01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


இரசாயனப் பசளைகளின் தகாத பாவனையைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பசளை நிவாரணத்தில் மோசடிகளை செய்பவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (கு.பு.தி.) குறிப்பீடு செய்யப்படுவார்கள் - அமைச்சர் பி.ஹரிஷன்

2019.05.31i

 

அரசாங்கத்தினால் வருடாந்தம் 35 பில்லியன் ரூபாவுக்கும் அதிகளவான பணத்தைச் செலவு செய்து விவசாயிகளுக்கு நெற் பயிருக்கும் மற்றும் ஏனைய பயிர்களுக்கும் என வழங்கப்படும் பசளை நிவாரணத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படுகின்ற இரசாயனப் பசளைகளை கெட்டண்ணெத்துடன் தனியார் கம்பனிகள் மோசடி செய்து பொருட்களை உற்பத்தி செய்வதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளது எனவும் மற்றும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

 

உர செயலகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், நிவாரணத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு யூரியா, ட்ரிப்ள் சுப்பர் பொசுபேற்று, மியுரேட்டு பொட்டாசியம், சல்பேற்று அமோனியம், டை அமோனியம் பொசுபேற்று, கல்சியம் அமோனியம் நைதரசன், சல்பேற்று பொட்டாசியம், சனிக் சல்பேற்று, கீசரைட்டு, கொமர்ஷியல் எப்சம் சோப்ட் போன்ற 10 பசளை வகைகளை நாம் பெற்றுக் கொடுக்கின்றோம்... 

நாம் நெல்லுக்கு என 50 கிலோ கிராம் பசளையை கமநல சேவை நிலையங்களினூடாக 500 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்கின்றோம். அதே போன்று நாம் ஏனைய பயிர்களுக்கு சந்தையில் அத்தகைய பசளைக்காக 1000 ரூபா விலையை நிர்ணயித்துள்ளோம். இந்த 50 கிலோ கிராம் பசளைக்காக அந்தந்த பசளை வகையின் நிமித்தம் அரசாங்கம் 1500 ரூபா முதல் 5000 ரூபா வரையான பணத்தை செலவிடுகின்றது. ஒட்டுமொத்தச் செலவு 35 பில்லியன் ரூபாவாகும். இத்தகைய பசளைகளை இறக்குமதி செய்யும் நிமித்தம், அரசாங்கத்தின் லக் பொஹர கம்பனியும் மற்றும் கொமர்ஷியல் பொஹர கம்பனியும் தவிர, 19 தனியார் கம்பனிகளுக்கு அரசாங்கம் இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது. அதே போன்று அந்தக் கம்பனிகளுக்கு, விவசாயிகளுக்காக மாத்திரம் பசளைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில், விவசாய செயற்பாடுகள் தவிர வேறு எந்த உற்பத்திகளுக்கும் பசளைகள் விநியோகிக்கப்படக் கூடாது என்பது தொடர்பான சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.  

எனினும், விவசாயம் சாராத பொருள் உற்பத்தியில் ஒரு சில பிரபல நிறுவனங்கள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் பசளைகளை தகாத முறையில் பாவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தக் கம்பனிகளுக்கு பசளைகள் தேவையாயின், நிவாரண விலையில் அல்லாது இறக்குமதி செய்யப்படும் விலையில் உரிய அனுமதியுடன் பெற்றுக் கொள்ள முடியும். எனினும், நிவாரண விலையில் வழங்கப்படும் இந்தப் பசளைகளை மோசடியாக விலைக்கு வாங்குவதற்கு இந்தக் கம்பனிகள் செயற்படுவது கவலகை்குரிய ஒரு விடயமாகும். 


நான், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் பொலிஸ் மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் அறிவிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளேன். நான் எதிர்பார்க்கின்றேன் இந்த குற்றம் தொடர்பாக விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கேட்டுக் கொள்வதற்கு. 


எமக்குத் தெரியும், அரசாங்கத்தினது நிவாரணத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் பசளையை தகாத முறையில் பயன்படுத்துவது 1982 இன் 12 ஆம் இலக்கப் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நிதியை மோசடி செய்வதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என இங்கு அமைச்சர் அவர்கள் மேலும் சுட்டிக் காட்டினார்கள்.  

 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 10 ஜூன் 2019 10:10

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 கமத்தொழில்,  கால்நடை வளங்கள் அபிவிருத்தி,

நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு 

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்