01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


பதிவை உறுதிப்படுத்தாத குடி நீரை போத்தலில் அடைக்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் குழாய் கிணறுகளை நிர்மாணிக்கும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் பணி தவறும் அறிகுறி

2019.01.24ii  2019.01.24i

நீர்ப்பாசன அமைச்சின் கீழ் செயல்நோக்கில் வரும் நீர் வளங்கள் சபையினது ஒரு அடிப்படை குறிக்கோளாக விளங்கும் நில கீழ் நீரின் முகாமை பணி இன்று வரை சரியான விதத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதா என சற்று சிந்தித்துப் பார்க்குமாறு கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்கடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் கடற்றொலில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் நீர் வளங்கள் சபையில் இடம்பெற்ற தகவுடைய அதிகாரிகளை சந்திக்கும் கூட்டத்தில் தெரிவித்தார். 

 

மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடி நீரை பாதுகாக்கும் பொறுப்பு நீர் வளங்கள் சபைக்கு 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 2010/23 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஒப்படைக்கப்பட்டாலும், இது வரை நில கீழ் நீர் முகாமையில் உரிய ஒழுங்குவிதிகளை பூர்த்தி செய்துள்ள மற்றும் தர சான்றிதழை்களைப் பெற்ற 164 கம்பனிகள் மட்டுமே தமது பதிவுகளை உறுதிசெய்துள்ளன. எனினும், நாட்டில் ஆயிரக் கணக்கான கம்பனிகள் உரிய சுகாதார முறையை பின்பற்றாமல் குடி நீரை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடுவது கவலைக்குரிய ஒரு விடயம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

 குடி நீரை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும் ஒரு சில கம்பனிகள் உரிய சுற்றாடல் அறிக்கை தொடர்பான தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்யாதுள்ளன எனவும், நில கீழ் நீரின் கொள்ளவை ஒரு இலட்சம் லீற்றர்களையும் விஞ்சி பயன்படுத்தும் கம்பனிகளுக்கு குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி அரசாங்கத்தினால் கட்டணங்கள் விதிக்கப்படுதல் வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். அது மட்டுமன்றி இந்த நாட்டின் நீர் ஊற்றுக்களை பாதுகாக்கும் பொருட்டு, தேவையற்ற விதத்தில் ஒரு சில குழாய் கிணறுகளை நிர்மாணிக்கும் தரப்புகளுக்கு அது தொடர்பில் சட்டவரையறையை விதிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார். தற்பொழுது குழாய் கிணறுகளை நிர்மாணிப்பதில் அண்ணளவாக 196 அத்தகைய நிர்மாண தரப்புகள் ஆழமான குழாய் கிணறுகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இவற்றில் சுமார் 13 நிர்மாண தரப்புகள் மாத்திரம் தகைமைகளை பெற்றிருப்பதால், ஏனைய அத்தகைய தரப்புகளும் கம்பனிகளும் தேவையான தகுதி சான்றிதழ்களை பெறுவதற்கு தவறும் பட்சத்தில், அத்தகைய தரப்புகளுக்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுக்கும் காலம் வந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

 உரிய முறையில் நில கீழ் நீரை முகாமை செய்து எமது நாட்டின் நில கீழ் குடி நீரை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த நீர் வளங்கள் சபையை மேலும் வலுப்படுத்தி, குடி நீர் ஊற்றுக்களை பாதுகாக்க தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் இந்த தகவுடைய அதிகாரிகளுடனான சந்திப்பின் போது மேலும் தெரிவித்தார்.

 இந்த நிகழ்வில் கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு கே.டீ.எஸ். ருவன் சந்திர, நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) திரு டீ.டீ. ஆரியரத்ன, அமைச்சரின் ஆலோசகர் திருமதி சிரானி வீரகோன் ஆகியோர் அடங்கலாக நீர் வளங்கள் சபையின் தகவுடைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வெள்ளிக்கிழமை, 01 பிப்ரவரி 2019 07:47

சமூக வலையமைப்பு

பார்வையாளர்கள் எண்ணிக்கை

Please install plugin HitCounter!

கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி,
நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்௧ள் அபிவிருத்தி அமைச்சு

 இல. 288,

ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை,

ராஜகிரியஇலங்கை.

 

தொ/பே: +94-11-2869553

தொலைநகல்: +94-11-2868910

மின்-அஞ்சல்:

இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிப்புரிமை - 2019 கமத்தொழில்,  கால்நடை வளங்கள் அபிவிருத்தி,

நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு 

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்