01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


ஆசிய பசுபிக் பிராந்திய ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்திற்கான (CIRDAP) நிருவாகக் குழு (Governing Council) நிறைவேற்றுக் குழு (Executive Committee) ஆகிய குழுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்துதல்

2019.10.14i

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய ஒன்றிணைந்த அறிவிருத்திற்கான நிலையம் (CIRDAP) 1979 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட பிராந்திய நாடுகளின் ஒரு சர்வதேச அமைப்பாகும். இதன் தலைமை அலுவலகம் பங்காளதேசத்தில் தாபிக்கப் பட்டுள்ளது. இதில் 15 பிராந்திய நாடுகள் உறுப்புரிமையைப் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான், பங்காளதேஷம், பிஜி தீவுகள், இந்தியா, இந்துனேசியா, ஈரான், லாஓசியா, மலேசியா, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், பிலிபைன், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியற்னாம் என்பன அத்தகைய உறுப்பு நாடுகளாகும். 1980 ஆம் ஆண்டு, இலங்கை இந்த அமைப்பின் உறுப்புரிமையைப் பெற்றது. இன்று வரை இலங்கை இந்த அமைப்பின் காத்திரமான ஒரு உறுப்பு நாடாக இருந்து வருகின்றது.

இந்த அமைப்பின் உறுப்புரிமையைப் பெறுவதன் ஊடாக ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு இடையில் ஒரு வலயமைப்பு சார்ந்த ஒருங்கிணைப்பு ஏற்பட்டு, அதன் மூலம் அந்த நாடுகளின் பல நிறுவனங்களுக்கும் மற்றும் அபிவிருத்தி பங்காளித்துவ தரப்புகளுக்கும் அணுகுபிரவேச வாய்ப்பு கிடைத்து, கிராமிய அபிவிருத்தியுடன் தொடர்புடைய பொது விடயங்களில் உறுப்பு நாடுகளுக்கு கொள்கை சார்ந்த தீர்மானத்தை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிட்டும் அதே நேரம், CIRDAP அமைப்பினது உறுப்பு நாடுகளின் கிராமிய அபிவிருத்தி சம்பந்தமான தேவைகள் தொடர்பில் வெளிக்கள அமைப்புகளினது உதவு தரப்புகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். இது தவிர, அபிவிருத்திப் பங்காளித்துவ தரப்புகளுடன் ஒருங்கிணைந்து மிக சிறந்த விதத்தில் நவீன புத்தாக்கள் தொடர்பான அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும், அதே போல் கிராமிய அபிவிருத்தி தொடர்பான ஆராய்ச்சிப் பங்காளித்துவ தரப்பாக ஆகுவதற்கும் சந்தரப்பம் கிடைக்கும்.

CIRDAP அமைப்பின் நிருவாக மற்றும் நிறைவேற்று குழுக் (Governing Council and Executive Committee Meeting) கூட்டங்கள் 2 வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தப் படுகின்றன.  அதன் நிமித்தம் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது ஆங்கில அகர எழுத்து வரிசையின் அடிப்படையிலாகும். அதற்கு இணங்க, 2017 ஆம் ஆண்டில் பிலிபைன் நாட்டில் நடத்தப்பட்ட குறித்த நிருவாகக் குழுக் கூட்டத்தின் போது  2019 ஆம் ஆண்டின் அடுத்த கூட்டம் இலங்கையில் நடத்தப்படுதல் வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

CIRDAP அமைப்பின் பணிப்பாளர் நாயகம் (Director General) இலங்கைக்கு வருகை விஜயம் செய்த நேரம், கௌரவ கமத்தொழில் அமைச்சர் விடுத்த வேண்டுகோள் பேரில் கலந்துரையாடப்பட்ட பின்னர் மேற்குறித்த இரண்டு கூட்டங்களையும் இலங்கையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அந்தக் கூட்டங்களை இலங்கையில் நடத்துவதற்கு தேவையான அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் நிமித்தம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிருவாகக் குழுவுக்கான உறுப்பு நாடுகளின் விவசாய விடயத்திற்கு பொறுப்புடைய கௌரவ அமைச்சர்கள் மற்றும் இந்த விடயம் தொடர்பான உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஆகையால், குறித்த நிறைவேற்றுக் குழுக் கூட்டம் 2019 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 8-9 ஆம் திகதிகளிலும் மற்றும் நிருவாகக் குழுக் கூட்டம் 2019 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 11 ஆம் திகதியிலும் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடத்தப்பட்டன.  

இந்தக் கூட்டங்களில் விஷேட அதிதியாக கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் கலந்து கொண்டார்கள். இராஜாங்க அமைச்சர் கௌரவ அமீர் அலி, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு கே.டீ.எஸ். ருவன்சந்திர ஆகியோர் அடங்கலாக வெளிநாட்டு கமத்தொழில் அமைச்சுகளினது செயலாளர்களும் மற்றும் மேலதிகச் செயலளர்களும் கலந்து கொண்டனர். 

2019.10.14ii  2019.10.14iii

 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019 10:11

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்