01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


நாளொன்றுக்கு மாத்திரம் மட்டுப்படாமல் நீர் வளங்களை பாதுகாப்போம் - அமைச்சர் பி. ஹரிஷன்

2019.03.22iii

க்லைபொசெட்டு தடை செய்யப்பட்டதையடுத்து, இந்த நாட்டின் விவசாய இரசாயனப் பதார்த்தங்களின் (கிருமிநாசினிகள், களைநாசினிகள் மற்றும் பீடைநாசினிகிகள்) பாவனை 5000 மெற்றிக் டொன்ற என்ற அளவுக்கு குறைந்துள்ளது என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள், உலக நீர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர் தின வைபவத்தில் கலந்துகொண்ட வேளையில் தெரிவித்தார்கள்.

 ‘2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் எமது விவசாயத் துறையில் கிருமிநாசினிகள் மற்றும் பீடைநாசினிகள் என 8000 மெற்றிக் டொன் இரசாயனப் பதார்த்தங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாவனை அளவு, க்லைபொசைட்டு தடை செய்யப்பட்டதையடுத்து, 5000 மெற்றிக் டொன் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. எமக்கு இப்பொழுது தெரியும், இந்த சகல களைநாசினிகளும் எமது நீர் மூலங்களின் ஊடாக செல்கின்றன என்பதை. அதனால், எமது நீர் வளங்கள் மாசடைகின்றன. நாம், விவசாயத்தில் ஈடுபடும் சகல விவசாயிகளுக்கும் அறிவுரைகளை வழங்கியுள்ளோம், எப்பொழுதும், கிருமிநாசினிகளுக்கு பதிலாக, உயிரியல் முறையை, கெம் முறையை மற்றும் இயற்கை முறைகளை பரிட்சித்துப் பார்க்குமாறு. எனினும், விவசாயிகள் காட்டும் தயக்கத்தினால், அவர்கள் உடனடியாக தீர்வுகளை தரக் கூடிய இரசாயனப் பதார்த்தங்களை உபயோகிக்கின்றனர். அந்த இரசாயனப் பதார்த்தங்களை பாவிப்பதால் எமது நீர் வளங்கள் மாசடைவது மட்டுமன்றி சுற்றாடலும் மாசடைகின்றது’.  

 ‘எமக்கு தெரியும், கொழும்பு அடங்கலாக நகரப் பிரதேசங்களில், குடிநீர் பாவனையில் 22% - 25% வீதத்தில் நீர் வீணாகுவது. இன்று போன்ற ஒரு நாளில் மட்டும்தான் நாம் நீர் வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று எமக்கு ஞாபகம் வருகின்றது. நாம் ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் நீரை சிக்கனமாகப் பாவிப்பதற்கு பழக்கப்படுதல் வேண்டும். அன்று, குளங்கள், கால்வாய் மார்க்கங்கள் என்பவற்றிலிருந்து நீர் நிலத்தில் பயன்படுத்தப்பட்டாலும், அவற்றில் கன உலோகங்கள் படிகின்றன.  நாட்டின் சிறுநீரக நோய்க்கும் கூட இது செல்வாக்கு செலுத்தியுள்ளது. நாம் இன்று, சுத்திகரிக்கப்பட்ட, போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு பழக்கப்பட்டிருப்பது எமது நீர் மூலங்கள் மாசடைந்திருப்பதாலாகும்’.  

 இன்று, நாம் விவசாயிகளை விழிப்பூட்டினாலும், நான் பிரதிநிதிப்படுத்தும் மாவட்டத்தின் கலாவெவ குளத்தை நான்கு தடவைகள் நீரால் நிரப்ப வேண்டும், அந்தக் குளத்தின் கீழுள்ள விவசாயக் காணிகளில் விளைச்சலை பெறுவதற்கு. எனினும், நீரை சிக்கனமாக பாவித்தால், அவ்வாறு நிரப்ப தேவைப்படாது. வேளாண்மைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் நீரின் அளவு பற்றி விவசாயிகளுக்கு அறியப்படுத்தினாலும், வயல்களில் நீர் நிரம்பி ஓடும் அளவுக்கு அவர்கள் நீரை பாவிக்கின்றனர். இன்று, சுற்றாடல் மாசடைந்து, எமது நீர்வட்டம் மாறியுள்ளது. காநிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கு நாம் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும்’.

 நாம் வருடமொன்றில் 12 இலட்சம் இரசாயனப் பசளை வகைகளை உபயோகிக்கின்றோம். இவை அனைத்தும் நாம் வாழும் புவியில் உருஞ்சப்படுகின்றன. வயல்களின் ஊடாக குளங்களுக்கு செல்கின்றன. குளங்களில் கன உலோகங்கள் படிந்து நிரம்புகின்றன. செல்வேனியா, ஜப்பான்ஜபர என்பன குளங்களை மூடி வளர்வதற்கு காரணம் இந்த இரசாயனப் பசளைகள் நீரில் கலப்பதாகும். நாளொன்றுக்கு மாத்திரம் மட்டுப்படாமல் எமது நீர் வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்’ என அமைச்சர் மேலும் கேட்டுக் கொண்டார்.

 இந்த நிகழ்வில் நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம் மோகன் ராஜ் அடங்கலாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

 

2019.03.22ii       2019.03.22i


Last Updated on සදුදා, 25 මාර්තු 2019 06:24

සමාජීය

කෘෂිකර්ම,ග්‍රාමීය ආර්ථික කටයුතු, වාරිමාර්ග සහ 

ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශය

288,

ශ්‍රී ජයවර්ධනපුර මාවත ,

රාජගිරිය, ශ්‍රී ලංකාව.

දුරකථන : +94-11-2869553

ෆැක්ස් : +94-11-2868910

ඊ- මේල් : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

ප්‍රකාශන හිමිකම © 2019 කෘෂිකර්ම,ග්‍රාමීය ආර්ථික කටයුතු, වාරිමාර්ග සහ

ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශය

සියලු හිමිකම් ඇවිරිණි

සැලසුම් නිර්මාණය