01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


மகாவலி விலங்குகள் வளர்ப்பு தொழில்முயற்சிகள் கம்பனியின் ஊழியர்களுக்கு பாராட்டுக் கொடுப்பனவுகளை வழங்குதல்

2019.04.01x   2019.04.01xi

இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்ததலுக்கு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அவர்களை மீண்டும் பொது வேட்பாளராக நிறுத்துவதா - இல்லையா என்ற எந்த ஒரு பிரேரணையும் இன்னும் முன்வைக்கப்படவில்லை. பொஹட்டுக் கட்சி ஜனாதிபதி அவர்களை கொண்டுவந்து பலிகொடுத்து, நடுவில் கழுத்தறுத்து விட்டது. ஜனாதிபதி அவர்கள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சில உறுப்பினர்களிடத்தில் இருந்த நம்பிக்கை, கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தையடுத்து சற்று உடைந்துள்ளது. எம்மால் பேசிப்பார்க்க முடியும் அவ்வாறான ஒரு பிரேரணை முன்மொழியப்பட்டால் என அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் குறிப்பிட்டார்கள்.


 

அமைச்சர் அவர்கள், வரையறுக்கப்பட்ட மகாவலி விலங்குகள் வளர்ப்பு தொழில்முயற்சிகள் கம்பனியின் ஊழியர்களுக்கு பாராட்டுக் கொடுப்பனவுகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசிய வேளையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

 

மகாவலி விலங்குகள் வளர்ப்பு தொழில்முயற்சிகள் கம்பனி கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஒரு நிறுவனமாகும். இந்தக் கம்பனி அமைச்சின் விடயப் பரப்பில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் 65 இலட்சம் ரூபா நிதி வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த ஆண்டு புது வருடத்தை முன்னிட்டு, 85 ஊழியர்களுக்கு அமைச்சர் அவர்களினால் இந்தப் பாராட்டுக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த வைபவத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அவர்கள், பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

 

வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது அமைச்சர்கள் இருவரின் வரவுசெலவு தோக்கடிக்கப்பட்டமை எமது அரசாங்கத்தின் பக்கத்தினால் ஏற்பட்ட ஒரு குறைபாடாக நான் கருதுகின்றேன். 15 நாட்கள் வரை வரவுசெலவுத்திட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தது. எவரும் பாராளுமன்றத்தில் பிரிவு வாக்கெடுப்பை கோரவில்லை. ஆகையால், நாங்கள் நினைக்கவில்லை, பின்னர் எவரும் பிரிவு வாக்கெடுப்புக்காக வாக்கெடுப்பை கோருவார்கள் என்று. எனினும், இறுதிக் கட்டத்தில் ஒரு சிலர் திட்டமிட்டு வந்து, திடீரென பிரிவு வாக்கெடுப்பு வேண்டும் என கோரினர். அந்த சந்தர்ப்பத்தில், பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குறைந்தளவான எண்ணிக்கையில் இருந்தனர். வரவுசெலவுத்திட்டத்தின் போது இது ஒரு பிரச்சினையாக இருக்க போவதில்லை. எதிர்வருகின்ற வாரத்தில், இதனை ஒரு குறைநிரப்பு மதிப்பீடாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இடம்பெறுவதற்கு முன்னர், அனுமதித்துக் கொள்ள எதிர்பார்க்கின்றோம். இது இன்று - நேற்று மாத்திரம் நிகழந்த ஒன்றல்ல. இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இது மாதிரியான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் ஆட்சி காலத்தில், பிரேமதாச ஜனாதிபதி அவர்களின் ஆட்சி காலத்தில் , மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி காலத்தில் என பல சந்தர்ப்பங்களில், ஒரு சில 

அமைச்சர்களின் வரவுசெலவுத்திட்டங்கள் தோக்கடிக்கப்பட்டுள்ளன. எனினும், அதன் பின்னர் குறைநிரப்பு மதிப்பீடுகளாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆகையால் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களுக்கோ, அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களுக்கோ அவர்களின் அமைச்சுக்களில் தொடர்ந்து சேவை செய்வதற்கு பிரச்சினை ஏதும் இருக்காது. இது பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் திட்டமிட்ட ஒரு செயல் அல்ல. பின்வரிசை உறுப்பினர்ள் பலர் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்தார்கள். அதிகமான அமைச்சர்கள்தான் அன்றைய தினம் இருக்கவில்லை. பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்துள்ளனர்.

