Agriculture div banner

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


சேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்துவதற்கு விஷமுடைய ஒரு கிருமிநாசினி கண்டுபிடிக்கப்பட்டாலும், அதிலிருந்து விவசாயிகளினது மட்டுமன்றி அத்தகைய விவசாயப் பயிர்களை நுகரும் மக்களினதும் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பாதிப்பாகவும் அமையக் கூடும் என கமத்தொ

2019.01.18

சேனா என்றழைக்கப்படும் புழுவினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு காப்புறுதிகளை பெற்றுக் கொடுக்க முடியுமா என்பது பற்றி ஆராய்ந்து பார்க்கும் பொருட்டு கமநல காப்புறுதி சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அமைச்சர் இது பற்றி தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் - தற்பொழுது சேனா என்றழைக்கப்படும் புழுக்கள் அதிகளவில் சோளங்களின் இலைகளை தாக்கி அழிக்கின்றன.  தற்பொழுது இந்தப் புழுக்களால் சோள கதிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவடைந்துள்ளன. இன்னும், அவ்வளவு பாரியளவான பாதிப்புகளில்லை. என்றாலும், சிலர் கேட்கின்றார்கள் இதற்கு பாவிக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் பற்றி. எங்களால் முடியும் அதிக விலையுடைய இரசாயனப் பதார்த்தங்களை பாவிப்பதற்கு. சோளங்களை அவித்து வீதி ஓரங்களில் சுய தொழிலில் ஈடுபட்டு, சோளங்களை விற்பனை செய்து வாழுகின்ற ஆயிரக் கணக்கான மக்களை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். நாம் இரண்டு பக்கமும் சிந்திக்க வேண்டும். இந்தப் புழுக்களை அழிக்க வேண்டும். மக்களின் உடலுக்கும் சுகாதாரத்திற்கும் பாதிப்புகள் ஏற்படவும் கூடாது. இவர்களின் இந்தத் தொழில் இல்லாது போனால், எத்தனை பேருக்கு தொழில் இல்லாது போகும்? இதை எல்லாம் பார்த்துத்தான் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

பலர் ஊடகங்களுக்கு முன்னால் வந்து அமைச்சை சாடி கடுமையாக விமர்சிக்கின்றனர். சேனா என்றழைக்கப்படும் இந்தப் புழுக்களை அமைச்சர் திண்ண வேண்டும், என்றும் சொல்வார்கள். இதற்கு தீர்வு கிடைக்குமானால், என்னை சாப்பிட்டால் பரவாயில்லை. நேற்று ஒரு ஊடகவியலாளர் கேட்டார், சேனா என்றழைக்கப்படும் இந்தப் புழு ஐக்கிய கட்சி செய்த ஒரு சூழ்ச்சியா என்று. நான் கூறினேன், நான் வந்து 10 நாட்கள் என்று. மஹிந்த அமரவீர அமைச்சர்தான் இந்த சூழ்ச்சியை செய்திருப்பார் என்று. இது, எவராலும் செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சியல்ல. சேனா என்றழைக்கப்படும் இந்தப் புழு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து பரவி வந்த ஒரு புழு இனம். எம்மால் இந்தப் புழுக்களை நூற்றுக்கு நூறு கட்டுப்படுத்த முடியாது போனாலும் கூட, நாங்கள் முயற்சிக்கின்றோம், இந்தப் புழுக்களினால் ஏற்படும் அழிவுகளை குறைப்பதற்கு.  

நாம் பார்க்க வேண்டும், அடுத்ததாக சோளங்களின் விளைச்சலில் குறைவு இருக்கின்றதா என்று. அதனால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்று. நாங்கள் பார்க்கின்றோம், முழுமையாக பயிர்கள் அழிந்திருந்தால், அவசர இடர் நிலைமைகளில், வேறு பயிர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் காப்புறுதித் தொகைகளை செலுத்த முடியுமா என்று. நாங்கள் பார்ப்பது, இந்தப் புழுக்களை கட்டுப்படுத்தி, அவற்றை அழித்து, விவசாயிகளுக்கு சலுகையை பெற்றுக் கொடுத்து, விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு.  

இலங்கை ஒரு விவசாய நாடு என்ற வகையில், எம்மால் மகிழ்ச்சி அடைய முடியுமா? நாம் ஒரு கட்சிக்கு, நிறத்திற்கு குறை கூறுவதால் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. ஆட்சி செய்த நாம் அனைவரும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். எம்மிடம் சரியான ஒரு முறையியல் இல்லாததால், அதே போன்று சரியான ஒரு கொள்கை இல்லாததால், நாம் இன்றும் விவசாயத்தில் தங்கியிருக்கின்ற ஒரு நாடு என்றாலும் கூட, அதிகளவான விவசாயப் பயிர்களையும், உற்பத்திகளையும் இறக்குமதி செய்கின்றோம். நாம், நாடு என்ற வகையில் அது பற்றி கவலை அடைகின்றோம். குரக்கன், சோளம், பயறு, கவ்பி, உழுந்து, மிளகாய் என்பவற்றை நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். எப்பொழுதும் இந்தியாவின் விவசாயிகளை நாம் செல்வந்தர்களாக ஆக்குகின்றோம். எது எவ்வாறிருந்தாலும், நாம் வழங்குகின்ற நிவாரணத்தை பார்த்தால், உலகத்தில் வேறு எந்த ஒரு நாடும் இவ்வாறு நிவாரணங்களை வழங்குவதில்லை. பசளை நிவாரணம், சமுர்த்தி நிவாரணம் ஆகிய சகல நிவாரணங்களையும் நாம் வழங்கினாலும், நாம் வெற்றி அடையவில்லை. அப்படியாயின், நாம் எடுத்த தீர்மானங்களில் எங்கேயாவது தவறு இருக்கும். தேசிய கொள்கையுடன் நாம் முன்செல்ல வேண்டும். இது தொடர்பில், சரியான ஒரு முறையியலை, கொள்கையை தயாரிக்க வேண்டிய காலம் தற்பொழுது எழுந்துள்ளது. அதன் நிமித்தம் நானும் எனது அலுவலர்களும் அர்ப்பணிப்பதற்கு தயாராகவுள்ளோம்.  


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 08 பிப்ரவரி 2019 04:33

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு

அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .

 தீர்வு மூலம்