01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


விவசாய கொள்கையை தயாரிக்கும் பொருட்டு எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு - அமைச்சர் பி. ஹரிஷன்

2019.04.01xiii

 அனுராதபுரம், புள்னேவ, களங்குட்டிய கிராமத்தில் 2013 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 16 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கமநல சேவை நிலையத்தின் அத்தகைய பணிகள் 05 வருடங்களுக்கும் அதிக காலம் எடுத்த பின்னர் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்த சந்தர்ப்பத்திலேயே அமைச்சர் அவர்கள் இதனை தெரிவித்தார்கள். இதன் நிர்மாணப் பணிகள் மிகவும் மெதுவாக மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனை தான் தலையிட்டு துரிதப்படுத்தியதாகவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். 

 

களங்குட்டிய பிரதேச விவசாயிகளுக்கு காணப்பட்ட பெரும் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் நிமித்தம் குறித்த இடத்தில் சுமார் 80 இலட்சம் ரூபா செலவில் இந்த கமநல சேவை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

 இந்த வைபவத்தில் பேசிய போது, கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு கே.டீ.எஸ். ருவன்சந்திர அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

 

 நாங்கள் எதிர்பார்க்கின்றோம் விஷேடமாக இந்தப் பிரதேச விவசாயிகளுக்கு மிகவும் சிறந்த ஒரு சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு. இந்த கமநல சேவை நிலையத்தினூடாக, விவசாயிகளுக்கு நாளாந்தம் தேவையான சேவைகளை ஒரே நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கு இன்றிலிருந்து வாய்ப்பு இருக்கின்றது. அதிகளவான நிதிகளை செலவிட்டு, இந்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் இந்த நாட்டு மக்களின் நிதிகள் செலவிடப்பட்டுள்ளன. ஆகவே அவ்வாறு நிதிகள் செலவிடப்படுவது போலவே, பெறுமானத்திற்கு ஏற்ற ஒரு சேவையை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கும் எமது உத்தியோகத்தர்களும் மற்றும் ஊழியர்களும் எப்பொழுதும் தயாராகவிருக்கின்றனர். இந்த முதலீட்டின் உண்மையான பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன். விவசாயத் துறையில் நாம் அவதானிக்கக் கூடிய பல வகையான பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக அறுவடைக்கு பிற்பட்டகால இழப்புகள் பெருமளவில் காணப்படுகின்றன. அதே போன்று எமது காணிகளின் உற்பத்தித்திறனிலும் குறைபாடு இருக்கின்றது. அதே போன்று, ஒரு சில விவசாய உற்பத்திகளின் விலைகள் தொடர்பிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஒரு சில காலங்களில் ஒரு சில விவசாய உற்பத்திகளின் விலை குறைவடைகின்றது, இன்னும் ஒரு சில காலங்களில் அவற்றின் விலை அதிகரிக்கின்றது. இதனை நுகர்வோரால் சுமக்க முடியாது. விலை ஏற்றத்தாழ்வுகளை அதிகளவில் காணக் கூடியதாகவுள்ளது. அதே போன்று, புதிய தொழில் நுட்பத்தை விவசாயத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக விவசாய உற்பத்திகளின் பெறுமானத்தை அதிகரிப்பதற்கும், உற்பத்திகளின் இழப்புகளை குறைப்பதற்கும் மிகவும் சிறந்த தரமான ஒரு விவசாய உற்பத்தியை எமது நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தவும் வேண்டும்’. 

 

‘விஷேடமாக விவசாயத் துறையில் மூன்று கருத் திட்டங்களை எம்மால் செயற்படுத்த முடிந்துள்ளது. வெளிநாட்டு நிதி உதவிக் கருத் திட்டங்களாக, அதாவது விவசாய நவீனமயப்படுத்தல் கருத் திட்டம், காலநிலை வித்தியாசம் தொடர்பான கருத் திட்டம் மற்றும் இபாfட் நிறுவனத்தின் நிதி உதவியின் அடிப்படையிலான மற்றுமொரு விவசாய கருத் திட்டம் முதலிய கருத் திட்டங்களை ஆரம்பிக்க முடிந்துள்ளது. முன்னர் சொல்லப்பட்ட பிரச்சினைகளுக்கு இந்தக் கருத் திட்டங்களினூடாக தீர்வுகளை கண்டறிய வேண்டியுள்ளது. விவசாயிகள் இன்று பெறுகின்ற வருமானத்தை பார்க்கிலும் நாளை அதிகளவு வருமானத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கின்றது’.

