English (UK)SinhalaSriLankaTamilIndia


விவசாய உற்பத்திகளை ஏற்றியிறக்கும் நிமித்தம் புகையிரத சேவையை பயன்படுத்துவதற்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்த முடிவு

AGRI NEWS 01.

 

இலங்கையில் விவசாய உற்பத்திகள்தேயிலை மற்றும் பிற ஏற்றுமதி பயிர் உற்பத்திகள்எரிபொருள், உரங்கள் முதலியவற்றை எடுத்துச் செல்வதற்கு புகையிரத சேவை முக்கிய ஒரு போக்குவரத்து முறைமையாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டது. எனினும் இன்று இந்த ஏற்றியிறக்கல் முறையானது நெடுஞ்சாலைகள் வழிக்கு பரிவர்த்தனை அடைந்துள்ளது. இதன் விளைவாகபோக்குவரத்து செலவுகள் துரிதமாக உயர்வடைந்துள்ளனமேலும் வீணாதல்கள்போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் மாசடைதல்கள் போன்றவையும் அதிகரித்துள்ளன.

 

இதற்கான ஒரு தீர்வாகவிவசாய உற்பத்திகளை ஏற்றியிறக்கும் நிமித்தம் புகையிரத வசதிகளை மீண்டும் பயன்படுத்த கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே தலைமையில் நடந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

 

கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய துறைமுகங்கள் வழியாக நேரடியாக உரங்களை எடுத்துச் செல்லவும்காய்கறிகள்பழங்கள், தேயிலை மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்திகள் என்பவற்றை வட மற்றும் தென் பகுதி மேட்டுநிலப் பிரதேசங்கள் அடங்கலாக நகர்ப்புறங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு முன்மொழியப்பட்டது. மீன் உற்பத்திகளை எடுத்துச் செல்வதற்கு புகையிரத வண்டிகளில் அதிர்-குளிர்சாதன வசதிகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

 

அமைச்சர் அவர்கள் மேலும் கூறுகையில்அரச உர நிறுவனங்கள் உரங்களை எடுத்துச் செல்வதற்காக ஆண்டொன்றுக்கு 650 மில்லியன் டொலர் நிதியை செலவிடுவதாகவும், இந்த வசதிகளைப் பயன்படுத்துவதால் ஏற்றியிறக்கல் செலவை 50% குறைக்க எண்ணுவதாகவும் தெரிவித்தார்கள்.

 

இந்த நிகழ்வில், கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களும், இராஜாங்க அமைச்சர் மொஹான் த சில்வா அவர்களும், இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அவர்களும், கமத்தொழில் அமைச்சின் செயலாளரும், இராஜாங்க அமைச்சுகளின் செயலாளர்களும், அரச உரக் கம்பனிகளின் தலைவர்களும், புகையிரத பொது முகாமையாளர் அவர்களும், துறைமுக அதிகார சபையின் தலைவர் அடங்கலாக ஏனைய அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

AGRI NEWS 02.

  AGRI NEWS 03.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 08 அக்டோபர் 2020 04:55

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்