01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


சிறுபோகத்தில் 05 இலட்சம் ஹெக்டேயர் அளவான வயல் காணிகளில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள அமைச்சர் எதிர்பார்க்கின்றார்

2019.03.21

இந்த ஆண்டு சிறுபோகத்தில் 05 இலட்சம் ஹெக்டேயர் அளவான வயல் காணிகளில் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தனது அமைச்சு எதிர்பார்ப்பதால், அதன் நிமித்தம் தேவையான பசளைகளை மார்ச் மாதம் இறுதியளவில் களஞ்சியப்படுத்தி வைக்குமாறு கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், லக் பொஹர கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோமசந்திர ஜயகொடி அவர்களுக்கு அறிவித்துள்ளார்கள்.  

 சிறுபோகத்திற்கு தேவைப்படும் பசளைகளின் அளவு ஒரு இலட்சம் மெற்றிக் டொன்னாக இருக்கும் எனவும், ஏற்கெனவே லக் பொஹர கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் 16,000 மெற்றிக் டொன் யூரியா பசளைகளும், 11,000 மெற்றிக் டொன் சேற்றுப் பசளைகளும், 4000 மெற்றிக் டொன் பண்டிப் பசளைகளும் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும், இந்த மாதம் முடிவடைவதற்கு முன்னர் சீனா, ரஷயா, இந்துனீசியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து தொகையாக பசளை இறக்குமதி செய்யப்படும் எனவும் தலைவர் குறிப்பிட்டார். இதன் நிமித்தம் தனது உரக் கூட்டுத்தாபனம் 09 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டு, சிறுபோகத்திற்கு 47,000 மெற்றிக் டொன் யூரியா பசளைளை இறக்குமதி செய்யும் எனவும், வர்த்தக உரக் கூட்டுத்தாபனம் 28,000 மெற்றிக் டொன் யூரியா பசளைகளை இறக்குமதி செய்யும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 இந்த வருடம் பெரும்போகத்தில் 08 இலட்சம் ஹெக்டேயர் அளவான காணிகளில் பயிர்ச் செய்கை செய்யப்பட்டுள்ளமை மற்றும் யூரியா பசளையின் பாவனை ஆகியன பற்றி தலைவர் தெளிவுபடுத்தி கூறினார். அதற்கிணங்க, அதிகளவில் யூரியா பசளை பயன்படுத்தப்பட்டிருப்பது முறையே அனுராதபுர மாவட்டத்தில் 27,000 மெற்றிக் டொன்களும், அம்பாறை மாவட்டத்தில்  22,000 மெற்றிக் டொன்களும், குருனாகல் மாவட்டத்தில் 21,000 மெற்றிக் டொன்களும், பொலன்னறுவை மாவட்டத்தில் 19,500 மெற்றிக் டொன்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14,000 மெற்றிக் டொன்களும் என்ற அளவிலாகும். இந்தப் பசளைகள் லக் பொஹர கூட்டுத்தாபனத்தினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

 அரசாங்கத்தின் உரக் கூட்டுத்தாபனமான லக் பொஹர கூட்டுத்தாபனம், பசளைகளின் தேவையில் 60% வீதத்தையும், வர்த்தக உரக் கூட்டுத்தாபனம் பசளைகளின் தேவையில் 40% வீதத்தையும் பூர்த்தி செய்யும். இதன் நிமித்தம் அரசாங்கம் 32 பில்லியன் ரூபா நிதியை செலவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: திங்கட்கிழமை, 25 மார்ச் 2019 06:19

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கிராமிய பொருளாதார ௮லுவல்௧ள் , கால்நடை அபிவிருத்தி,

நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 கமத்தொழில், கிராமிய விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி,

நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு 

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்