங்களுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டாம் என அமைச்சர் அவர்கள் இதன் போது பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டார்கள்.

 

பசளைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படும் விடயங்களின் உண்மை பொய் நிலவரம் என்ன என ஊடகவியலாளர்கள் மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே விஜயம் செய்திருந்த போது கேள்வி எழுப்பினார்கள். அந்த
ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அவர்கள், நேற்று 30,000 மெற்றிக் டொன் பசளை கிடைத்தாகவும், எதிர்வரும் 08 ஆம் திகதி மேலும் 30,000 மெற்றிக் டொன் பசளை கிடைக்கவுள்ளதாகவும், பசளைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக ஒரு சிலர் பொய் பிரசாரங்களை செய்வதாகவும் தெரிவித்தார்கள். விவசாயிகளை அவதிப் படுவதற்கு அரசாங்கம் ஒரு
போதும் அனுமதிக்காது என அமைச்சர் அவர்கள் மேலும் சுட்டிக் காட்டினார்கள்.

 

பொருளாதார மத்திய நிலையங்களுக்கு விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்ய தேவையான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாலும் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாலும் அந்த உற்பத்திகளை அந்த விவசாயிகள் எந்த விதமான
இடையூறுகளும் இன்றி விற்பனை செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆகையால், வாய்ப்பேச்சுகளுக்கு ஏமாறாமல் உரிய உற்பத்திகளை பொருளாதார மத்திய நிலையங்களில் விற்பனை செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் அவர்கள் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்கள். வியாபாரிகளுக்கும் இடையூறுகள் ஏற்படாத வகையில் வினைத் திறன் வாய்ந்த ஒரு வேலைத் திட்டம் செயற்படுத்தப் பட்டுள்ளதாகவும் மற்றும் ஊரடங்கு சட்டம் அமூலிலிருந்தாலும் பொது மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாத ஒரு வேலைத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப் படுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன் போது மேலும் தெரிவித்தார். கொழும்பு மாவட்ட செயலாளர் திரு பிரதீப் யசரத்ன அவர்கள் அடங்கலாக அரச உத்தியோகத்தர்களும், அமைச்சின் அதிகாரிகளும், பொலிஸ் பிரிவு மற்றும் சுகாதாரப் பிரிவு ஆகிய வற்றின் உத்தியோகத்தர் பலரும் மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்கான அவதானிப்பு விஜயத்தில் கலந்து கொண்டனர்.

 

02.   03.

08.   11.

14.   15.

16.   17.

voice-record-icon 1608195 Voice Cut 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 05 நவம்பர் 2020 09:36

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்