01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


"பற்றாக்குறையின்றி எரிவாயுவை விநியோகிக்க எரிவாயு விநியோகத் தரப்புகள் சங்கம் உறுதியளிக்கின்றது" 2019.11.05

2019.11.05i

 

இந்த மாதத்தில் இருந்து எந்தவிதமான பற்றாக்குறையும் இன்றி தேவைக்கு ஏற்ப எரிவாயுட்களை விநியோகிக்க முடியும் என எரிவாயு விநியோகத் தரப்புகளினது இரண்டு சங்கங்களின் அதிகாரிகள் இன்று (05) முற்பகல் வாழ்க்கைச் செலவுகள் பற்றிய குழுவின் முன்னிலையில் உறுதியளித்ததாக வாழ்க்கைச் செலவுகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ கமத்தொழில் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் தெரிவித்தார்கள்...

எரிவாயுவின் விலை குறைந்த காரணத்தினால் அதிகளவு கேள்வி ஏற்பட்டமை, சவுதி அரேபிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பிணக்கு நிலவரம் அதே போன்று பாதகமான காலநிலை விளைவாக கப்பல் போக்குவரத்துக்கு தடை ஏற்படுதல் முதலிய விடயங்களினால் இந்த எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். எவ்வாறாயினும் நத்தார் பண்டிகையையும் மற்றும் புது வருடத்தையும் முன்னிட்டு தேவையான எரிவாயு தற்பொழுது இலங்கைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

நிதி அமைச்சில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுகள் பற்றிய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

நிதி அமைச்சின் கீழ் இயங்குகின்ற லிற்றோ எரிவாயு கம்பனிகளின் சங்கங்கள் மற்றும் தனியார் துறைக்கு சொந்தமான தனியார் துறைக்குரிய லாப் எரிவாயு கம்பனிகள் சங்கம் முதலிய சங்கங்களின் உயர் முகாமைத்துவ அதிகாரிகளும் முற்பகல் நிதி அமைச்சினது கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவுகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன் போது குறித்த அந்த அதிகாரிகள் குறித்த உறுதிமொழியை அளித்திருந்தனர்.

நாளாந்தம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் வீட்டு எரிவாயு சிலின்டெர்களின் எண்ணிக்கையை 75000 நூறு இலட்சம் வரை அதிகரித்து எரிவாயு பற்றாக்குறை ஒழிக்கப்படும் எனவும் இதன் போது லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் ஜனக பத்திரத்ன அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இதற்கிடையில், லாப் எரிவாயு கம்பனியினது பிரதான நிறைவேற்று அதிகாரி சமிந்த எதிரிவிக்ரம அவர்கள், கம்பனி நாளாந்தம் சந்தைக்கு விநியோகிக்கும் எரிவாயுட்களின் அளவுகள் நூற்றுக்கு 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதே போல் 27000 டொன் அளவான எரிவாயுட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் லாப் எரிவாயு கம்பனியின் நிறைவேற்று அதிகாரி வாழ்க்கைச் செலவுகள் பற்றி குழுக் கூட்டத்தின் போது இவ்வாறு உறுதியளித்தார்.

 

2019.11.05iii 2019.11.05ii


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 07 நவம்பர் 2019 08:58

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்