01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


2019 பெரும் போகத்திற்கும் கிட்டடியில் நஷ்டஈடுகள் வழங்கப்படும் - அமைச்சர் பி. ஹரிஷன்

2019.08.29vii.jpg

 

2019 பெரும் போகத்தில் பயிர்களின் பாதிப்புகளுக்கு என நஷ்டஈடுகளை இந்த ஆண்டு திசம்பர் மாதத்திற்கு முன்னர் விவசாயிகளுக்கு செலுத்தக் கூடிய சாத்தியம் நிலவுவதாக கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் தெரிவித்தார்கள். கம்பஹா மாவட்டத்தில் 2018 சிறுபோக பயிர்ச் செய்கையின் போது பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கி வைப்பதன் நிமித்தம் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள்,

2018 ஆம் ஆண்டு முதல் நாம் முதல் தடவையாக விவசாயிகளுக்கு காப்புறுதித் தவணைக் கட்டணம் ஏதுமின்றி ஒரு ஏக்கருக்கு பயிர் அழிவு நஷ்டஈடாக 40000 ரூபா தொகையை வழங்கியுள்ளோம். அன்று ஒரு ஏக்கருக்கு என காணப்பட்ட பத்தாயிரம் ரூபா நஷ்டஈட்டுத் தொகையை நாம் நான்கு மடங்குகளினால் அதிகரித்தோம். அதாவது நாற்பது ஆயிரம் ரூபா வரை, முதல் தடவையாக அத்தகைய நஷ்டஈட்டு தொகையை நாம் வழங்குவதையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். நாம் இன்று இலங்கையில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்ற 23‚366 காணிகளுக்காக 20‚366 விவசாயிகளுக்கு 559 மில்லியன் ரூபா நஷ்டஈட்டு தொகையை வழங்கியுள்ளோம்.


அதே போன்று எதிர்பார்க்கின்றோம், 2018 - 2019 பெரும் போகத்திற்கும் பயிர்கள் அழிந்த காணிகளுக்கும் நஷ்டஈடுகளை வழங்க. அதன் நிமித்தம் தேவையான நிதிகளை ஒதுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் இந்த நாட்களில் எடுத்து வருகின்றோம். பெரும் போகத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்ட சுமார் 50‚000 ஏக்கர்கள் காணிகள் நிமித்தம் 30‚000 விவசாயிகளுக்கும் நஷ்டஈடுகளை வழங்க 1‚100 மில்லியன் ரூபா நிதி தேவைப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன். அந்தப் பயிர் அழிவு நஷ்டஈடுகள் எங்களால் வழங்கப்படுவது வரலாற்று முக்கியத்துவம் 

வாய்ந்ததாகும். அது மட்டுமன்றி வரலாற்றில் விவசாயிகளுக்கு பயிர் அழிவு நஷ்டஈடுகளை விரைவில் பெற்றுக் கொடுத்த அரசாங்கம் எமது அரசாங்கம்தான் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மிளகாய், பெரிய வெங்காயம், நெல், சோயா, சோளம், உருளைக் கிழங்கு போன்ற பயிர்களுக்கும் வெள்ளப் பெருக்கு அழிவு, வரட்சியினால் அழிவு, யானைகளினால் அழிவு மற்றும் கிருமிகள் மற்றும் நோய்களினால் அழிவு போன்ற அழிவுகளுக்கும் என விவசாயிகளுக்கு கமநலக் காப்றபுறுதி சபையும் இந்த நஷ்டஈடுகளை வழங்குகின்றது. கம்பஹா மாவட்டத்தின் 1576 விவசாயிகளுக்கு 230 இலட்சம் ரூபா நஷ்டஈடுகள் பிரதமரின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமை்சசர் அஜித் மான்னபெரும, கமநலக் காப்புறுதி சபையின் தலைவர் திரு சுமித் வர்னகுலசூரிய ஆகியோர் அடங்கலாக, விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.


2019.08.29i 2019.08.29ii 2019.08.29iii.jpg 

2019.08.29iv.jpg 2019.08.29ix.jpg 2019.08.29v.jpg 

2019.08.29vi.jpg 2019.08.viii 2019.08.29xi.jpg

2019.08.29xii.jpg 2019.08.29xiii.jpg

 

 

 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019 07:58

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் ,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்