01

   
English (UK)SinhalaSriLankaTamilIndia


"ஏப்ரல் 6/7 புதிய அரிசி பொங்கு விழா உற்சவம் கடவர தேவ கன்னவில கலவெவ கடவர தேவாலயத்தில் நடைபெறும்"

2019.03.26v

 

எந்த ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாற்றமில்லாத நாட்டிற்கு நன்மையான ஒரு விவசாய கொள்கை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்தத் தடவை புதிய அரிசி பொங்கு விழா உற்சவத்தை நடத்துவது தொடர்பாக அனுராதபுர பிரதேச அரச ஊழியர்களுடன் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

இலங்கையின் விவசாயத்தை வலுப்படுத்துவதற்கும் மற்றும் விவசாயிகளை பாதுகாப்பதற்கும் வலிமையான ஒரு தேசிய விவசாய கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அதே போன்று, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திகளில் விஷேட கவனத்தை செலுத்தி விரைவில் இந்த பயிர்ச் செய்கை கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய பயிர்களை அறுவடை செய்யும் காலத்தில், வெளிநாடுகளிலிருந்து விவசாய உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும் என அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

இந்த விவசாய கொள்கையை தயாரிக்கும் பொருட்டு கல்விமான்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கமக்காரர் அமைப்புகள் முதலிய சகல தரப்புகளிடமிருந்தும் கருத்துக்களை பெற்றுக் கொண்டு, நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவினூடாக மிகவும் வலிமையான விவசாய கொள்கையை நாட்டிற்கு அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.

 

2019.03.26vi  2019.03.26vii  2019.03.26viii


Last Updated on Monday, 01 April 2019 07:45

Last Update

27-05-2019

Get Social

Ministry of Agriculture, Rural Economic Affairs,

Livestock Development, Irrigation and Fisheries and Aquatic Resources Development

288,

Sri Jayawardenepura Mawatha,

Rajagiriya, Sri Lanka,

Tel: +94-11-2869553

Fax: +94-11-2868910

E-mail: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Copyright © 2019 The Ministry of Agriculture, Rural Economic Affiairs, livestock Development, Irrigation 

and Fisheries and Aquaitc Resources Development

All Rights Reserved.

 Solution by: