English (UK)SinhalaSriLankaTamilIndia


நிலையான விவசாய நீர் முகாமைத்துவக் கருத்திட்டம் (SAWMP)

அறிமுகம்

இலங்கையின் உலர் வலயங்களில் வசிக்கின்ற கிராமிய விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதலிலும், விவசாயிகளின் வருமானத்தையும் விவசாய உற்பத்தித்திறனையும் அதிகரிக்கச் செய்வதிலும் இந்தக் கருத் திட்டம் இலக்குக்கொண்டதாகக் காணப்படுகின்றது. இந்தக் கருத் திட்டம் 2005 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. சிறியளவில் விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 2 கட்டங்களினூடாக 10,000 சூரியசக்திச் சொட்டு நீர்ப்பாசன அலகுகள் (சூ.சொ.நீ.அ) வழங்கப் பட்டுள்ளன. சிறியளவில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு இந்தக் கருத் திட்டத்திலிருந்து நன்மைகள் கிடைக்கின்றன. இவர்களில் சமுர்த்தி நன்மைகளைப் பெறுகின்ற 2862 விவசாயிகள் அடங்குகின்றனர்.

2005-2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில் I ஆம் கட்டத்தில் பின்வரும் மாவட்டங்களின் விவசாயிகளுக்கு மத்தியில் ஐயாயிரம் சூரியசக்திச் சொட்டு நீர்ப்பாசன முறைமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

1. அம்பாறை 6. கேகாலை 11. பொலன்னறுவை
2. அனுராதபுரம் 7. குருனாகல் 12. புத்தளம்
3. பதுளை 8. மன்னார் 13. இரத்தினபுரி
4. அம்பாந்தோட்டை 9. மாத்தளை 14. திருகோணமலை
5. கண்டி 10. மொனராகலை

2008 ஆம் ஆண்டு காலப் பகுதியில் II ஆம் கட்டத்தில் பின்வரும் மாவட்டங்களின் விவசாயிகளுக்கு மத்தியில் மேலும் 5000 அத்தகைய நீர்ப்பாசன முறைமைகள் பகிர்ந்தளிக்கப் பட்டன.

1. அம்பாறை 7. கிளிநொச்சி 13. பொலன்னறுவை
2. அனுராதபுரம் 8. குருனாகல் 14. புத்தளம்
3. பதுளை 9. மன்னார் 15. இரத்தினபுரி
4. மட்டக்களப்பு 10. மாத்தளை 16. திருகோணமலை
5. அம்பாந்தோட்டை 11. மொனராகலை 17. வவுனியா
6. யாழ்ப்பாணம் 12. முல்லைத்தீவு

 

குறிக்கோள்கள்

நீர்ப்பற்றாக்குறை நிலவுகின்ற பகுதிகளில் (உலர் வலயம் மற்றும் இடைவெப்ப வலயம்) நீர், மண், தாவரப் போஷனைகள் என்பவற்றின் வினைத்திறன் வாய்ந்த நிலையான முகாமைத்துவத்திற்கான குறைந்த ஆகுசெலவுடைய சூரியசக்திச் சொட்டு நீர்ப்பாசனம் சார்ந்த தொழில்நுட்பத்தைப் பிரபல்லியப்படுத்துதல்.

 

கருத் திட்டத்தின் பிரதான செயற்பாடு

அவுஸ்திரேலிய BP சோலா அதன் உள்நாட்டு சோலா சொலூஷன்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட் நிறுவனத்தினூடாக இந்த சூரியசக்திச் சொட்டு நீர்ப்பாசன முறைமைகளை விநியோகித்தது. இவற்றின் நிறுவுகை மற்றும் பராமரிப்பு ஆகிய விடயங்கள் இந்த சோலா சொலூஷன்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டன. கம்பனியின் தொழில்நுட்பக் குழு விவசாயிகளுக்கு இந்த முறைமைகளின் இயக்கமும் பராமரிப்பும் பற்றிய செய்துகாண்பிப்பு, பயிற்சி என்பவற்றை வழங்கியது.

இந்த சோலா சொலூஷன்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட் நிறுவனத்தின் கூட்டொத்துழைப்பில் கமத்தொழில் அமைச்சு, மாவட்ட அலுவலர்களுக்கும், விவசாய அறிவுரையாளர்களுக்கும் (வி.அ) விவசாயிகளுக்கும் இந்த சூரியசக்திச் சொட்டு நீர்ப்பாசன முறைமைகளின் இயக்கம், செயற் பாடுகள் மற்றும் மேம்பட்ட விவசாயத் தொழில்நுட்பம் என்பன தொடர்பான பயிற்சியை வழங்கி வருகின்றது.

