01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


வட மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக போஷாக்கு வாய்ந்த அரிசி

2019.04.01iii

 வட மத்திய மாகாணத்தின் 16000 பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக போஷாக்கு வாய்ந்த அரிசியை வழங்கும் நிமித்தம் அரிசி உற்பத்தி செய்யும் உற்பத்தி நிலையம் அனுராதபுர மாவட்டத்தின் கல்னேவ கலங்குட்டிய பிரதேசத்தில் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

 

 

 கமத்தொழில் அமைச்சுக்கு சொந்தமான தேசிய உணவுகள் ஊக்குவிப்பு நிலையத்தின் கல்னேவ கலங்குட்டிய பிரதேச அரிசி உற்பத்தி நிலையத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இந்த போஷாக்கு வாய்ந்த அரிசியை வழங்கும் நிமித்தம் அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றது. உலக உணவுகள் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் கமத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் கீழ் இயங்குகின்ற உணவுகள் ஊக்குவிப்பு சபையுடன் இணைந்து, பாடசாலை மாணவர்களின் போஷாக்கு நிலையை உயர்த்தும் நோக்கில், இலவசமாக போஷாக்கு வாய்ந்த அரிசியை வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் அனுராதபுர மாவட்டத்தின் தம்புத்தேகம வலயக் கல்விப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது.   

 

 இந்தத் திட்டத்தின் அடிப்படையில் 61 கருத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மூன்று பெண்களில் ஒருவருக்கும் மற்றும் 5 வயதுக்கு குறைந்த நான்கு பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கும் போதியளவு போfலிக் அமிலம் இல்லாததால் போஷாக்கு குன்றி பாதிக்கப்படுவதை தடுப்பதும், எதிர்காலத்தில் இந்த போஷாக்கு குறைபாட்டு நோயிலிருந்து பிள்ளைகளை காப்பாற்றுவதும் போஷாக்கு வாய்ந்த அரிசியை இலவசமாக வழங்குவதன் நோக்கமாகும் என இதன் போது கமத்தொழில் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் தெரிவித்தார்கள்.

 

 இந்தக் கருத் திட்டத்தின் நிமித்தம் உலக உணவுகள் நிகழ்ச்சித் திட்டம் 53மில்லியன் ரூபா நிதியை செலவிடுகின்றது. பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு போஷாக்கு நிறைந்த அரிசியை வழங்கும் வைபவம் அனுராதபுர ஹெரிடேஜ் விழா மண்டபத்தில் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களினது தலைமையில் நடத்தப்பட்டது. இந்த வைபவத்தையடுத்து, அரிசி உற்பத்தி செய்யும் குறித்த இந்த நிலையம் கலங்குட்டிய பிரதேசத்தில் அமைச்சர் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

 

 கமத்தொழில் அமைச்சு, சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவ அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் மூலம் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஒருங்கிணைக்கப்படும். நிதிகளும் மற்றும் வள நபர்கள் பங்களிப்பும் உலக உணவுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமாக பெற்றுக் கொடுக்கப்படும். ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த பங்களிப்புகள் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும்.

 

 கலங்குட்டிய பிரதேசத்தில் போஷாக்கு நிறைந்த அரிசியை உற்பத்தி செய்யும் நிலையம் திறந்து வைக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் அதில் நிகழும் 

செயற்பாடுகளை அவதானித்த வேளையிலேயே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்கள்.

 

உலக உணவுகள் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் தேசிய உணவுகள் ஊக்குவிப்பு சபை ஆகியன ஒன்றிநை்து தம்புத்தேகம வலயக் கல்விப் பிரிவில் 61 பாடசாலைகளின் 16 000 மாணவ மாணவிகளுக்கு போஷாக்கு நிறைந்த ஒரு உணவு வேளையை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாம் செயற்படுத்துகின்றோம். இது வரை காலமும், நாம் அரிசியை இறக்குமதி செய்துதான் தேவையான அந்தப் போஷாக்குப் பொதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம். இப்பொழுது, நாம் எமது பிரதேசத்திலேயே தரமான நெல்லை, நெல் சந்தைப்படுத்தல் சபையிலிருந்து அல்லது அந்த நெல்லை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விலைக்கு வாங்கி, இந்த நிலையத்திலேயே வைத்து அரிசியாக குற்றி, பொதியிட்டு அதனை இந்தப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். அதே போன்று, இந்தக் கருத் திட்டத்தின் வெற்றிகரமான தன்மையை பொறுத்து, எதிர்வரும் மே மாதத்தின் பின்னர், அனுராதபுர மாவட்டத்திலுள்ள 570 பாடசாலைகளுக்கும் இந்த மதிய உணவு வேளையை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம். இதன் பின்னர், இலங்கை முழுதிலுமுள்ள பாடசாலைகளுக்கு இந்த நிகழ்ச்சித் திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதன் நிமித்தம் தேவையான அரிசி, உழுந்து மாவு போன்ற பிற தானிய மாவு வகைகளை இந்த நிலையத்திலேயே உற்பத்தி செய்யக் கூடிய சாத்தியம் நிலவுகின்றது. பாடசாலை மாணவர்கள் தவிர, பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கும் இந்த நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் போஷாக்கு வாய்ந்த அரிசியை விலைக்கு வாங்கும் வகையில், வாய்ப்புகள் அளிக்கப்படும் எனவும், அதனூடாக இந்தப் பிரதேசத்தின் பிள்ளைகளினது போஷாக்கு குன்றிய நிலையை குறைத்து, நல்ல ஆரோக்கியமான சிறுவர்களை உருவாக்குவோம் எனவும் அமைச்சர் அவர்கள் கூறினார்கள்.

 

 இந்த நிகழ்வில் கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் செயலாளர் திரு கே.டீ.எஸ். ருவன்சந்திர, தேசிய உணவுகள் ஊக்குவிப்பு சபையின் தலைவர் டாக்டர் எஸ்.எல்.ஏ. டேனியெல் ஆகியோரும் மற்றும் உலக உணவுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதிநிதிகள் அடங்கலாக பலரும் கலந்து கொண்டனர்.

 

 

2019.04.01i    2019.04.01ii   

 

 

      2019.04.01v    2019.04.01vi

 

2019.04.01vii    2019.04.01viii

 

 

 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019 03:30

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் , கால்நடை அபிவிருத்தி,

நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 கமத்தொழில், கிராமிய விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,

நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு 

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்