01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


பாடசாலைகளுக்கு கமத்தொழில் அமைச்சிலிருந்து சுதேசிய சிற்றுண்டிச்சாலைகள்

2019.03.14i   2019.03.14ii 

எதிர்காலத்தில், பாடசாலைகளில் சுதேசிய உணவு சிற்றுண்டிச்சாலைகளை நிர்மாணிப்பதற்கு கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது எனவும், சரியான உணவு வேளை மற்றும் உணவுப் பழக்கவழக்கம் என்பன இல்லாத காரணத்தால் மாணவர்கள் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்ற அளவு அதிகரித்து வருகின்றது எனவும், இதனால், இந்த மாணவர்கள் தொற்றாத நோய்களுக்கு ஆளாகி அவதிப்படும் சாத்தியத்தை குறைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும், கமத்தொழில் அமைச்சர் தெரிவித்தார்.

 

தொற்றாத நோய்களினால் நாளுக்கு நாள் 09 நபர்கள் மரணிப்பதாகவும், அதற்கு பிரதான காரணம் சரியான ஒரு உணவு வேளையும் உணவுப் பழக்கவழக்கமும் பின்பற்றப்படாமை எனவும், தொற்றாத நோய்களை குணப்படுத்துவது தொடர்பான கமத்தொழில் அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுக் கூட்டத்தில் கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களின் தலைமையில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட வேளையில் அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்கள்.

பாடசாலை மாணவர்கள் ஆபத்துக்குள்ளாகுவதை குறைக்கும் பொருட்டு பழங்களினதும் மற்றும் மரக்கறி வகைகளினதும் நுகர்வின் அளவை அதிகரிப்பது இதன் குறிக்கோளாகும். பாடசாலைகளில் நிர்மாணிக்கப்படும் சுதேச சிற்றுண்டிச்சாலைகளின் உணவுகளை ஒழுங்குறுத்தும் பணி பாடசாலைகளில் தாபிக்கப்படும் உணவு பற்றிய குழுக்களினூடாக மேற்கொள்ளப்படவுள்ளது. 

தலா நாளாந்த மரக்கறி வகைகளின் நுகர்வு 440 கிராம் என்ற அளவில் இருந்தாலும், அது 200 கிராம் என்ற அளவுக்கு மட்டுப்பட்டுள்ளது எனவும், மூன்று நபர்களை எடுத்துக் கொண்டால், ஒருவர் பலவீனம் அடைந்தவராக இருக்கின்றார் எனவும் குழு அமைச்சருக்கு தெரிவித்தது. 

இதன் காரணமாக, மூன்று நபர்களில் ஒருவர் அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாகவும் குழு மேலும் தெரிவித்தது.

அதிகமான பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு காலையில் செல்வது உணவுகளை உண்ணாமல் எனவும், இந்த சுதேசிய சிற்றுண்டிச்சாலைகளினூடாக பாடசாலை மாணவர்களுக்கு மரக்கறி வகைகளையும், பழ வர்க்கங்களையும் நுகரும் பழக்கத்தை அதிகரித்து, ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை போக்குக்கு பழக்கப்படுத்துவது இந்தக் கருத்திட்டத்தின் ஒரு குறிக்கோளாகும் எனவும், உணவுகளின் விற்பனை தொடர்பில் வெளியிடப்படும் விளம்பரங்களை மாணவர்கள் பின்பற்றுவதை தடைசெய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குழு தெரிவித்தது.

இந்த நிகழ்வில், கமத்தொழில் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன்சந்திர, கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 


Last Updated on සදුදා, 18 මාර්තු 2019 05:17

සමාජීය

කෘෂිකර්ම,ග්‍රාමීය ආර්ථික කටයුතු, වාරිමාර්ග සහ 

ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශය

288,

ශ්‍රී ජයවර්ධනපුර මාවත ,

රාජගිරිය, ශ්‍රී ලංකාව.

දුරකථන : +94-11-2869553

ෆැක්ස් : +94-11-2868910

ඊ- මේල් : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

ප්‍රකාශන හිමිකම © 2019 කෘෂිකර්ම,ග්‍රාමීය ආර්ථික කටයුතු, වාරිමාර්ග සහ

ධීවර හා ජලජ සම්පත් සංවර්ධන අමාත්‍යාංශය

සියලු හිමිකම් ඇවිරිණි

සැලසුම් නිර්මාණය