01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


“பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளின் பயிர் அழிவுகள் தொடர்பான நஷ்டஈடுகள் இரண்டு வாரங்களுக்குள் செலுத்தி முடிக்கப்படும்” கமத்தொழில், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார விவகாரங்கள்மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன்

2019.09.26i

 

விவசாயக் காப்புறுதி சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள, காப்புறுதித் தவணைக் கட்டணங்களை செலுத்தியுள்ள சகல விவசாயிகளுக்கும் இரண்டு வாரங்களுக்குள் அவர்களுக்கு உரித்தான நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகளை செலுத்தி முடிக்குமாறு விவசாயக் காப்புறுதி சபையின் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

 

கிராமிய பொருளாதார விடயம் பற்றிய அமைச்சின் கேட்போர்கூடத்தில் அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தினது தேசிய அமைப்பாளர் திரு நாமல் கருனாரத்ன அவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் அவர்கள் இவ்வாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

 

அதன்படி, அம்பாறை, மொனராகல் மற்றும் எத்திமலே ஆகிய பிரதேசங்களில் விவசாயக் காப்புறுதிக் கட்டணங்களை செலுத்திய சுமார் 3000விவசாயிகளுக்கு இந்தப் பயிர் அழிவுகள் தொடர்பான நஷ்டஈட்டுத் தொகைகள் செலுத்தப்படவுள்ளன. இதன் நிமித்தம் ஏறக்குறைய 200மில்லியன் ரூபா நிதி செலவாகும் என உரிய அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர். குறித்த நஷ்டஈட்டுத் தொகைகளை செலுத்துவதில் காணப்படும் தாமதம் பற்றி அமைச்சர் அவர்கள் உரிய அதிகாரிகளிடம் வினவினார்கள். இதனையடுத்து, இது தொடர்பில் தேவையான நிதிகளை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமைச்சர் அவர்கள் அந்த உரிய அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்கள்.

 

இதற்கிடையில், சேனா புழுவினால் பயிர்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் தொடர்பான முதலாம் கட்ட நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள் செலுத்தி முடிக்கப்பட்டன. இரண்டாம் கட்டத்தின் கீழ் செலுத்தவிருக்கின்ற அம்பாறை மாவட்டத்தின் 12,995விவசாயிகளுக்கு 211மில்லியன் ரூபாவும், மொனராகல் மாவட்டத்தின் 12,254விவசாயிகளுக்கு 208மில்லியன் ரூபாவும் சேனா புழுவினால் ஏற்பட்ட பயிர் அழிவுகளுக்கான நஷ்டஈடுகளை இரண்டாம் கட்டத்தின் கீழ் செலுத்துவதற்கு தேவையான அனுமதியை கோருகின்ற ஒரு அமைச்சரவைப் பத்திரம் ஏற்கெனவே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அங்கீகாரத்தை அமைச்சரவைவழங்கியுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் இங்கு குறிப்பிட்டார்கள்.

 

அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் திரு வசந்த பியதிஸ்ஸ அவர்கள் அமைச்சருக்கு சமர்ப்பித்த அம்பாறை மாவட்டத்தின் சோனாநாயக்க விவசாயிகள் கருத்திட்டத்தினது இடது கடரை விவசாயக் குடியேற்றத்தில்,2018ஆம் ஆண்டில் நிலவிய தாவர நோய்களினால் பயிர்கள் அழிந்து பாதிக்கப்பட்டிருந்த 15,000விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கும் அமைச்சர் அவர்கள் தனது கவனத்தை செலுத்தினார்கள்.

 

அதன்படி பாதிக்கப்பட்ட 15,000விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளைப் பெற்றுக் கொடுக்கும் நிமித்தம் விரைவில் ஒரு அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் அவர்கள் விவசாயப் பிரதிநிதிகளிடம் வாக்குறுதி அளித்தார்கள்.

 

போஞ்சி விதை உற்பத்தியினால் எதிர்நோக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக இங்கு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இதன் போது, மந்தாரம் நுவர பிரதேசத்தில் போஞ்சி விதை உற்பத்தி விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள துர்ப்பாக்கிய நிலை பற்றி அமைச்சருக்கு விவசாயப் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தினார்கள்.

 

அதன்படி, தற்பொழுது தனியார் துறையினரினால் ஒரு கிலோ கிராம் விதை 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், விவசாயத் திணைக்களம் ஒரு கிலோ கிராம் விதையை 1,200ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் வேளையில், இடைத் தரர்களினால் ஒரு கிலோ கிராம் விதை 500ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு, சந்தையில் 1,800ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவது அநியாயம் எனவும் விவசாயப் பிரதிநிதிகளினால் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

 

உடனடியாக இந்த வாரத்திற்குள் விதைகள் தொடர்பான குழுவைக் கூட்டி நாட்டிற்கு தேவையான விதைகளின் உற்பத்தியை இனங்கண்டு தேவைக்கு ஏற்ப விதைகளை உற்பத்தி செய்வதற்கும், விவசாயிகளுக்கு நியாயமான ஒரு விலையை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு முறையியலை தயாரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு, அங்கு சமூகமளித்திருந்த விவசாயப் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

 

விவசாயிகளுக்கு என வழங்கப்பட்ட 10,000ரூபா பயிர் அழிவு தொடர்பான நஷ்டஈடு தற்பொழுது 40,000ரூபா வரை அதிகரிக்கப்பட்டமைக்கும் மற்றும் விதை உற்பத்தி விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் அந்த விதை உற்பத்தி விவசாயிகளே விலையை நிர்ணயிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டமைக்கும் திரு நாமல் கருனாரத்ன அவர்கள் அமைச்சருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.

  

இந்த நிகழ்வில் விவசாய காப்புறுதி சபையின் தலைவர் திரு சுமித் வர்ணகுலசூரிய அவர்களும், அதன் பணிப்பாளர் நாயகம் திரு பண்டுக்க வீரசிங்க அவர்களும் மற்றும் கமத்தொழில் அமைச்சின் இராஜாங்க செயலாளர் திருமதி சாந்தா விஜேரட்ன அவர்களும், விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் அடங்கலாக விவசாயிகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

2019.09.26ii   2019.09.26iii   2019.09.26iv   2019.09.26ix     2019.09.26vi   2019.09.26vii   2019.09.26viii   2019.09.26xi  2019.09.26xii   2019.09.26xiii   2019.09.26xiv   2019.09.26xix   2019.09.26xv   2019.09.26xvi   2019.09.26xvii   2019.09.26xviii   2019.09.26xx


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 01 அக்டோபர் 2019 05:10

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்