 

 கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் இந்த வைபவத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

 

 புள்னேவ கமநல சேவை நிலையத்தை நாம் இன்று திறந்து வைத்ததையடுத்து, விவசாயிகளால் பெருமளவான சேவைகளை இதனூடாக பெற்றுக் கொள்ள முடியும். அதே போன்று, இந்த நிலையத்தை அண்மித்த ஒரு இடத்தில் ஒரு பசளை களஞ்சியசாலையையும் நிர்மாணிப்பதற்கு எதிர்வரும் ஆண்டிற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று, கமத்தொழில் அமைச்சின் மூலம் நிருவகிக்கப்படும் ஒரு சிற்றுண்டிச்சாலையும் இந்த இடத்தில் நிர்மாணித்து கொடுக்கப்படும்’.

 

 நாம் நாட்டிற்கு மாறாத நிலையான ஒரு விவசாய கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. புது வருடத்தின் பின்னர், விவசாயத் துறைக்கு சொந்தமான மாகாண மட்ட சகல நிறுவனங்களிலிருந்தும் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு சொத்தமான சகல நிறுவனங்களிலிருந்தும், சகல மாவட்ட செயலாளர்களிடமிருந்தும் மற்றும் சகல பிரதேச செயலாளர்களிடமிருந்தும் கருத்துக்களையும் மற்றும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு, மாறாத நிலையான ஒரு விவசாய கொள்கையை உருவாக்க வேண்டும். உதாரணமாக கூறுவதானால், இந்த கள்னேவ பிரதேசத்தில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகின்றது, தம்புள்ளவிலும் இந்த வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கு 03-04 வருடங்களுக்கு முன்னர் 8000 ஹெக்டேயர் அளவான காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட வெங்காயம் தற்பொழுது 1000 ஹெக்டேயர் என்ற அளவுக்கு குறைவடைந்துள்ளது. எமது நாட்டின் தேவையில் ஏறக்குறைய ¼ அளவை இதற்கு 03-04 வருடங்களுக்கு முன்னர் நாம் உற்பத்தி செய்தோம். இப்பொழுது, விவசாயிகள் இந்த வெங்காய பயிர்ச் செய்கையிலிருந்து விலகியுள்ளனர். எனக்கு நினைவிருக்கின்றது, இதற்கு சுமார் 10 வருட காலத்திற்கு முன்னர், இந்த கலாவெவ முதல் நொச்சியாகம வரை, அதிகளவில், வீதியின் இரு ஓரங்களிலும் செக்கச்சிவப்பு என மக்கள் மிளகாயை உலர விட்டிருந்தார்கள். ஆனால், இப்பொழுது அவ்வாறில்லை. நாம் போகத்திற்கு போகம் எமது விவசாய கொள்கையை மாற்றுவதால், ஒவ்வொரு பயிரையும் பயிரிடும் ஒவ்வொரு விவசாயியும் எம்மிலிருந்து விலகிச் செல்கின்றனர். ஒரு காலத்திற்கு வெளிநாடுகளிலிருந்து உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. வெங்காயம் தேவையான காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகின்றது. விசாயிகள் நட்டம் அடையும் போது, அவர்கள் அந்தப் பயிர்ச் செய்கையை கைவிடுகின்றார்கள். எம்மால் வளர்க்க முடியுமான பயிர் இனங்கள் எமது நாட்டில் உள்ளன. அவ்வாறிருந்தாலும், நாம் இன்றும் அத்தகைய பயிர் சார்ந்த உற்பத்திகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றோம். விவசாயத்தில் ஈடுபடுகின்ற உங்களுக்கும் அதே போன்று எங்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது, இந்த விவசாய கொள்கையை மாற்றியமைப்பதற்கு. அதற்கு தற்பொழுது காலம் வந்துள்ளது. ஆகையால், நாம் எதிர்பார்க்கின்றோம், எமது திணைக்களங்களினதும் மற்றும் அமைச்சினதும் ஊழியர்களிடமிருந்தும் அதே போன்று சகல அரசாங்க