01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


இலங்கையில் காலநிலையின் பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்கான ஒரு உலக வங்கி கருத் திட்ட அலுவலகத்தைத் தாபித்தல்

2019.10.09i 

 

இலங்கையில் காலநிலை வித்தியாசங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்தல், இடர் ஆபத்து நிலைமைகளை முன்கூட்டி இனங்காணல், அத்தகைய நிலைமைகள் பற்றி பொது மக்களுக்கு விழிப்பூட்டி இடர் ஆபத்துக்களைக் குறைக்கும் பொருட்டு நவீனத் தொழில் நுட்பங்களை பிரயோகித்து, இடர் ஆபத்து நிலைமைகளின் போது, செயல்படும் சகல நிறுவனங்களையும் தனியான ஒரு அலுவலகத்திற்கு ஒருங்கிணைக்கக் கூடிய காலநிலையின் பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்கான ஒரு உலக வங்கிக் கருத் திட்ட அலுவலகம் நீர்ப்பாசனத் திணைக்கள வளாகத்தில் கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள்,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் நீர்ப்பாசனத் திணைக்களம், காலநிலை அவதான நிலையம், கட்டிட ஆராய்ச்சி நிறுவகம், விவசாயத் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையம், மீன்பிடி அமைச்சு,நாரா நிறுவகம் போன்ற சகல நிறுவனங்களையும் பிரதிநிதிப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், RIMESநிறுவனத்தின் பணிப்பாளர் திரு ஏ.ஆர். சுப்பையா,கலாநிதி ஸ்ரீனிவாஸ்,நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம் திரு மோகன் ராஜா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு சிசிர குமார, நீர்ப்பாசன அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு அல்விஸ், காலநிலை அவதான நிலையத்தின் மேலதிகப் பணிப்பாளர் நாயகம் திரு ஏ.கே. கருனாநாயக்க, இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ப்ரிகேடியர் திரு அத்துல ஆகியோர் அடங்கலாக பல அதிகாரிகளுக்கு உலக வங்கியுடன் நீர்ப்பாசனத் திணைக்களம், இடர் முகாமைத்துவ அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு ஆகியவற்றினால் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணமும் இதன் போது பகிர்ந்தளிக்கப்பட்டது. 

 

2019.10.09ii  2019.10.09iii


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019 09:12

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்