01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


பெரிய வெங்காயத்திற்கான வரி 39 ரூபாவால் குறைப்பு-கமத்தொழில் அமைச்சர் பி. ஹரிஷன்

2019.10.01vi

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 39ரூபாவால் குறைக்கப்பட்டதாக வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவின் தலைவர் கமத்தொழில், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார விவகாரங்கள் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

சந்தையில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பதன் காரணமாக நுகர்வோர் பாதிக்கப்படுவதால், இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி, பெரிய வெங்காயத்தை உற்பத்தி செய்யும் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவின் மூலம்  40ரூபாவால் அதிகரிக்கப்பட்டதையடுத்து இந்தியாவில் நிலவும் காலநிலைத் தாக்கங்களின் அடிப்படையில் இந்தியாவினால் பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் இந்த நாட்டின் ஒரு கிலோ கிராம் உள்நாட்டு வெங்காயத்தின் தொகையளவு விலை 250ரூபா முதல் 300ரூபா வரை அதிகரித்தது. ஆகையால், நுகர்வோருக்கு ஒரு சலுகையை வழங்கும் நிமித்தம் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை இன்று (01)ஆம் திகதி நள்ளிரவு முதல் 39ரூபாவால் குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது.

விவசாயத் திணைக்களத்தில் கிடைக்கக் கூடிய அறிக்கைகளுக்கு இணங்க ஏற்கெனவே உள்நாட்டு பெரிய வெங்காய உற்பத்திகளின் விளைச்சல்களில் 75%வீதம் அறுவடை செய்யப்பட்டு முடிவடைந்துள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள்.

இறக்குமதி வரி குறைக்கப்பட்டதையடுத்து, சந்தையில் தற்பொழுது நிலவும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலையில் 50ரூபாவுக்கும் 70ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவு விலை குறையும் என வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு எதிர்பார்க்கின்றது.

எதிர்காலத்தில் எகிப்து மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இறக்குமதித் தரப்புகளுக்கு வாய்ப்பு இருப்பதாக குறித்த குழு தெரிவித்தது. 

2019.10.01vii  2019.10.01viii  

2019.10.01x  2019.10.01xi 

2019.10.01xii  2019.10.01xiii  

2019.10.01xiv  2019.10.01xix  2019.10.01xv  

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 08 அக்டோபர் 2019 07:31

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்