01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றின் இறக்குமதிகள் நிறுத்தப்படும் - கோழி இறைச்சி 450 ரூபாய், முட்டை 17 ரூபாய்.

2019.10.23i

எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பற்றாக்குறையின்றி ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 450 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு கோழி இறைச்சியை உற்பத்தி செய்யும் தரப்புகளின் சங்கம் தனது இணக்கத்தைத் தெரிவித்துள்ளது.

கமத்தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கோழி இறைச்சியை இறக்குமதி செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடலின் போது கோழி இறைச்சியை உற்பத்தி செய்யும் தரப்புகள் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஆகையால், தோல் நீக்கப்படாத ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 450 - 460 ரூபா வரையான விலையிலும் மற்றும் தோல் நீக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை உச்ச விலையான 570 ரூபா விலையிலும் விற்பனை செய்ய அந்தத் தரப்புகள் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளன.

இந்த விலைகள் எதிர்வரும் சனவரி மாதம் வரை செல்லுபடியாக இருக்கும் எனவும், கோழி இறைச்சியை பற்றாக்குறையின்றி பெற்றுக் கொடுக்கவும் அந்தத் தரப்புகள் உடன்பட்டன. இது பற்றிய இணக்க உடன்பாடு ஒப்பந்த ஆவணம் அந்த சங்கத்தின் சங்க உறுப்பினர்கள் கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிகழ்வில் கோழி இறைச்சி உற்பத்தி செய்யும் தரப்புகள் சங்கத்தினது உத்தியோகத்தர்களான புஸ்ஸல்லாவ மீட் பட்ரடியுஸெஸ் எனும் தனியார் நிறுவனத்தின் திரு பிலிப் வேவிட்ட அவர்கள் அடங்கலாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் 15 பிரதான சங்கங்களின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். மேலும் பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் பொதுத் திட்டமிடல்கள் அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தனி விஜேவர்த்தன, கமத்தொழில் ராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சாந்தா விஜேரத்ன, ஹெக்டெர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகப் பணிப்பாளர் திரு துமிந்த பிரியதர்ஷன ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பற்றாக்குறை இன்றி 17.00 ரூபா விலையில் முட்டையை விற்பனை செய்வதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தித் தரப்புகளின் சங்கம் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தின் போது இணக்கம் தெரிவித்தது.

ஆகையால், எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் வரை பற்றாக்குறை இன்றி முட்டைகளை விநியோகிப்பதற்கும் உடன்பட்ட அந்த தரப்பு ஒரு முட்டையின் சில்லறை விலையை 19 ரூபா வரை குறைப்பதற்கும் மற்றும் விற்பனைத் தரப்புகளுக்கு அறிவிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் உடன்பட்டன.

ஒரு முட்டையின் தற்போதைய உற்பத்தி ஆகுசெலவு அடங்கிய விலை ரூ.15.62 எனவும், அதன்படி ஒரு சிவப்பு முட்டையின் விலை ரூ.19.50 விலையிலும், ஒரு வெண்ணிற முட்டை ரூ.18.50 விலையிலும் சில்லறைக்கு விற்பனை செய்யப் படும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் திரு சரத் ரத்நாயக்க அமைச்சரிடம் கூறினார்.

ரூ.17 மொத்த விலையில் முட்டையை விற்பனை செய்வதற்கும் வாக்குறுதி அளித்த அவர் 037-2293300 எனும் உடனுக்குடனான தொலைபேசி இலக்கத்தை அழைத்து முட்டை விற்பனை பற்றிய பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு அகில இலங்கை முட்டை உற்பத்தித் தரப்புகளின் சங்கம் இதன் போது அந்த தொலைபேசி இலக்கத்தையும் அறிமுகப்படுத்தியது.

2019.10.23ii 2019.10.23iii 2019.10.23iv 2019.10.23ix 2019.10.23v 2019.10.23vi


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019 09:19

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்