01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


எதிர்வருகின்ற புத்தாண்டு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் - அமைச்சர் பி. ஹரிஷன்

2019.10.21xiii

தற்பொழுது 450-500 ரூபாவுக்கு இடையப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாயின் விலையைக் குறைக்கும் நிமித்தம் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் செத்தல் மிளகாய்க்கான இறக்குமதி வரியை 25 ரூபா முதல் 05 ரூபா வரை அதாவது 20 ரூபாவால் குறைப்பதற்கும், இறக்குமதி செய்யப்படும் மீனின் விலையைக் குறைக்கும் நிமித்தம் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் மீனுக்கான இறக்குமதி வரியை 100 ரூபா முதல் 25 ரூபா வரை அதாவது 75 ரூபாவால் குறைப்பதற்கும் வாழ்க்கைச் செலவுகள் பற்றிய குழு தீர்மானித்ததாக அதன் தவிசாளர் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் இன்று (21) தெரிவித்தார்கள்.

இதற்கிடையில், எதிர்வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு, தற்பொழுதுள்ள கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகளைக் கட்டுப் படுத்தும் வகையில், கோழி இறைச்சிகளையும் மற்றும் முட்டைகளையும் இறக்குமதி செய்வதற்கு, இதன் மூலமாக அவகாசம் கிடைக்கும் எனவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அதே போல், அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 48,000 மெற்றிக் டொன் அளவான நெல்லை சிறு மற்றும் நடுத்தர அளவான அரிசி ஆலை உரிமையாளர்களின் மூலமாக மிகவும் விரைவில் அரிசியாக்கி, சதொச நிறுவனத்தினூடாக ஒரு கிலோ கிராம் புழுங்கல் அரிசியை 80 ரூபா விலையிலும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியை 85 ரூபா விலையிலும் விற்பனை செய்வதற்கு தீர்மானித்ததாக அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள். 

2019.10.21xiv2019.10.21xix  2019.10.21xv2019.10.21xvi 2019.10.21xvii 2019.10.21xviii


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2019 05:45

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்