 

நாட்டினுள் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மறு புறத்தில் மழை இல்லாததால், நாட்டின் நீர் மின்னுற்பத்தியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதே போன்று, அனல் மின்னுற்பத்தி நிலையங்களையும் உரிய காலத்தில் நிர்மாணிக்காததால் எம்மால் இந்தப் பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது. எனினும், மின்வலு சக்தி அமைச்சும், மின்வலு சக்தி அமைச்சரும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள், இன்னும் 10 நாட்களின் பின்னர் இந்த மின்சார நெருக்கடிப் பிரச்சினைக்கு தீர்வுகாணுவோம் என்று. இந்த மின்சார நெருக்கடிப் பிரச்சினைக்கு முழுமையாக தீர்வுகாணுவது போல், தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் மின் வெட்டை அமுல்படுத்தாமல் நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் மின்வலு சக்தி அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்வரும் மே மாதத்தின் பின்னர், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்த நாட்டில் மின்சார நெருக்கடி உருவாகாத விதத்தில் தேவையான நடவடிக்கையை எடுப்பதாகவும் அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு எதனையும் செய்யவில்லை என ஒரு சிலர் கூறுகின்றனர். அவர்கள் வரலாற்றை மறந்து விட்டார்கள். விக்டோரியா, ரந்தெனிகல, ரன்டம்பே, கொத்மலை முதலிய நீர் மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணித்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம். அனல் மின்னுற்பத்தி நிலையங்களில் அதிகமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில். இங்கு ஒரு சிறு தாமதம் ஏற்பட்டாலும், நாட்டு மக்களை மின்சார நெருக்கடிக்கு ஆளாக்க நாம் ஒரு போதும் எதிர்பார்ப்பதில்லை’.

 

ஒரு தேசிய அரசாங்கம் பற்றி இந்த நாட்களில் பேசப்படுகின்றது. நாம் முதலில் கதைத்ததும் ஒரு தேசிய அரசாங்கத்தை பற்றித்தான்.  அது தொடர்பில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களும் மற்றும் கௌரவ பிரதமர் அவர்களும் எடுக்கும் தீர்மானத்தில்தான் அது தங்கியிருக்கின்றது. அந்த இரண்டு தலைவர்களும் எடுக்கும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் நாம் உடன்படுவோம். எனக்கு தெரிந்த அளவில், அது மாதிரி ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக எந்த விதத்திலும் உத்தியோகபூர்வமான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை. எனினும், எதிர்காலத்தில் அத்தகைய பேச்சுவார்த்தை இடம்பெறலாம். நாம் பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று’.

 

மைத்திரிபால சிறிசேன அவர்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் பொது வேட்பாளராக நிறுத்தினோம். இந்தத் தடவை ஜனாதிபதி தேர்தலுக்கு அவரை பொது வேட்பாளராக நிறுத்துவதா - இல்லையா என்ற எந்த ஒரு பிரேரணையும் இது வரை முன்வைக்கப்படவில்லை. இந்தத் தடவை ஜனாதிபதித் தேர்தலுக்கு  

வேட்பாளரை முன்னிறுத்துவது என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது பொஹட்டுக் கட்சியால். அந்தப் பொஹட்டுக் கட்சிதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஏமாற்றி, இடையில் கைவிட்டது. அதைத்தான் அந்தக் கட்சி ஜனாதிபதிக்கு செய்தது. ஆகையால், ஜனாதிபதி அவர்கள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சில உறுப்பினர்களிடத்தில் இருந்த நம்பிக்கை, கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தையடுத்து சற்று உடைந்துள்ளது. எம்மால் பேசிப்பார்க்க முடியும் அவ்வாறான ஒரு பிரேரணை முன்மொழியப்பட்டால்


 


Last Updated on Wednesday, 24 April 2019 03:34

Last Update

19-08-2019

Get Social

Ministry of Agriculture, Rural Economic Affairs Irrigation and Fisheries and Aquatic Resources Development

288,

Sri Jayawardenepura Mawatha,

Rajagiriya, Sri Lanka,

Tel: +94-11-2869553

Fax: +94-11-2868910

E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2019 The Ministry of Agriculture, Rural Economic Affairs , Irrigation 

and Fisheries and Aquaitc Resources Development

All Rights Reserved.

 Solution by: