01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


பெரும்போகத்திற்கு தேவையான பசளை இறக்குமதி செய்யப்பட்டு விட்டது. அமைச்சர் பி. ஹரிஷன்

2019.09.19-3i

இந்த ஆண்டின் பெரும்போகத்திற்கு தேவையான பசளைகளை இந்த மாதம் முடிவடைய முன்னர் இறக்குமதி செய்து தயாராக வைத்திருக்க வேண்டும் என அரசாங்கத்தின் உரக் கூட்டுத்தாபனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் தெரிவித்தார்கள்.

 

கம்பெரலிய கருத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானமுடைய விவசாயக் குடும்பத்திற்கு ஸ்தீரமான ஒரு கூரையை அமைத்துக் கொள்ள உதவும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நொச்சியாகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விவசாயிகளுக்கு கூரைத் தகடுகளைப் பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

இதன் போது, மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ‘இந்த மாதம் 26 ஆம் திகதி 30,000 மெற்றிக் டொன் யூரியா பசளையை ஏற்றிக் கொண்டு ஒரு கப்பல் இலங்கைக்கு வருகின்றது. அதன் பின்னர், பெரும்போகத்திற்கு அவசியமான பசளைகளின் தேவை பூர்த்தியடையும்’.

 நெற் பயிர் செய்கைக்கு 229,526 மெற்றிக் டொன் பசளை இந்த ஆண்டின் பெரும்போகத்திற்கு தேவைப்படும் என எமக்கு பதிவாகியுள்ளது. இந்தப் பெரும்போகத்தில் 787,259 ஹெக்டேயர் அளவான காணிகளில் நெல் பயிரிடப்படும் என நாம் மதிப்பிட்டுள்ளோம்’.

 ‘பெரும்போகத்தில், நெற் பயிர் செய்கையின் நிமித்தம் 148,162.9 மெற்றிக் டொன் யூரியா பசளையும், 36,530 மெற்றிக் டொன் ட்ரிப்ல் பொசுபேற்று பசளையும் மற்றும் 44,833 மெற்றிக் டொன் எம்ஓபி பசளையும் ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பெரும்போகத்தின் நிமித்தம் அரசாங்க உரக் கூட்டுத்தாபனமாகிய வர்த்தக உரக் கூட்டுத்தாபனத்திற்கு 40% வீதமான பசளையையும், லக் பொஹர கூட்டுத்தாபனத்திற்கு 60% வீதமான பசளையையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது’ என அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

 இந்தத் தடவை, ரஷ்யா, வியற்னாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் தரமான பசளைகளை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முன்னைய போகங்களில், உரிய கால நேரத்திற்கு பசளைகள் கிடையாமையினால் விவசாயிகள் நிர்க்கதிக்கு ஆளாகினாலும், இந்த ஆண்டில், விவசாயிகளுக்கு உரிய நேர காலத்திற்கு தேவையான பசளைகளைப் பெற்றுக் கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.

 

2019.09.19-3iv

 

2019.09.19-3ix 2019.09.19-3v 2019.09.19-3vi

2019.09.19-3vii 2019.09.19-3viii 2019.09.19-3xi


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019 05:48

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்