01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


இலங்கை வங்கியின் 634-வது வங்கிக் கிளை அனுராதபுர, ஆண்டியாகல நகரத்தில் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

2019.03.26x

 

 

80 ஆண்டுகள் வரலாற்றுக்கு உரிமை கோரும் இலங்கை வங்கி மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்திய இலங்கையிலுள்ள சிறந்த வங்கிகளில் ஒரு வங்கியாகும் என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், அனுராதபுர ஆண்டியாகல நகரத்தில், இலங்கை வங்கிக் கிளையை திறந்து வைத்த வேளையில் குறிப்பிட்டார்கள்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் - ‘அனுராதபுர மாவட்டத்தில் நுண் நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்களிலிருந்து நுண் நிதிகளைப் பெற்ற நபர்களின் கடன்களை நாம் இன்று பதிவழித்துள்ளோம். நுண் நிதிகள் இல்லையெனில், நுண் நிதிகளை வழங்கும் பத்தாயிரம் கடன் நிறுவனங்கள் இன்று இலங்கை முழுதிலும் உருவாகியிருக்கும். நான் நிதி அமைச்சிடம் கேட்டுக் கொண்டேன், இந்த வங்கிகளை தடைசெய்ய வேண்டும் என. சொல்வதற்கு கவலையாகவிருக்கின்றது, ஒரு நிறுவனத்தில் பெற்ற கடன்களை பதிவழித்தாலும், ஒரு சில பெண்கள் மேலும் 4 அத்தகைய நிதி நிறுவனங்களில் கடன்பட்டுள்ளனர்’.

 

 ‘இதற்கு முக்கிய காரணம், இன்று நுண் கடன்களை வழங்கும் நிதி நிறுவனங்கள் முன்வந்து இன்றே கடன்களை வழங்குவது. 10 இலட்சம் ரூபா கடனை தீர்ப்பதற்கு பொருளாதார வசதியுள்ள நபர்களுக்கு 20 இலட்சம் ரூபா கடன் எந்த விதமான கேள்வியும் இன்றி வழங்கப்படுகின்றது. இதனால் பலர் மேலும் கடன்பட்டு அவதிப்படுகின்றனர். ஒரு சில பெண்கள் தமது உடலாள் அத்தகைய கடன்களை தீர்க்கின்றனர்’.

எனினும், இன்று பாருங்கள், அரச வங்கி என்பதால், இந்த இலங்கை வங்கிக்கு பிணையாளர்கள் தேவை. சம்பளத்திற்கு ஏற்ற கடன் மாத்திரமே வழங்கப்படுகின்றது. வங்கி கஷ்டத்தில் விழுவதுமில்லை. கடன் பெறுபவர்கள் கஷ்டத்தில் விழுவதுமில்லை. நிதி நிறுவனங்களிலிருந்து நாம் கடன்களை பெறுவதற்கு முன்னர், அவற்றின் நம்பிக்கை பற்றி கருத்திற் கொள்ள வேண்டும். நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்கும் போது, இலங்கை வங்கி மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட ஒரு வங்கியாகும். நாட்டை வலுப்படுத்துவதற்கு, இலங்கை வங்கி எதிர்காலத்திலும் பாடுபடும்.

இந்த நிகழ்வில், இலங்கை வங்கியின் தலைவர் டொனால்ட் சி. பெரேரா அவர்கள் அடங்கலாக பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

 

2019.03.26ix


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2019 07:38

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 கமத்தொழில்,  கால்நடை வளங்கள் அபிவிருத்தி,

நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு 

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்