Agriculture div banner

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


சேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்த விஷமுடைய இரசாயனப் பதார்த்தங்களை பாவிப்பதால், சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடலாம். – கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள், மற்றும் நீரியல் வ

IMG 7248 copy

தற்பொழுது பல பகுதிகளிலும் சேனா என்றழைக்கப்படும் புழுக்களை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள இரசாயனப் பதார்த்தங்கள் பற்றிய ஒரு விஷேட ஆய்வை மேற்கொண்டு, அந்த இரசாயனப் பதார்த்தங்களினால் விவசாயிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுமா, இந்த இரசாயனப் பதார்த்தங்களை பாவித்து, அதன் பின்னர் அறுவடை செய்யப்படும் பயிர் வகைகளை நுகர்கின்ற மக்களுக்கு அதனால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடைகள் வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள், மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், அனுராதபுர மாவட்ட கமநல சேவைகள் அலுவலகத்தில், இன்று (21) ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் போது கூறினார்.

தற்பொழுது, ஒரு சில மாவட்டங்களில், இரசாயனப் பதார்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை பாவிப்பதால் மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கு சாத்தியம் இருப்பதாகவும், பாவனைக்கு ஒவ்வாத விஷமுடைய இரசாயனப் பதார்த்தங்களை பாவிக்காமல், உள்நாட்டு ரீதியில், வேம்பு போன்ற தாவர மூலப்பொருட்களை பாவித்து, இந்தப் புழுக்களை துரத்தக் கூடிய ஒரு முறையியலை ஏற்படுத்துமாறும், அமைச்சர், விவசாயிகளிடம் இதன் போது கேட்டுக் கொண்டார். ஏனைய நாடுகளில் போன்று, உமி மற்றும் மண் ஆகியவற்றை நீரில் கரைத்து, பயிர்களுக்கு இடுவதால், இந்தப் புழுக்களை அழிக்க முடியும் எனவும், மற்றும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கெனவே, சிறப்புசெயலணி ஊழியர்களும், பல்கலைக்கழகங்களின் மாணவர்களும், விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களும், விவசாய விஞ்ஞானிகளும் இந்தப் புழுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஆய்வுகளை நடத்துவதற்காக, விவசாய நிலங்களை சென்று பார்வையிட்டுள்ளனர் எனவும், இன்று வரை அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இந்தப் புழுக்களின் பாதிப்புகள் காணப்படுவதாகவும், எந்த ஒரு நாடும் இந்தப் புழுவை அழிக்கக் கூடிய இரசாயனப் பதார்த்தங்களை கண்டுபிடிக்கவில்லை எனவும் கூறிய அமைச்சர், விவசாயிகள் இந்தப் புழுக்களை விரட்டியடிப்பதற்கு ஏதாவது ஒரு முறையியலை பின்பற்றுவார்களாயின், அது பற்றி உரிய பிரதேசத்தின் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தருக்கு அறியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்தப் புழுக்களினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டு வருவதாகவும், கமநலக் காப்புறுதி சபையினூடாக நஷ்டஈடுகளை வழங்குவதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், உதவிக் கமநல ஆணையாளர்கள், மாவட்ட விவசாய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 08 பிப்ரவரி 2019 05:31

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு

அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .

 தீர்வு மூலம்