 

விவசாயிகளுக்கான நன்மைகள்

இந்த சூரியசக்திச் சொட்டு நீர்ப்பாசன முறைமைகளை வினைத்திறன் வாய்ந்த ரீதியில் பயன் படுத்தும் விவசாயிகளுக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கும்.

  • விளைச்சல் 2-3 மடங்கு அதிகரிப்பு
  • நீர் சேமிப்பு (ஏறக்குறைய 50%)
  • உள்ளீடு, தொழிலாளர் (பசளை, எரிபொருள், களைகட்டுதல்) செலவு குறைவு
  • பருவகாலமற்ற பயிர்ச் செய்கை அறிமுகத்தின் மூலம் மரக்கறிப் பயிர்களினதும் ஏனைய வயல் பயிர்களினதும் விலை ஏற்றத்தாழ்வுகள் குறைவு
  • நீர்ப்பாசனம் செய்தல், பசளையிடுதல், களைகட்டுதல் ஆகியவற்றுப் பயன்படுத்தப் படும் கால நேர சேமிப்பு


ஒரு விவசாயி ஒரு சூரியசக்திச் சொட்டு நீர்ப்பாசன முறைமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அந்த விவசாயி பின்வரும் அடிப்படைத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

  • ஒரு உலர் வலய விவசாயியாக இருத்தல்
  • 0.5 ஏக்கருக்கு அதிகமான நிலத்திற்கு உரிமையாளராக இருத்தல்
  • ஒரு நாளைக்கு 6,000 - 7,000 லீற்றர் நீரை வழங்கக்கூடிய ஒரு கிணறு இருத்தல்
  • வங்கிகளுடனான அனுகூலத் தொடர்பும் நன்மதிப்பும் இருத்தல்
  • ஒரு புத்தாக்க விவசாயியாக இருத்தல்

BP சோலா சூரியசக்தி சொட்டு நீர்ப்பாசன முறைமைகளின் வடிவமைப்பு, உற்பத்தி, விநியோகம் மற்றும் நிறுவுகை ஆகிய விடயங்களைக் கையாளுகின்ற கருத் திட்டத்தின் தொழில்நுட்ப முகாமைத்துவ விவகாரங்களுக்குப் பொறுப்புடையதாகவிருக்கும். இந்த சூரியசக்திச் சொட்டு நீர்ப்பாசன முறைமைகள் நிறுவப்பட்டதன் பின்னர், முதல் 03 வருடங்களுக்குள் சோலா சொலூஷன்ஸ் (ப்ரைவட்) லிமிற்றட் நிறுவனத்தினால் சகல பராமரிப்புச் செயற்பாடுகளும் கவனிக்கப்படும். சூரியசக்திப் பலகையின் உத்தரவாத காலம் 25 வருடங்கள் ஆகும்.

 

கொடுப்பனவு நடைமுறை

நிறுவுகக்கான ஆரம்ப (அடிப்படை) கொடுப்பனவு
கருணை காலம் 06 மாதங்கள்

ரூ. 10,000.00 (சமுர்த்தி நன்மை பெறும் விவசாயி)

ரூ. 25,000.00 (சாதாரண விவசாயி)

மாதாந்த தவணைக்கட்டணம்

ரூ. 3,665.00 (சமுர்த்தி நன்மை பெறும் விவசாயி)

ரூ. 3,813.00 (சாதாரண விவசாயி)

தவணைக்கட்டணங்களின் எண்ணிக்கை

120 (சமுர்த்தி நன்மை பெறும் விவசாயி)

114 (சாதாரண விவசாயி)

கால வரையறை

10 வருடங்கள்

மொத்த முறைமை விலை

ரூ. 345,452.25

இந்தக் கருத்திட்டத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகின்ற விவசாயிகள் தமது பிரிவின் விவசாய விஸ்தரிப்பு உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அறிவுரையாளர்கள் அல்லது மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள், அந்தப் பகுதியை அண்மித்த கமநல சேவைகள் நிலையத்தின் பிராந்திய உத்தியோகத்தர்கள், அந்தப் பிரிவின் விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருடனும், அதே நேரம் கமத்தொழில் அமைச்சின் இயற்கை வள முகாமைத்துவப் பிரிவுடனும் (011- 2888929) தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.


Last Updated on Thursday, 18 October 2012 04:50

Last Update

13-12-2018

Get Social

Ministry of Agriculture

288,

Sri Jayawardenepura Mawatha,

Rajagiriya, Sri Lanka,

Tel: +94-11-2869553

Fax: +94-11-2868910

E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2012 The Ministry of Agriculture.

All Rights Reserved.

 Solution by: