01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


புத்தாண்டு காலத்தில் அரசாங்கத்தின் மில்கோ, ஹைலன்ட் பால் உற்பத்திகள் அதிகரிக்கப்படும் - அமைச்சர் பி. ஹரிஷன்

2019.03.26iii

 

எதிர்வரும் புத்தாண்டு காலப் பகுதியில், மில்கோ, ஹைலன்ட் போன்ற பால் உற்பத்திகளை அதிகரிக்குமாறு கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், நேற்று மில்கோ பால் உற்பத்தித் தொழிற்சாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

 

பால் உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு கிடைக்கின்ற பாலின் அளவை அதிகரிக்கும் பொருட்டு பால் சேகரிக்கும் நிலையங்களை அதிகரிக்குமாறும், நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கிறீம் மற்றும் யோகட்டு ஆகியவற்றின் உற்பத்திகளின் அளவுகளை இருபதாயிரத்தால் அதிகரிக்குமாறும் அமைச்சர் அவர்கள் இதன் போது அறிவுறுத்தினார்கள்.

 வெளிநாட்டு பால் மாவு தொடர்பான பிரச்சினையையடுத்து, மில்கோ பால் உற்பத்திகளின் விற்பனை அதிகரித்துள்ளதால் சந்தையில் பற்றாக்குறை நிலவுவதாக இங்கு சுட்டிக் காட்டிய அமைச்சர் அவர்கள், நாளாந்த பால் மாவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்கள். நாளாந்த பால் விநியோகம், வரண்ட காலநிலையினால் ஒரு இலட்சம் லீற்றர் வரை குறைந்துள்ளதாகவும், அம்பேவெல பால் உற்பத்தித் தொழிற்சாலைக்கு, நாளொன்றுக்கு 04 இலட்சம் லீற்றர் பால் தேவைப்படுவதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் சுட்டிக் காட்டினார்கள்.

 பால் சேகரிக்கும் உத்தியோகத்தர்களுக்கு இந்த ஒரு சில மாதங்களினுள் ஒரு இலக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அடைவதற்கு தவறகின்ற அத்தகைய உத்தியோகத்தர்களுக்கு எதிராக தேவையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.

 

இந்த நிகழ்வில், மில்கோ கம்பனியின் தலைவர் கீர்த்தி மிஹிரிபென்ன அடங்கலாக பணிப்பாளர்கள் சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். 

2019.03.26ii    2019.03.26i

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2019 08:13

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 கமத்தொழில்,  கால்நடை வளங்கள் அபிவிருத்தி,

நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு 

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்