English (UK)SinhalaSriLankaTamilIndia


ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆசியா-பசிபிக் பிராந்திய ஆன்லைன் மாநாட்டில் புத்தாக்கத்திற்கும் மற்றும் டிஜிட்டல் விவசாய தீர்வுகளுக்குமான தேவையை இலங்கைவலியுறுத்தியது.

  00004

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும்விவசாய அமைப்பினது(FAO) ஆசிய-பசிபிக் பிராந்திய மாநாட்டின் (APRC) 35-வது அமர்வில் உரையாற்றிய கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, டிஜிட்டல் விவசாய தீர்வுகள் ஆகியன அடங்கலாகபுத்தாக்களின் ஊடாக நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விவசாயத் துறையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களுக்கும் மற்றும் புத்தாக்கங்களுக்குமான அணுகலை வழங்கவும் அவற்றை விரிவுபடுத்தவும் வேண்டியதன் அவசியத்தையும் அவர் மேலும் வலியுறுத்தினார். வலுவான உணவு முறைகளை உருவாக்குவதும்மற்றும்காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் விவசாயத் துறையின் இசைவுத் திறனை அதிகரிப்பதும்அதே போல்இயற்கை வளங்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் அவசியம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

 

ஐக்கிய நாடுகளின்உணவு விவசாய அமைப்பினது (FAO) ஆசியா பசிபிக் பிராந்திய மாநாட்டில் இலங்கை தூதுக் குழுவுக்குதலைமை வகித்த திரு.அலுத்கமகே, இலங்கையும் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் (FAO) 1948 ஆம் ஆண்டில் இலங்கை அந்த அமைப்பின் உறுப்புரிமையை பெற்றதிலிருந்து வலுவான பங்காளித்துவத்தை பேணி வருகின்றன என கூறினார். இந்த பங்காளித்துவம் பற்றி பாராட்டவும்பட்டது. இலங்கையின் விவசாயத் துறையை ஒரு வாழ்வாதார துணைத் துறையிலிருந்து தேசிய பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்கும்மாற்று வருமானம் ஈட்டக் கூடிய உற்பத்தித் துறையாக மாற்றுவதில் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினது (WFO) தொழில்நுட்பமும் மற்றும் ஆலோசனையும் நாட்டிற்கு பெரிதும்உதவுவதாகவும் அவர் கூறினார்.

 

சிறு விவசாயிகளுக்குஇலாபம் போதியளவில் கிடையாமை,அதே போல்விவசாயிகளுக்கு முறையான காப்புறுதித் திட்டம் இல்லாமை, விவசாயஇரசாயன முகாமைத்துவத்தில்தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பயிர்ச் செய்கைப் போகங்களில் ஏற்படுகின்றகாலநிலை மாற்றங்களை எதிர்வுகூற முடியாமை போன்ற தற்போது இலங்கையினது விவசாயத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இலங்கை தூதுக் குழு கவனம் செலுத்தியது. இந்தப் பிரிவுகளில் தொழில்நுட்பம், கொள்கை ஆகியன தொடர்பான திட்டங்களுக்கும் மற்றும் பிற திட்டங்களுக்கும், இதன் போது, உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினது (WFO) தொடர்ஆதரவு எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆசிய-பசிபிக் பிராந்திய மாநாட்டில் உரையாற்றிய ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பணிப்பாளர் நாயகம் திரு. கு டோங்-யூ, தேசிய அரசாங்கங்கள், விவசாயிகள், தனியார் துறை, புத்திஜீவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல பங்காளித்துவத் தரப்புகள், புத்தாக்க கூட்டாண்மை என்பவற்றின் மூலம் டிஜிட்டல் யுகத்தை அதிகம் பயன்படுத்த செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறினார்.

 

இந்த பங்காளித்துவங்களை செயல்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு செயல்பட்டு வருகிறது.

 

சான்றுகளின் அடிப்படையிலான, உரிய நாட்டினால் அதன் சுழ்நிலைக்கு ஏற்ப வழிகாட்டப்படும் மற்றும் பங்காளித்துவம் வகிக்கப்படுகின்றஇந்த முயற்சிகளின் மூலம் வறுமையையும், பட்டினியையும் மற்றும் அனைத்து வகையான ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் ஒழிக்கக் கூடிய வகையில் விவசாயத் துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் நிலையான கிராமிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துவதற்கும் இலக்குக்கொள்ளப் படுகின்றது.

 

"நாட்டின் தேசிய திறன் மற்றும் அதற்கு கிடைக்கும் சர்வதேச ஆதரவு, மட்டுப்பட்டளவில் காணப்படும் அல்லது இயற்கை அல்லது மனிதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சவால்களை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு இந்த நிகழ்ச்சித் திட்டங்களின் போது முன்னுரிமை அளிக்கப்படும்" என உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினது பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

 

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினது ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய மாநாடு (APRC) பிராந்தியத்திலும், அந்த பிராயந்தியத்திலுள்ள நாடுகளிலும் தற்போதைய முன்னுரிமைகள் மற்றும் COVID 19 இன் தாக்கம், விவசாய நிலை, இயற்கை வளங்கள் முகாமைத்துவம், உணவுப் பாதுகாப்பு என்பன பற்றிகலந்துரையாடுவதற்கான ஒரு மன்றமாக விளங்கியது. இந்த பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பையும்அதே போல் ஊட்டச்சத்தையும் மேம்படுத்த உதவுகின்ற கூட்டாண்மை, புத்தாக்கங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்கள் முதலிய அம்சங்களை முன்னிலைப்படுத்தவும், பிராந்திய மற்றும் பூகோளக் கொள்கைகள், ஒழுங்குமுறை என்பன பற்றிய பிரச்சினைகளை வெளிப்படுத்தவும் இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

 

கோவிட் 19 தொற்றுநோய் பரவல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொது சுகாதார பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் ஆன்லைன் வீடியோ மூலம் நடைபெற்ற இந்த மாநாட்டில் 46 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பூட்டான் அரசு நடத்திய ஆசிய-பசிபிக் பிராந்திய கூட்டத்தில் 400 எண்ணிக்கைக்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

00009   00008
 
00007   00006
 
00005   00003
 
00003-c   00002
 

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 04 நவம்பர் 2020 07:27

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்