English (UK)SinhalaSriLankaTamilIndia


மேல் மாகாணத்தில் மூடப்பட்டுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை திறந்து வைக்கப்படும்

17.
 

பொருதார மத்திய நிலையங்கள் தொகை வியாபாரத்திற்கு மாத்திரம் திறந்து வைக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கூறுகின்றார்கள். மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமூலில் இருந்தாலும் 2020.11.04 ஆம் திகதி முதல் தொகை வியாபாரத்திற்கு இந்த பொருளாதார மத்திய நிலையங்களை திறந்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அறிவுரைகளின் பிரகாரம், பொருளாதார புனர்வாழ்வுக்கும் மற்றும் வறுமை ஒழிப்புக்குமான ஜனாதிபதி சிறப்புச் செயலணியின் தலைவர் பெசில் ராஜபகஷ அவர்களின் தலைமையில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே
அவர்கள் தெரிவித்தார்கள். இதன் பிரகாரம் இரத்மலான, நாரஹேன்பிட்ட, போக்குந்தர முதலிய பொருளாதார மத்திய நிலையங்களில் பணியாற்றும்
ஊழியர்களை நாளை 2020.11.03 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி அந்த பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ ஆகியோர் அடங்கலாக பல அதிகாரிகளும் இந்த மத்திய பொருளாதார நிலையங்களுக்கு சென்று பார்வையிட்டனர். ஊரடங்கு சட்டம் அமூலில் இருந்தாலும் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத் திட்டத்தை இவ்வாறு செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் பொருளாதார மத்திய நிலையங்களில் சில்லறை வியாபாரம் மேற்கொள்ளப்படாது எனவும், அனுமதிப் பத்திரம் உடைய தொகை வியாபாரிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்க இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

 

ஒரு நிறுவனத்தின் நிமித்தம் 15 வானகங்களுக்கு அனுமதிப் பத்திரத்தை விநியோகித்து, சுப்பர் மார்கெட்டு வியாபார கட்டிடத் தொகுதிகளை திறந்து
வைத்து பொருட்களைப் பகிர்ந்தளிக்க ஒரு விஷேட வேலைத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் அவர்கள் இங்கு தெரிவித்தார்கள்.

 

எவ்வாறாயினும் வேயாங்கொட பொருளாதார மத்திய நிலையம் ஏற்கெனவே இயங்கி வருகின்றது. அதே போல் வெலிசற பொருளாதார மத்திய நிலையத்தையும் இந்த அவதானிப்பு விஜயத்தின் பின்னர் விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.

20.  09.

31.  34.

03.  04.

07.  

 voice-record-icon 1608195 Video Cut 



கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 04 நவம்பர் 2020 08:59

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்