ஊழியர்களிடமிருந்தும், ஆளும் கட்சி உறுப்பினர்களிடமிருந்தும் மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்களிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு, நிலையான ஒரு விவசாய கொள்கையை உருவாக்கி, எம்மால் நாட்டிற்காக செல்ல வேண்டிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான காலம் வந்து விட்டது. உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகள் இருந்தால், அந்த விவசாயிகளை ஒரு குழுவாகப் பதிவு செய்து, அந்த விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சிறந்த விலையை பெற்றுக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை தயாரித்து, அந்த சகல உற்பத்திகளையும் கொள்வனவு செய்யக் கூடிய குழுக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம், அத்துடன், மேலதிக உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கும் நாம் அனுமதிப்போம். இது உருளைக்கிழங்கு, வெங்காயம், பயறு, கவ்பி முதலிய தானிய வகைகளுக்கும் பொருந்தும். இல்லையெனில், விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சர் என்ற வகையில் நானும், அரச ஊழியர்களும், நாம் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் எமது நாட்டு எதிர்கால சந்ததியினருக்கு. நாம் நாடு, தேசம் என்ற வகையில், எமது கொள்கை ரீதியான பிரச்சினைகளினால் இந்த பொறுப்பை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றோம். எனது கட்சி அடங்கலாக, இந்த நாட்டை ஆட்சி செய்த சகல கட்சிகளினதும் சகல அரசாங்கங்களும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இதனை மாற்றியமைப்பதற்கு இப்பொழுது காலம் வந்துள்ளது. நாட்டிற்கு தேவையான நிலையான ஒரு விவசாய கொள்கையை நாம் உருவாக்க வேண்டும். இதனை காலம் தாழ்த்த முடியாது. உடனக்குடனே செய்ய வேண்டும். எமக்கு பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. எமக்கு இருப்பது மட்டுப்பட்டளவான இடம், நீரும் மட்டுப்பட்டளவில் இருக்கின்றது. நாம் நீரையும் மற்றும் நிலத்தையும் முகாமை செய்ய வேண்டியுள்ளது. சுற்றாடல் பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய விதத்தில் நாம் செயல்படுவது அவசியம். இவை அனைத்தையும் எம்மால் செய்வதற்கான ஆற்றல் எம்மிடமுள்ளது’.

 

 இந்த நிகழ்வில் கமநல ஆணையாளர் நாயகம் திரு டப்ளியூ.எம்.எம்.பீ. வீரசேக்கர, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு கே.டீ. ருவன்சந்திர, பிரதேச அரசியல்வாதிகள், அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

2019.04.01xii     2019.04.01ix

 

2019.04.01xi

 

 

 

 

 

 


Last Updated on බදාදා, 24 අප්‍රේල් 2019 03:14

සමාජීය

කෘෂිකර්ම,ග්‍රාමීය ආර්ථික කටයුතු, වාරිමාර්ග සහ 

ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශය

288,

ශ්‍රී ජයවර්ධනපුර මාවත ,

රාජගිරිය, ශ්‍රී ලංකාව.

දුරකථන : +94-11-2869553

ෆැක්ස් : +94-11-2868910

ඊ- මේල් : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

ප්‍රකාශන හිමිකම © 2019 කෘෂිකර්ම,ග්‍රාමීය ආර්ථික කටයුතු, වාරිමාර්ග සහ

ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශය

සියලු හිමිකම් ඇවිරිණි

සැලසුම් නිර්මාණය