01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


சிறுபோக விளைச்சலை முன்னிட்டு நடத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீ தளதா மங்கல பூஜை, வைபவ ரீதியில் நிறைவு பெற்றது.

2019.10.03i  

 

2019ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பெற்ற விளைச்சல்களை மதித்து ஸ்ரீ தன்த தாதுன் வஹன்சேவுக்கு பூஜை செய்யும் சிறுபோக விளைச்சல் ஸ்ரீ தளதா மங்கல பூஜைமிகவும் வெற்றிகரமாக இன்று (03)ஆம் திகதி, ஸ்ரீ தன்த தாதுன் வஹன்சேவின் அருகில் நடந்தேறியது.

 

அஸ்கிரிய மகாநாயக்க அதி வணக்கத்திற்குரிய வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பங்ஞ்ஞானந்த ஞானரத்ன நாயக்க தேரர் அவர்களினதும் மற்றும் மல்வத்து மகாநாயக்க அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் அவர்களினதும் ஆசிர்வாதத்துடன் கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில் சிறுபோக விளைச்சலை முன்னிட்டு நான்காவது தடவையாகவும் நடத்தப்பட்ட ஸ்ரீ தளதா பூஜை சம்பிரதாய ரீதியான வழிபாடுகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

 

ஸ்ரீ தன்த தாதுன் வஹன்சவின் தாதுவுக்கு பொறுப்புடைய மல்வத்து மகா விகாரை சங்க சபையின் அங்கத்தவரான திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த மேதங்கர தேரர் அவர்களின் அருமையான கண்காணிப்பில் இந்த மங்கல பூஜை நடத்தப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை வந்திருந்த விவசாயிகள் காலை முதல் விளைச்சல்களை முன்னிட்டு தளதா வஹன்சவுக்கு பூஜை வழிபாடு செய்யும் எதிர்பார்ப்புடன் அணிதிரண்டு நின்றனர்.

 

கமத்தொழில், கிராமிய விவகாரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களினதும், தியவடன நிலமே நிலங்க தேல அவர்களினதும், ஊரிவரிகே குணபண்டியலெ எத்தோ அவர்களினதும், மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் அவர்களினதும், தேசிய ஒன்றிணைந்த கமக்காரர் அமைப்பின் தலைவர் சுனில் கமகே அவர்களினதும் பங்குபற்றலில் இந்தத் தடவை சிறுபோக விளைச்சலில் இருந்து பெற்ற அரியை தங்கப் பாத்திரத்தில் நிரப்பி தளதா தேரரின் விருப்பத்துடன் செத் பிரித் கோஷங்களுக்கு மத்தியில் புதிய அரிசி பூஜை செய்யப்பட்டது.

 

புராதன காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகின்ற தளதா வஹன்சவுக்கு ஆதிவாசிகளினால் செய்யப்படும் தேன் பானி பூஜை நிகழ்வு ஊவரிகே குணபண்டிலெ எத்தோ அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.

 

சிறுபோக விளைச்சலை முன்னிட்டு நான்காவது தடவையாகவும் நடத்தப்பட்ட ஸ்ரீ தளதா பூஜை வைபவம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு கே.டீ.எஸ். ருவன்சந்திர, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவினது பணிப்பாளர் திருமதி சந்திரிக்கா அத்துகல ஆகியோரினதும் மற்றும் நாட்டின் சகல பிரதேசங்களையும் பிரதிநிதிப்படுத்தி சமூகமளித்திருந்த பலரினதும் பங்குபற்றலில் வைபவ நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றன.

2019.10.03ii  2019.10.03iii  2019.10.03iv 

2019.10.03v  2019.10.03vi  2019.10.03vii


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 08 அக்டோபர் 2019 07:42

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்