Agriculture div banner

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


களு கங்கையிலும் மற்றும் ஜிங்கங்கையிலும் மணல் அகழும் செயற்பாட்டை முறைப்படுத்துவதற்கான மதிப்பாய்வு

2019.01.17

களுத்துறையில் அமைந்துள்ள களு கங்கையின் சுற்றாடல் பிரச்சினைகள் பற்றி மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு அமைச்சர் பி. ஹரிஷன் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

களு கங்கையில் பிரதானமாக மணலை அகழும் தரப்புகளின் சங்கங்களுக்கு இடையிலும், இன்று (17) ஆம் திகதி நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, உரிய முறையியலுக்கு இணங்க மணல் அகழும் அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரைகளை வழங்கினார்.

தற்பொழுது களு கங்கையின் கீழ் மணல் அகழ்ந்து குவிப்பதற்கு என சுமார் 350 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும், வாரம் ஒன்றில் இரண்டு நாட்களுக்கு ஒரு அனுமதிப் பத்திரத்திற்காக 25 கியுப் மணலை அகழ்ந்து குவிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், அந்த அளவை விஞ்சி மணல் அகழப்படுவதன் விளைவாக, சுற்றாடலுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன எனவும் கூறிய அமைச்சர்,  இந்த மாதத்திற்குள் மணல் அகழ்ந்து குவிப்பது தொடர்பான மதிப்பாய்வுகளில் நீர்ப்பாசன பொறியியலாளர்களையும் மற்றும் புவிச்சரிதவியலும் அகழ்வும் சந்தமான அலுவலர்களையும் துரிதமாக ஈடுபடுத்தி அந்த மதிப்பாய்வுகளை நிறைவு செய்யுமாறும் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தனார்.

களு கங்கையின் கீழ் மணல் அகழ்தல் மற்றும் அகழும் மணலை எடுத்துச் செல்லல் ஆகியவற்றின் பயனாக ஏறக்குறைய ஐயாயிரம் நபர்கள் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபடுகின்றனர் என குறிப்பிட்ட அமைச்சர், குறித்த அளவை விஞ்சி மனல் அகழப்படுவதன் விளைவாக சுற்றாடலுக்கு பாதிப்புகள் ஏற்படுவதால், அவ்வாறு மணல் அகழ்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் மணல் அகழும் தரப்புகளின் சங்கங்களிடம் கேட்டும்கொண்டார்.

மூன்று மாதத்திற்கு ஒரு தடவை பெற்றுக் கொடுக்கப்படும் அனுமதிப் பத்திரம் ஒரு வருட காலத்திற்கு, மதிப்பாய்வுக்கு இணங்க நீடிக்கப்பட முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  கட்டுப்பாடற்ற விதத்தில் மணல் மணல் அகழப்படுவதன் விளைவாக ஆற்றுப்படுக்கைகள் ஆழமாகுவதால், கடல் நீர், ஆற்று நீருடன் கலக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும், சட்டமுறையற்ற விதத்தில் மணலை அகழும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.  

இது தவிர, களணி கங்கை கொஹிலவத்தை முதல் ஹல்முல்ல வரை களணி கங்கையின் நீர் கசிவதால் எழும் சுற்றாடல் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக 600 மில்லியன் ரூபா செலவில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிதியை பயன்படுத்தி கல்லாலான ஒரு கட்டுமாணத்தை நிர்மாணிப்பதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

களணி கங்கையில் சட்டமுறையற்ற விதத்தில் மணல் அகழுவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், கித்சிறி மெவன்கல, கொஹிலவத்தை சந்தி, கங்காதிலக்க விகாரைக்கு அருகாமை ஆகிய பகுதிகளில் வசிக்கின்ற மக்களினது வேண்டுகோளின் அடிப்படையில் குளிக்கும் ஸ்தலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், அமைச்சர் அஜித் பி. பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், கமத்தொழில் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன்சந்திர, நீர்ப்பாண பணிப்பாளர் நாயகம் திரு மோகனராஜ் ஆகியோர் அடங்கலாக, அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 08 பிப்ரவரி 2019 04:20

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை © 2012 கமத்தொழில் அமைச்சு

அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை .

 தீர்வு மூலம்