English (UK)SinhalaSriLankaTamilIndia


வெலிசற பொருளாதார மத்திய நிலையம் தொகை வியாபாரிகளுக்கு 09 ஆம் திகதி (எதிர்வரும் திங்கட்கிழமை) திறந்து வைக்கப்படும்

09.

நாரஹேன்பிட்டிய, இரத்மலான, போக்குந்தர ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை நாளை முதல் தொகை வியாபாரிகளுக்கு திறந்து வைப்பதற்கு நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ ஆகியோர் நேற்றைய தினம் இந்த மத்திய பொருளாதார நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டது. பொலிஸ் உத்தியோகத்தர்களினதும், சுகாதார மருத்துவ அதிகாரிகளினதும் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்களினதும் விஷேட கண்காணிப்பின் கீழ் வியாபார செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும். வெலிசற பொருளாதார மத்திய நிலையத்தை மஹிந்தானந்த அளுத்கமகே, சஷிந்திர ராஜபக்ஷ, மேல் மாகாணத்திற்கு பொறுப்புடைய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் அடங்கலாக பல அதிகாரிகளும் சென்று பார்வையிட்டனர். வர்த்தக சங்கப் பிரதிநிதிகளிடமும் மற்றும் சுகாதார அதிகாரிகளிடமும் நீண்டநேரம் விடயங்களை இதன் போது கேட்டறிந்த அமைச்சர் அவர்கள் வெலிசற பொருளாதார மத்திய நிலையத்தில் பணியாற்றும் 365 ஊழியர்களையும் நாளைய தினம் PCR பரிசோதனைக்கு விரைவில் அனுப்ப தேவையான நடவடிக்கையை எடுத்தார்கள். அந்தப் பரிசோதனைகளின் முடிவுகளை
கூடுமான விரைவில் பெற்றுக் கொள்வது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் சனிக்கிழமை இந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கு பொலிஸாரின் உதவியுடன் முழுமையாக தொற்றுநீக்குவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் அமைச்சர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள். பின்னர் திங்கட்கிழமை (9) சுகாதார மருத்துவ அதிகாரி அடங்கலாக சுகாதாரப் பிரிவினது முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தை தொகை வியாபாரிகளுக்கு திறந்து வைத்து பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிக்க இந்த விஜயத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்களை மாத்திரம் இந்த பொருளாதார மத்திய நிலையத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்குமாறும் மற்றும் கடுமையாக சுகாதாரப் பிரிவுகளின் அறிவுரைகளை செயற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மஹிந்தானந்த அவர்கள் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தின் முகாமைத்துவத்திற்கும் அறிவுறுத்தினார்கள்.

இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தை அண்மித்த பகுதியிலுள்ள பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் சுகாதாரப் பிரிவுகளின்
அறிவுரைகளைப் பின்பற்றி கடமைகளை நிறைவேற்றுமாறு இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ அவர்கள் இதன் போது கேட்டுக் கொண்டார்கள். குறிப்பாக நியாய விலையை செய்றபடுத்துமாறும் இதன் போது இராஜாங்க அமைச்சர் ஒரு விஷேட வேண்டுகோளையும் விடுத்தார்.

 

  03.   08.

05.  07.

voice-record-icon 1608195  Voice Clip


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 04 நவம்பர் 2020 08:40

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்