කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



ரூ .700 பெறுமதியான காய்கறிப் பொதிசந்தையில் ரூ .350 சலுகை விலையில்

AGRI NEWS PHOTO 01.2020.09.08

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின்வளமான தூரநோக்குஎனும் கனவை நனவாக்கும் வகையில்விவசாயிகள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்புகளுக்கும் நிவாரணத்தை வழங்கும் நிமித்தம் கமத்தொழில் அமைச்சு ஒரு விஷேட நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டம் கௌரவ கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் செயற்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் அதே வேளையில் நுகர்வோருக்கு சலுகை விலையில் மரக்கறி பொதிகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பும் கிட்டும்.

 

கரட்டு, இலங்கை உருளைக்கிழங்கு, பீற்றூட்டு, தக்காளி, லீக்ஸ் மற்றும் நோகோல் முதலிய 06 வகையான மரக்கறிகள் அடங்கிய ஒரு மரக்கறிப் பொதியின் சந்தைப் பெறுமானம் 700ரூபாவாகும். இடைத்தரர்களின் தலையீடுகளின்றி நேரடியாக விவசாயிகளின் உற்பத்திகளை நுகர்வோர் கொள்வனவு செய்யக் கூடிய வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு அத்தகைய ஒரு மரக்கறிப் பொதியை 350ரூபா போன்ற ஒரு சலுகை விலையில் கொள்வனவு செய்ய முடியும்.

 

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், இடைத்தரகர்களின் தலையீடுகளின்றி விவசாயிகளின் உற்பத்திகள் கமநல அபிவிருத்தி நிலையங்களின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு அவை நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும். தேசிய உணவுகள் ஊக்குவிப்பு சபையின் மூலம் இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு கோட்டை புகையிரத நிலயம், மரதான புகையிரத நிலையம், இசுருபாய, சுகுறுபாய, செத்சிறிபாய மற்றும் நுகோகொட ஆகிய 6ஸ்தலங்களில் சலுகை விலை மரக்கறிப் பொதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். கண்டி மாவட்டத்தின் 03 இடங்களிலும் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஹதபிம அதிகார சபையினது பங்குபற்றலில் செயற்படுத்தப்படுகின்றது.

 

 
AGRI NEWS PHOTO 02 .2020.09.08   AGRI NEWS PHOTO 03.2020.09.08   
 
AGRI NEWS PHOTO 04.2020.09.08   AGRI NEWS PHOTO 05.2020.09.08
 
 
voice-record-icon 1608195  Voice Clip

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்