01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


கோதுமை மாவின் விலையை அதிகரித்தது அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலே - அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள்

2019.09.09vi

தனியார் துறையின் கம்பனிகள் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதை தனது அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் அனுராதபுரம் ஹுருலுவெவ நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் காணப்படுகின்ற விவசாய வீதிகள் நவீனப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டமாகிய ‘தியவர நேயோ’ திட்ட வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலே இவ்வாறு தெரிவித்தார்கள். 

 

இறக்குமதி செய்யப்படுகின்ற மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுவது வாழ்க்கைச் செலவுகள் பற்றிய குழுவின் சிபாரிசின் அடிப்படையிலாகும். எனினும், அமைச்சரவையின் தீர்மானம் இன்றி ஒரு தனியார் துறைக் கம்பனி, கடந்த தினங்களில் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவுக்கான விலையை 5 ரூபாவால் அதிகரித்தமையை, வாழ்க்கைச் செலவுகள் பற்றிய குழுவின் தலைவர் என்ற ரீதியில் தான் ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை என அமைச்சர் பி. ஹரிஷன் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

 

இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்திலும், கோதுமை மாவு வெளிநாட்டு விலையுடன் ஒப்பிட்டு, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவு தொடர்பாக ஒரு கிலோ கிராமுக்கு என விலை அதிகரிக்கப்பட்டிருந்தது. எனினும், வாழ்க்கைச் செலவுகள் பற்றிய எமது குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் அந்த விலையை மீண்டும் திருத்தி, குறித்த கம்பனி அதிகரித்திருந்த விலை குறைக்கப்பட்டது. நாளை (10) ஆம் திகதி பிற்பகல் நேரத்தில் கூடவிருக்கும் வாழ்க்கைச் செலவுகள் பற்றிய கூட்டத்தில் இந்த கோதுமை மாவினது விலையை ஆராய்ந்து, கம்பனிகளின் வேண்டுகோள்களை கருத்திற் கொண்டு, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவு விலை நிர்ணயிக்கப்படும் எனவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.

 

தனியார் துறைக் கம்பனிகள் அரசாங்கத்தின் அனுமதி இன்றி மேற்கொள்ளும் இத்தகைய தீர்மானங்களை கண்டிப்பதாகவும், மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் சலுகை விலை தொடர்பில் ஒரு தீர்மானம் எட்டப்படும் எனவும், நாளைய தினம் எடுக்கப்படும் தீர்மானத்தை அமைச்சரவைக்கு அறிவித்து, இந்த வாரத்தினுள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவுக்கு ஒரு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

 

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் இயந்திராதிகளினதும் மற்றும் ஊழியர்களினதும் பங்களிப்புடன் செயற்படுத்தப்படும் தியவர நேயோ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நுவரவெவ நீர்ப்பாசனத் திட்டம், திஸாவெவ நீர்ப்பாசனத் திட்டம், ஹல்பானு கால்வாய் நீர்ப்பாசனத் திட்டம், நாச்சாதுவ நீர்ப்பாசனத் திட்டம், மகாவிலச்சிய நீர்ப்பாசனத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பாதைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் அந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஐந்தாவது திட்டமாகிய ஹுருலுவெவ நீர்ப்பாசனத் திட்டம் அமைச்சரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளுக்கும் அதே நேரம் ஊழிய உழைப்புக்கும் நீர்ப்பாசனத் திணைக்களம் 400 இலட்சம் ரூபா நிதியை செலவிடுகிறது.

 

இந்த நிகழ்வில், அனுராதபுர மாவட்டத்தின் நீர்ப்பாசனப் பொறியியலாளர் திரு பிரசன்ன த சில்வா, மற்றும் நீர்ப்பாசன முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டத்தின் பணிப்பாளர் திருமதி சந்திரிக்கா அத்துகல ஆகியோரும், இந்த ஹுருலுவெவ நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுகின்ற விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

2019.09.09i 2019.09.09ii 2019.09.09iii

2019.09.09iv 2019.09.09v 2019.09.09vi

2019.09.09vii 2019.09.09viii 2019.09.09viv

 

 

 

 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019 08:01

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்