01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


2018 சிறுபோகத்தை இழந்த யான் ஒயா விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் நிகழ்வு

2019.04.01xv

 யான் ஒயா நிர்மாணப் பணிகளினால் 2018 ஆம் ஆண்டு சிறுபோகப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள இயலாது போன விவசாயிகளுக்கு நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள் கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில் அனுராதபுர மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வழங்கி வைக்கப்பட்டன. 

 

வாஹல்கட அபிவிருத்திக் கருத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட 71 விவசாயிகளுக்கு 67 இலட்சம் ரூபா நஷ்டஈடு இதன் போது வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் - ஒரு நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு முன்னர் அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுத்து, அவர்களை மீளக்குடியமர்த்தி முடிக்க வேண்டும். எனினும், யான் ஒயா நீர்த்தேக்கத் திட்டத்தின் சுற்றாடல் அறிக்கை அனுமதித்துக் கொள்ளப்பட்டது இதன் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர். நான் வன விலங்குகள் மற்றும் வனப் பரிபாலண அமைச்சின் அதிகாரிகளை 16 தடவைகள் சந்தித்துத்தான் உரிய சுற்றாடல் அறிக்கையை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தேன். தற்பொழுது நாம் எமது அமைச்சின் கீழ் நான் கீழ் மல்வத்து ஒயா நீர்த்தேக்க நிர்மாணத்தை ஆரம்பிக்கவுள்ளேன். அணைக்கட்டிண் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், மீளக்குடியமர்த்தல், வீடுகளை நிர்மாணித்தல் அதே போன்று வயல் காணிகளை பெற்றுக் கொடுத்தல் முதலிய கருமங்களை நிறைவு செய்யுமாறு நான் அறிவுரைகளை வழங்கினேன். அதற்கமைய, 210 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். இந்த நீர்த்தேக்கத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மிகவும் வசதிகள் நிறைந்த வீடுகளை கட்டிக் கொடுப்போம். அதே போன்று, சுற்றாடல் அறிக்கை நிறைவு செய்யப்பட்ட பின்னர், சுற்றாடலுக்கான பாதிப்புகளை குறைக்கும் வகையில் அவர்களுக்கு வயல் காணிகளையும் பெற்றுக் கொடுப்போம்.

இப்பொழுது, இந்த யான் ஒயா திட்டத்திற்கு எதிராக எப்பொழுதும் ஆர்ப்பாட்டங்கள்தான். பிரச்சினைகள் இருந்தன. காரணம் வன விலங்குகள் மற்றும் வனப் பரிபாலண அமைச்சுடன் சரியான ஒரு தொடர்பு இல்லாதிருந்தமை. அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை. நான் தலையிட்டு, இந்த நஷ்டஈடுகளை சிபாரி செய்து கொண்டேன்.

2020 ஆம் ஆண்டாகும் போது, இடது மற்றும் வலது கரை கால்வாய் மார்க்கங்களை நிறைவு செய்து, நீர்த்தேக்கத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படும். அத்துடன் நாம் 02 மீன்பிடிக் கிராமங்களை தாபிப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம் எனவும் அமைச்சர் அவர்கள் கூறினார்கள்.

இந்த நிகழ்வில், யான் ஒயா கருத்திட்டப் பணிப்பாளர் திரு உதய ஹேமகுமார, கருத்திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு உபுல் கொடிதுவக்கு, அனுராதபுர மேலதிக மாவட்ட செயலாளர் திரு கீர்த்தி கமகே உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

2019.04.01xiv   2019.04.01xvi   2019.04.01xvii

 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019 03:43

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் , கால்நடை அபிவிருத்தி,

நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 கமத்தொழில், கிராமிய விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,

நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு 

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்