01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


இறால்களின் இறக்குமதிக்கு நிபந்தனைகள் - அமைச்சர் பி. ஹரிஷன்

2019.10.01xxix

எதிர்காலத்தில் இறால்களை இறக்குமதி செய்யும் போது, இந்த நாட்டின் இறால்கள் உற்பத்தி அறுவடையையும் ஆராய்ந்து பார்த்து இறக்குமதி தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமத்தொழில், நீர்ப்பாசனம், கிராமிய பொருளாதார விவகாரங்கள் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் இறால்களை உற்பத்தி செய்யும் தரப்புகளின் சங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டார்கள்.

 

ஒருசில வியாபாரிகளினால் உள்நாட்டு இறால்கள் உற்பத்தியையும் மதியாது இறால்கள் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு இறால் உற்பத்தி செய்யும் தரப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அவர்கள் இதன் போது தெரிவித்தார்கள். எனவே, இறால்களை இறக்குமதி செய்யும் போது கவனமாக செயல்படுதல் வேண்டும் என்பதற்காக அமைச்சினது செயலாளரின் தலைமையில் இது தொடர்பான ஒரு தீர்மானத்தை எட்டும் பொருட்டு ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது.

 

அதே போல், மன்னார் மாவட்டத்தில் பரந்து காணப்படும் வெனமீஎனும் இறால் இனத்தை வளர்ப்பதன் மூலம் ஒரு ஏக்கரில் அமைக்கப்படும் இறால் தொட்டிகளிலிருந்து 16மெற்றிக் டொன் அளவான இறால் அறுவடை கிடைக்கும் எனவும், அந்த இறால்களை ஏற்றுமதி செய்வதால் மிகவும் அதிகளவு இலாபத்தை ஈட்டமுடியும் எனவும் இறால்கள் வளர்ப்போர் இதன் போது சுட்டிக் காட்டினார்கள்.

 

ஆகையால், புத்தளம் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள 13இறால் பண்ணைகளில் வெனமீஎனும் இறால்களின் மாதிரிகளை பரமரிப்பதற்கு தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அவர்கள் இதன் போது உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

 

தற்பொழுது இலங்கையில் இறால்களை உற்பத்தி செய்யும் 45இறால் உற்பத்தி நிலையங்கள் நிருவகிக்கப்பட்டு வருவதாகவும் மற்றும் இறால் வளர்ப்பில் பரவி வருகின்ற வைரஸ் நோய்க்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு எதிர்காலத்தில் ஆய்வுகூட வசதிகளை ஏற்பாடு செய்து வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள்.

 

ஏற்கெனவே தாய் இறால்களை இறக்குமதி செய்யும் போது காணப்படும் இறக்குமதி வரியை குறைப்பதற்கு சலுகை ஏற்பாடு செய்து வழங்கப்படும் எனவும் அமைச்சர் அவர்கள் இதன் போது தெரிவித்தார்கள்.

 

இந்தப் பேச்சுவாத்தை சந்திப்பில் அமைச்சின் செயலாளர் திரு கே.டீ.எஸ். ருவன்சந்திரகடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு பிரசன்ன கினிகே, நீரியல் வளங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு என்.பி. மதவன் ஆராச்சி ஆகியோரும் மற்றும் இறால்களை உற்பத்தி செய்யும் தரப்புகள் சங்கத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

2019.10.01xxv  2019.10.01xxvi  2019.10.01xxvii

2019.10.01xxviii   2019.10.01xxx  2019.10.01xxxi

 


Last Updated on Tuesday, 08 October 2019 07:23

Last Update

07-11-2019

Get Social

Ministry of Agriculture, Rural Economic Affairs Irrigation and Fisheries and Aquatic Resources Development

288,

Sri Jayawardenepura Mawatha,

Rajagiriya, Sri Lanka,

Tel: +94-11-2869553

Fax: +94-11-2868910

E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2019 The Ministry of Agriculture, Rural Economic Affairs , Irrigation 

and Fisheries and Aquaitc Resources Development

All Rights Reserved.

 Solution by: