01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


பசளைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சொல்லப்படும் விடயம் முற்றிலும் பொய்யானது. பெரும்போகப் பயிர்ச் செய்கைக்கு அவசியமான பசளைகள் இறக்குமதி செய்யப்பட்டு தயாராகவுள்ளன - அமைச்சர் பி. ஹரிஷன்

2019.10.21i

நாட்டிற்கு அவசியமான பசளைகள் ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு விதத்திலும் பசளைக்கு பற்றாக்குறை நிலவுவ இல்லை எனவும், கமத்தொழில் கிராமிய பொருளாதார விவகாரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் ஹுணுபிட்டியில் அமைந்துள்ள அரசாங்கத்தின் பசளைக் களஞ்சியசாலைகள் ஆகிய லக் பொஹர மற்றும் வர்த்தக உர களஞ்சியசாலைகளுக்கு விஜயத்தை மேற்கொண்டு அவதானித்த பின்னர், அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

பெரும்போகத்தில் நெற் பயிர்ச் செய்கைக்கு தேவையான பசளைகள் அடங்கலாக இடைக் காலப் பயிர்ச் செய்கைக்கு அவசியமான பசளைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அதன் பிரகாரம், 2019 ஆம் ஆண்டு பெரும்போகத்திற்கு தேவையான 148,162 மெற்றிக் டொன் அளவான யூரியா பசளையும், 36, 530.54 மெற்றிக் டொன் அளவான ட்ரிப்ல் சூப்பர் பொசுபேற்று பசளையும், 44, 833.5 மெற்றிக் டொன் அளவான மியுரேட்டுப் பொட்டாசியம் பசளையும் அரசாங்கத்தின் உரக் கம்பனிகளின் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். 2019 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் சுமார் 1,968,147.72 ஏக்கர் அளவான காணிகளில் நெல் பயிரிடப்படும் என எதிர்பார்ப்பதாகவும் கமத்தொழில் அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள். ஏற்கெனவே 13 தனியார் நிறுவனங்களின் நிமித்தம் பசளை இறக்குமதி செய்வதற்கும் மற்றும் பசளைகளை பகிர்ந்தளிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.

ஜனாதிபதி வேட்பாளரினது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பசளைகளை இலவசமாகப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் இதன் போது அமைச்சர் அவர்களிடம் வினவினார்கள். அதன் போது அமைச்சர் கூறியதாவது இலவசமாக சமுர்த்தி நிவாரண நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்த முடியுமானால், பசளைகளையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் சாத்தியம் காணப்படும் என்று. அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு சாத்தியம் இருக்குமானால், பசளைகளையும் இலவசமாக பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஏற்கெனவே பசளைகளுக்கு என அரசாங்கம் வருடாந்தம் 35 பில்லியன் ரூபா நிதியை செலவிடுவதாகவும், நெல்லுக்கு அதில் ஒரு விவசாயிடம் இருந்து 50 கிலோ கிராம் நிறையுடைய ஒரு பசளை உறைக்கு 500 ரூபா தொகையும், மேலதிகப் பயிர்களுக்கு அதில் 1000 ரூபா தொகையும் அறவிடப்படுகின்றன என்றும், இதிலிருந்து அரசாங்கத்திற்கு 3.5 பில்லியன் ரூபா தொகை மாத்திரமே கிடைக்கின்றது என்றும், எஞ்சிய தொகையை அரசாங்கம் பொறுப்பேற்கின்றது என்றும் அமைச்சர் அவர்கள் இங்கு மேலும் தெளிவாக குறிப்பிட்டார்கள்.  

கமத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் பொறுப்புடன் கூறுகின்றேன், பசளைகளை உரிய போகத்திற்கு, உரிய நேரத்திற்கு, விவசாயிகளிடம் பெற்றுக் கொடுக்க தான் கடமைப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள். பசளைகள் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் காணப்படுமாயின், தேசிய உர செயலகத்தின் 011-2034329 எனும் உடனுக்குடனான தேலைபேசி இலக்கத்தை அழைத்து அது பற்றி அறியப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் அவர்கள் இங்கு மேலும் குறிப்பிட்டார்கள்.

இந்த நிகழ்வில் லக் உர கம்பனியின் தலைவர் திரு சோமசந்திர ஜயகொடி அவர்கள், வர்த்தக உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு துமிந்த வீரசிங்க அவர்கள் ஆகியோர் அடங்கலாக பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், முறையாக பசளைகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பான ஒரு விஷேட கலந்துரையாடலும் இன்று (21) ஆம் திகதி கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில் கமத்தொழில் அமைச்சில் நடத்தப்பட்டது.

இதன் போது, பசளைகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பில் விடயங்கள் கேட்டறியப்பட்டன. இதன் போது தெரிய வந்தது யாதெனில் ஒரு சில பிரதேசங்களில் மாத்திரம் பசளைக்கான பற்றாக்குறை நிலவுகின்றது என்று. இதன் போது அமைச்சர் அவர்கள் கூறியதாவது இந்த நாட்களில் மழை முன்கூட்டியே கிடைத்ததால் பசளைக்கு சற்று தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. ஏனைய பயிர்களுக்கு பாவிக்கப்படும் பசளைகளுக்கான பற்றாக்குறையும் நிலவுகின்றது.  நாம் எதிர்பார்க்கின்றோம், விரைவில் பசளைகளைப் பகிர்ந்தளிப்பதற்கு. மொனராகல், அம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில்தான் மேலதிகப் பயிர்களுக்கான பசளைகளின் தேவை எழுந்துள்ளது”. இதன் போது, அமைச்சர் அவர்கள் கூறியது யாதெனில் பற்றாக்குறை இன்றி பசளைகளைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று.

2019.10.21ii2019.10.21iii2019.10.21iv  2019.10.21ivi 2019.10.21ix 2019.10.21viii

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2019 05:39

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்