01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


சேனா என்றழைக்கப்படும் புழுவால் பாதிப்புக்குள்ளாகிய விவசாய நிலங்களுக்கு 250 மில்லியன் ரூபா தொடர் நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கமத்தொழில் அமைச்சர் பி. ஹரிஷன்

IMG 7696 IMG 7699

IMG 7708    IMG 7712

 

250 மில்லியன் ரூபா தொடர் நஷ்டஈடுகளை சேனா என்றழைக்கப்படும் புழுக்களினால் பாதிப்புக்குள்ளாகிய விவசாய நிலங்களின் நிமித்தம் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் பி. ஹரிஷன் அனுராதபுரம் ரம்பாவ சந்தமல்கம கிராம விவசாயிகளிடம் உறுதியளித்தார்.  

 

பாதிக்கப்பட்டுள்ள அத்தகைய விவசாய நிலங்களை கணக்கெடுக்கும் பொருட்டு விவசாய உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மற்றும் இந்தப் புழுவின் கடுமையான தாக்கத்திற்குள்ளாகி பயிர்கள் அழியும் போது விவசாயிகளும் அர்ப்பணிப்புடன் செயல்படுவது அவசியம் எனவும் குறிப்பிட்ட அமைச்சர், பயிர்கள் அழிந்துள்ள ஹெக்டேயர் ஒன்றுக்கு நாற்பதாயிரம் ரூபா தொகையை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  

இடைக்கால பயிர்ச் செய்கை போகத்திற்கு முன்னர் சோளங்களை பயிரிடக் கூடாது என விவசாய உத்தியோகத்தர்கள் அறிவித்திருப்பது இந்தப் புழுவை கட்டுப்படுத்தி ஒழிப்பதற்காகவே என அமைச்சர் குறிப்பிட்டார்.  

பிரதேச மட்டத்தில் இந்தப் புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், இந்தப் புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தால் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள தான் தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முழு நாடும் இந்தப் புழுவை ஒழிக்கும் விடயத்தின் அணிதிரண்டுள்ளது என கூறிய அமைச்சர், அரச ஊழியர்கள் இது தொடர்பில் அவர்கள் நல்கிய அர்ப்பணிப்புடைய பணியையும் அமைச்சர் இங்கு பாராட்டினார்.  

 


கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 01 பிப்ரவரி 2019 08:04

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 கமத்தொழில்,  கால்நடை வளங்கள் அபிவிருத்தி,

நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு 

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்