01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


"சமுர்த்தி வெறுமனே ஆயிரத்து ஐந்து நூறு ரூபாவுக்கு, ஐந்து ஆயிரம் ரூபாவுக்கு மட்டுப்பட்ட ஒரு நிவாரண முத்திரை அல்ல, அதிலும் பார்க்க அதிக நன்மைகள் கிடைக்கும் ஒரு நிவாரண முத்திரை - அமைச்சர் பி. ஹரிஷன்"

2019.06.06i

 

சமுர்த்தி வெறுமனே ஆயிரத்து ஐந்து நூறு ரூபாவுக்கு, ஐந்து ஆயிரம் ரூபாவுக்கு மட்டுப்பட்ட ஒரு நிவாரண முத்திரை அல்ல, அதிலும் பார்க்க அதிக நன்மைகள் கிடைக்கும் ஒரு நிவாரண முத்திரை என கமத்தொழில், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் அனுராதபுர மேற்குத் தேர்தல் தொகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரண முத்திரைகளை வழங்கி வைத்த வேளையில் குறிப்பிட்டார்கள்.

 

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள்,

நாம் கண்டோம் சமுர்த்தி அரசியல் மயமாகியிருந்த ஒரு கால யுகத்தை. நான் சமுர்த்தி அமைச்சராக இருந்த காலத்தில் இந்த நிலைமையை மாற்றியமைத்தேன்.. இன்று, குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களுக்கு கட்சி பேதமின்றி சமுர்த்தி நிவாரணம் கிடைக்கின்றது.  

சமுர்த்தி நிவாரணம் என்பது உண்மையிலேயே வறிய குடும்பங்களுக்கு கிடைக்கின்ற ஒரு வெகுமானமாகும். சமூகப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சமுர்த்தி நன்மை பெறும் ஒரு குடும்பத்தில் ஒரு மகப்பேற்றின் போது 7500 ரூபா தொகையான ஒரு கொடுப்பவு வழங்கப்படுகின்றது. இரட்டையர்கள் பிறந்தாலும் கூட இந்தக் கொடுப்பனவு இரண்டு மடங்குகளாக வழங்கப்படுகின்றது.. அதாவது பதினைந்து ஆயிரம் ரூபா கிடைக்கும். அதே போன்று ஒரு குடும்ப அங்கத்தவர் இறந்த ஒரு குடும்பத்திற்கு ஏழு ஆயிரத்து ஐந்து நூறு ரூபா தொகையான ஒரு கொடுப்பனவு கிடைக்கின்றது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றால், நாளொன்றுக்கு 250 ரூபா வீதம் கிடைக்கின்றது.. அதே போன்று, ஒரு விவாகத்தின் போதும் ஏழு ஆயிரத்து ஐந்து நூறு ரூபா கிடைக்கின்றது. நான் சமுர்த்தி விடய அமைச்சை பொறுப்பேற்ற நேரத்தில் சிப்தொர புலமைப்பரிசில் கிடைத்தது பத்தாயிரம் பிள்ளைகளுக்கு மட்டுமே. எனினும், எந்த நாளும் பிள்ளைகள் வறுமையில் இருக்க முடியாது. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும். ஆகையால், சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசிலை ஆயிரத்து ஐந்து நூறு ரூபா வீதம் இரண்டு வருட காலத்திற்கு கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் சித்தியடைந்த இருபதாயிரம் மாணவர்களுக்கு வழங்கும் வகையில் நான் அதிகரித்தேன். உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன் இந்த எனது திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு இன்றைய அமைச்சர் தயா கமகே அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்து.

நான் சமுர்த்தி உத்தியோத்தர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கு தயாராக இருந்த போது, கடந்த 52 நாட்களில் அமைச்சர் விமல் வீரவங்ச அவர்கள் 

மதிப்பை பெற்றுக் கொள்வதற்கு முனைந்ததால் இன்று சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிர்க்கதியற்ற நிலையிலுள்ளனர்.

அரசாங்கத்தின் சம்பளங்கள் ஆணைக்குழுவினது அனுமதியின்றி, குறித்த தகவுதிறன்களுக்கு முரணாக நினைத்தபடி நியமனங்கள் வழங்கப்பட்டன. சமுர்த்தி உத்தியோகத்தர்களை நான் அரசியல் கோணத்தில் பார்க்கவில்லை. இன்றைக்கும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என்னிடம் கூறுவது என்ன என்றால் அந்த 52 நாள் காலப் பகுதியில் தம்மை விமல் வீரவங்ச அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்றுதான்.

எனினும், சமுர்த்தி போன்று, விவசாயத் துறையிலிருந்தும் நாட்டை போஷிக்கச் செய்வது எனது ஒரே குறிக்கோளாகும். வறுமையை ஒழித்து, நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு எமது கட்சிக்கு போல் எமக்கும் சிறந்த ஒரு பொறிமுறைத் திட்டம் இரு்பபதாக அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அனுராதபுர மேற்குத் தேர்தல் தொகுதியின் மஹவிலச்சிய, மத்திய நுவரகம் பிரிவு, நொச்சியாகம பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பிரிவு மட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏறக்குறைய இரண்டாயிரம் சமுர்த்தி உறுப்பினர்களுக்கு அமைச்சர் அவர்களினால் சமுர்த்தி நிவாரண முத்திரைகள் வழங்கி வைக்கப்பட்டன... இந்த நிகழ்வில் அந்தந்த பிரதேச செயலாளர் பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள் மற்றும் சமுர்த்தி நன்மை பெறுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்..

 

 

2019.06.06ii  2019.06.06iii  2019.06.06iv  2019.06.06v

 

 

 


Last Updated on Monday, 10 June 2019 10:06

Last Update

07-11-2019

Get Social

Ministry of Agriculture, Rural Economic Affairs Irrigation and Fisheries and Aquatic Resources Development

288,

Sri Jayawardenepura Mawatha,

Rajagiriya, Sri Lanka,

Tel: +94-11-2869553

Fax: +94-11-2868910

E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2019 The Ministry of Agriculture, Rural Economic Affairs , Irrigation 

and Fisheries and Aquaitc Resources Development

All Rights Reserved.

 Solution by: